`பேலியோ’, `கீட்டோ’, `வீகன்’, `ரெயின்போ’... எனப் பல்வேறு பெயர்களிலிருக்கும் உணவு முறைகளைப் பலரும் பின்பற்றிவருகிறார்கள். ஆனால், `இவை அனைத்தையும்விட `பேலன்ஸ்டு டயட்’ முறைதான் மிகச் சிறந்தது’ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். `காரணம், குறிப்பிட்ட உணவு முறையைப் பின்பற்றத் தொடங்கிய சில மாதங்களில் உடல் எடை சட்டென ஏறுவதும் இறங்குவதும் நிகழும். இத்தகைய உடனடி மாற்றங்கள் ஆரோக்கியமானவையல்ல. தவறான டயட் முறைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் குறித்து விளக்குகிறார் டயட்டீஷியன் ஜெயந்தி.

சோர்வு

சில உணவு முறைகளில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்புச்சத்து எனக் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சத்தை மட்டும் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படும். இதனால், உடல் இயக்கத்துக்குத் தேவையான ஆற்றல், முழுமையாகக் கிடைக்காமல் போகலாம். இது ரத்தச் சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி, உடலை எளிதில் சோர்வடையச் செய்துவிடும்.

பித்தப்பைக் கட்டி

கொழுப்புச்சத்தை முழுமையாகத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிற உணவு முறைகளும் உண்டு. இதனால், கொழுப்புச்சத்தை உட்கிரகிக்கும் பணி நடைபெறும் இடமான பித்தப்பையின் செயல்திறன் பாதிப்படையும். ஒரு கட்டத்தில், பித்தநீர் சுரப்பதில் சிக்கல் ஏற்பட்டு, பித்தப்பைக் கட்டி உருவாகலாம்.

மனநிலை மாற்றங்கள்

உணவின் அளவு மற்றும் சுவையில் மாற்றங்கள் ஏற்படும்போது, குறிப்பிட்ட ஒரு சுவையின் மீது தேடல் அதிகரிக்கும். இது, மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். சுவையின் மீதான தூண்டுதலைக் கட்டுப்படுத்த முடியாமல், சிலர் அந்தச் சுவையுள்ள உணவைச் சாப்பிட்டுவிடுவார்கள். இதனால் ரத்தச் சர்க்கரை அளவிலும் மனநிலையிலும் தொடர்ச்சியாக மாற்றங்கள் ஏற்படும்.

வளர்சிதை மாற்றத்தில் சிக்கல்

சீரான வளர்சிதை மாற்றத்துக்கும் உடல் இயக்கத்துக்கும் கலோரி அவசியம். அவை குறைவாகக் கிடைக்கும்போது, உடலில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் நல்ல கொழுப்பிலிருந்து கலோரிகள் எடுத்துக்கொள்ளப்படும். பெரும்பாலான உணவு முறைகளில் கலோரிகளைத் தவிர்க்கவே அறிவுறுத்தப்படுகிறது. முற்றிலுமாக கலோரிகளைத் தவிர்த்தால், சேமித்துவைக்கப்படும் அனைத்துச் சத்துகளும் உபயோகப்படுத்தப்பட்டு, உடலில் ஆற்றல் குறையத் தொடங்கும். இதனால், வளர்சிதை மாற்றம் தாமதமாகி, பிரச்னைகள் ஏற்படும்.

சருமம் தளர்வடைதல்

உடல் எடை அதிகரிக்கும்போது சருமம் விரிவடையும்; எடை குறைந்தால், சருமம் சுருங்கும். சருமம் தொடர்பான இத்தகைய மாற்றங்கள், தோள்பட்டையின் மேற்பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில்தான் அதிகம் நடக்கும். எடை குறையும் வேகத்தைப் பொறுத்தே சருமத்தின் சுருங்கும் திறன் அமையும். பொருந்தாத உணவு முறைகளைப் பின்பற்றி வேகமாக எடையைக் குறைக்கும்போது முதிர்ச்சித் தோற்றம் ஏற்படலாம்.

ஜெ.நிவேதா