Election bannerElection banner
Published:Updated:

`அட... இட்லில இவ்ளோ விஷயம் இருக்கா?' - வழிகாட்டும் அவள் விகடன் வெபினார்!

இட்லி ரகசியங்கள் - அவள் விகடன் வெபினார்
இட்லி ரகசியங்கள் - அவள் விகடன் வெபினார்

இட்லி பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன.

தமிழர்களின் பாரம்பர்ய உணவில் முதலிடம் இட்லிக்குத்தான். பண்டிகை நாளாக இருந்தாலும், வீட்டு விசேஷங்களானாலும், வார நாள்களானாலும் தட்டிலும் இலையிலும் முதல் மரியாதை இட்லிக்குத்தான். வயிற்றைத் தொந்தரவு செய்யாத எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுவது இட்லிதான்.

Idli
Idli
Image by mcthrissur from Pixabay

இத்தகைய பண்புகள் நிறைந்த இட்லியை எல்லோராலும் சிறந்த தரத்தில் செய்துவிட முடியாது. `இதென்ன இட்லியா... அணுகுண்டா?', `இந்த இட்லியைத் தூக்கி அடிச்சா மண்ட உடைஞ்சிடும் போலயே' என்பன போன்ற டயலாக்குகள் அடிக்கடி காதில் விழும். அதற்கு, `போன வாரம் நல்லாத்தான் வந்துச்சு... உளுந்து சரியில்ல' என நமக்கு நாமே சமாதானம் செய்துகொள்வோம்.

ஆனால், இட்லி பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. உலக இட்லி தினத்தை முன்னிட்டு அவள் விகடன் `இட்லி ரகசியங்கள் - அறிந்ததும் அறியாததும்!' என்ற கட்டணமில்லா வெபினாரை மார்ச் 30-ம் தேதி ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் மாலை 4 முதல் 5 மணி வரை நிகழ்வு நடைபெறும். இட்லி எக்ஸ்பெர்ட் மு.இனியவன் நிகழ்ச்சியில் பங்கேற்று விளக்கங்களை அளிப்பார்.

'இட்லி' இனியவன்
'இட்லி' இனியவன்

1997-ம் ஆண்டு முதல் இட்லி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மு.இனியவன். பிரபலமானவர்களின் திருமணக்கூடங்களில் இனியவனின் இட்லிக்கு எனத் தனி இடம் உண்டு. காலத்துக்கேற்றாற்போல, சாக்லேட் இட்லி, பீட்ரூட் இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி, சிறுதானிய இட்லி என விதவிதமான இட்லிகளை அறிமுகப்படுத்தியவர்.

2,547 வகையான இட்லிகளைச் செய்து உலக சாதனைப் புத்தகம், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். 100 கிலோ எடையில் இட்லி, அப்துல் கலாம், காமராஜர், அன்னை தெரசா உருவங்களில் இட்லி செய்து சாதனை படைத்தவர்.

இந்த நிகழ்வில் விதவிதமான வடிவங்களில், சுவைகளில் இட்லி செய்வது எப்படி, சிறுதானிய இட்லி வகைகள், பூப்போல இட்லி தயாரிக்க டிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். பல வகையான இட்லி வகைகளையும் காட்சிப்படுத்தவிருக்கிறார். வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.

இட்லி ரகசியங்கள் - வெபினார்
இட்லி ரகசியங்கள் - வெபினார்

இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு