Published:Updated:

ஆரோக்கிய காலண்டர்

ஆரோக்கிய காலண்டர்
பிரீமியம் ஸ்டோரி
ஆரோக்கிய காலண்டர்

ஹெல்த்

ஆரோக்கிய காலண்டர்

ஹெல்த்

Published:Updated:
ஆரோக்கிய காலண்டர்
பிரீமியம் ஸ்டோரி
ஆரோக்கிய காலண்டர்

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி

ஆரோக்கிய காலண்டர்

ந்தியர்களை அச்சுறுத்தும் பெரும் பிரச்னையாக மாறியிருக்கிறது உடல் பருமன். இந்த ஆரோக்கிய காலண்டரைப் பின்பற்றினால் பல உடல்நலக் கோளாறுகளை எளிதாகத் தவிர்த்துவிடலாம்.

1. வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரைக்கு மாறுங்கள். கலோரியின் அளவும் கூடாது; ரத்தச் சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

2.‘ரோல்டு’ (Rolled) ஓட்ஸை வாரம் இருமுறை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். பால், நட்ஸ், உலர் பழங்களைச் சேர்த்து சரிவிகித உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

3. முதல்நாள் இரவு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை 200 மி.லி தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் நீரை மட்டும் வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரோக்கிய காலண்டர்

4. தினமும் சுமார் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்ய வேண்டும்.

5. கோதுமை பிரெட் உடன் ஜாமுக்கு பதிலாக நிலக்கடலை பட்டர் சேர்த்துச் சாப்பிடலாம். நிலக்கடலையில் புரதச்சத்து அதிகமாக உள்ளது.

ஆரோக்கிய காலண்டர்6. பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்கு பதில் சிவப்பரிசி அல்லது கைக்குத்தல் அரிசி, சிறுதானியங்களைப் பயன்படுத்தலாம்.

7. சமையலுக்கான எண்ணெயை 10 நாள்களுக்கு ஒருமுறை மாற்றவும். கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் மாற்றி மாற்றிச் சமைக்கவும்.

ஆரோக்கிய காலண்டர்

8. பால் சேர்த்த டீக்கு பதில் கிரீன் டீ, லெமன் டீ, லவங்கப்பட்டை டீயைப் பருகலாம்.

9. 15 நிமிடங்களுக்கு ஒரு முறை 150 முதல் 200 மி.லி தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு சிட்டிகை பட்டைத்தூள் கலந்து குடிக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

10.
பசியெடுக்கும்போது பிஸ்தா, பாதாம், வால்நட், நிலக்கடலை கலந்த கலவையைச் சாப்பிடுங்கள். இது உடலில் மக்னீசியம் குறைபாட்டைப் போக்கும்.

11. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள், விரைவில் நோய்க்கு நேரம் ஒதுக்கவேண்டிய நிலை ஏற்படும்.

12. பால் சேர்க்காத காபி அருந்தலாம். பால் சேர்த்த டீ, காபியை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே அருந்த வேண்டும்.

13.
ஆரோக்கியமில்லாத நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்துவிட்டு, வறுத்த நிலக்கடலை,  கொண்டைக்கடலை, நட்ஸ், பச்சைப்பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

14.
வாய் முதல் ஆசனவாய் வரையிலான பாதை ஆரோக்கியமாக இருக்க புரோபயாடிக்ஸ் நிறைந்த தயிர், மோர், யோகர்ட், நட்ஸ், புரோக்கோலி, கேரட், பார்லி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

15.
வால்நட் பருப்பை ‘இயற்கையான தூக்க மாத்திரை’ என்பார்கள். தினமும் தூங்கச்செல்வதற்கு முன் ஒரு வால்நட் பருப்பு சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும்.

16. இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை தூங்குவதற்கு சரியான நேரம். 8 மணி நேரத் தூக்கம் இல்லையென்றால், உடல் பருமன் ஏற்படும்.

ஆரோக்கிய காலண்டர்

17. காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது.

18. இட்லி, தோசை, ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது  சிறிது வெந்தயம் சேர்த்து அரைக்க வேண்டும். இது செரிமானத்துக்கு உதவும்.

19. டயட் இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் ஒருவேளை மட்டும் தங்களுக்குப் பிடித்த உணவைச் சாப்பிடலாம். அதை ‘வெகுமதி தினம்’ (Reward Day) என்பார்கள்.

20. பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உதவும், புற்றுநோய்க்கான வாய்ப்பு குறையும்.

21. பல மணி நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்காமல், நின்றுகொண்டே வேலைசெய்வது, அடிக்கடி உலவுவது என சுறுசுறுப்பாக இருப்பது நல்லது.

22. மைதா, பாலிஷ் செய்த அரிசி போன்ற  கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கிய காலண்டர்

23. எந்த உணவையும் பொரித்துச் சாப்பிடும்போது, அது கெட்ட கொழுப்பாக மாறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே, பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

24. உணவில் மஞ்சள்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற மூலிகை மற்றும் நறுமணப் பொருள்களை அதிகம் சேர்ப்பது உடல் எடையைக் குறைக்க உதவும்.

25. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரைநோய், கல்லீரல், சிறுநீரகம், கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

26. சரிவிகித உணவு, தினமும் 45 நிமிட உடற்பயிற்சியைப் பின்பற்றினால், தீவிர நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறையும்.

27. சாப்பிடுவதற்கு சிறிய தட்டு, கிண்ணங்களைப் பயன்படுத்தினால் சாப்பிடும் அளவு குறையும். உடல் பருமனையும்  தவிர்க்கலாம்.

28. நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகே விளையும், இயற்கையாக விளைவிக்கப்பட்ட, உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

29. இணையத்தில் கிடைக்கும் எந்த உணவுமுறையையும் பின்பற்றாதீர்கள். டயட்டீஷியனின் ஆலோசனையுடன் உங்களுக்கான  உணவுமுறையைப் பின்பற்றுங்கள்.

30. எந்த உணவுப்பொருளையும் கடைகளில் வாங்குவதற்கு முன் அதில் குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்து விவரங்கள், தயாரிப்புத் தேதியை சரிபார்க்க வேண்டும்.

31. உடற்பயிற்சி என்பது ராஜா, ஊட்டச்சத்துள்ள உணவு என்பது ராணி; ராஜாவும் ராணியும் உங்கள் உடல் என்னும் தேசத்தை ஆளட்டும்.

ஜெனி ஃப்ரீடா