Published:Updated:

ஹெல்த் டிப்ஸ்

ஹெல்த் டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த் டிப்ஸ்

ஹெல்த் டிப்ஸ்

ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

துவரை

து
வரையில் வைட்டமின், பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீஸ், சோடியம், கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்துகள் இருக்கின்றன. பி1, பி9 பி2, பி3, பி5, பி6, சி, கே வைட்டமின்கள் மற்றும் கோலைன் சத்தும் துவரையில் அதிகம். மண்ணீரல், வயிறு மற்றும் கணையம் சார்ந்த பிரச்னைகளும், ரத்த அழுத்தம், ரத்தக்கட்டு பிரச்னைகளும் உள்ளவர்கள் அடிக்கடி துவரை சாப்பிடலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹெல்த் டிப்ஸ்

உளுந்து

உளுந்தில் வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, பி9 மற்றும் மிகக் குறைந்த அளவு வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், மாங்கனீஸ், செலினியம், கால்சியம், பொட்டாசியம் ஆகியவை உள்ளன. அதிக நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் ஆகியவையும் உள்ளன. இந்தச் சத்துகள் உடல் திறனை அதிகரிக்க உதவுகின்றன.

ஹெல்த் டிப்ஸ்

மொச்சைப் பயறு

மொச்சையில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ என நிறைய வைட்டமின் சத்துகள் இருக்கின்றன. ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, இதயம் சார்ந்த கோளாறுகளை குணமாக்கக்கூடியது மொச்சை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

ஹெல்த் டிப்ஸ்

கொள்ளு

கொ
ள்ளினில், கால்சியம், பாஸ்பரஸ், அமினோ அமிலம் மற்றும் இரும்புச்சத்துகள் இருக்கின்றன. சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கு கொள்ளு நல்லது. உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து, உடலை இறுக்கும் தன்மைகொண்டது. இதை வேகவைத்து எடுத்த நீரைக் குடிப்பதன் மூலம் காய்ச்சல் மற்றும் சளியைக் கட்டுப்படுத்தலாம்.

ஹெல்த் டிப்ஸ்

கோதுமை

கோ
துமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசின் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலை குணப்படுத்தும். இதிலுள்ள இரும்பு, ஃபோலேட், வைட்டமின் பி மற்றும் ஈ சத்துகள் செரடோனின் உற்பத்தியைத் தூண்டுபவை. அதனால் ஆற்றல் அதிகரிக்கும். மனநலம் மேம்படும்.

ஹெல்த் டிப்ஸ்

பாசிப்பயறு

வை
ட்டமின் மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்தது பாசிப்பயறு. உடல் எடை குறைக்க, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மற்றும் சருமம் சார்ந்த பிரச்னைகளிலிருந்து விடுபட பாசிப்பயறு உதவும். கர்ப்பிணிகளுக்கு வேகவைத்த பாசிப்பயறு கொடுத்தால், எளிதில் செரிமானமாகும். பாசிப்பயறு மாவை தலைக்குத் தேய்த்துக் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

தொகுப்பு: துரை.நாகராஜன்