ஹெல்த்
தொடர்
Published:Updated:

மருந்தாகும் உணவு - மஞ்சள் ஊறுகாய்

மருந்தாகும் உணவு - மஞ்சள் ஊறுகாய்
பிரீமியம் ஸ்டோரி
News
மருந்தாகும் உணவு - மஞ்சள் ஊறுகாய்

உணவு - 6

மருந்தாகும் உணவு - மஞ்சள் ஊறுகாய்

றுகாயின் வேலையே, செரிமானத்துக்குத் தேவையான நொதிகளைத் தூண்டுவதுதான். அதனால்தான் உணவு வரிசையில் கடைசியாகப் பரிமாறப்படுகிறது. அறுசுவையில் மூன்று சுவைகளான புளிப்பு, உப்பு, காரம் மூன்றும் ஒருசேர கிடைத்தால்தான், செரிமானத்துக்கான நொதிகள் நன்கு தூண்டப்படும். இதுவே இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளும், செரிமான நொதிகள் தூண்டப்படுவதை மெதுவாக்கும். நம் உணவில் அதிகம் சேர்க்கப்படுபவை இவைதான் என்பதால்தான், கடைசியாக ஊறுகாயைச்  சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. அதேநேரம், செரிமானத்துக்கான நொதிகள் அதிகமாகச் சுரப்பதும் நல்லதல்ல. அதனால் உடல் உஷ்ணம் தொடர்பான பல தொந்தரவுகள் ஏற்படக்கூடும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும்போது வயிற்றுப்புண், ரத்தம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, மிகக் குறைந்த அளவில் ஊறுகாயை எடுத்துக்கொள்ளவும்.

மருந்தாகும் உணவு - மஞ்சள் ஊறுகாய்பலன்கள்:

மஞ்சளின் சிறப்பு, அதிலுள்ள 'குர்குமின்' என்ற வேதிப்பொருள்தான். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல்கொண்டது குர்குமின். உணவு மூலமாக உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், மஞ்சள் அதைத் தடுத்துவிடும். அந்த வகையில், இந்த மஞ்சள் ஊறுகாய் உடலுக்கு மிகவும் நல்லது. பொதுவாக சர்க்கரைநோய் இருப்பவர்களை, `ஊறுகாய் எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால், மஞ்சள் கிழங்கு மற்றும் நெல்லிக்காய் ஊறுகாயை அவர்களும் தாராளமாகப் பயன்படுத்தலாம். 

மருந்தாகும் உணவு - மஞ்சள் ஊறுகாய்

தேவையானவை:

மஞ்சள் கிழங்கு    :    100 கிராம்

பச்சைமிளகாய்    :    2

எலுமிச்சைப் பழம்    :    4 சிறியது

உப்பு    :    முக்கால் டீஸ்பூன் (தேவைக்கேற்ப)

மருந்தாகும் உணவு - மஞ்சள் ஊறுகாய்

செய்முறை:

மஞ்சளின் தோலை சீவி மெல்லியத் துண்டுகளாக வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, கொட்டைகளை நீக்கிவிடவும். ஒரு கிண்ணத்தில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு நாள் ஊறியவுடன், எடுத்து உபயோகிக்கலாம். இந்த ஊறுகாயை அறை வெப்பநிலையில் நான்கு நாள்கள்வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். கெட்டுப் போகாது. இந்த ஊறுகாயின் சுவை ‘மாங்காய் இஞ்சி ஊறுகாய்’ போலவே இருக்கும்.

மருந்தாகும் உணவு - மஞ்சள் ஊறுகாய்

ஆ.சாந்தி கணேஷ், ஜெ.நிவேதா - படங்கள்: தே.அசோக் குமார்