Published:Updated:

`இட்லி, இடியாப்பம் ஓகே.. ராகி, கம்பு பெஸ்ட்.. வெண்பொங்கல் வேண்டாமே' - பிரேக் ஃபாஸ்ட் டிப்ஸ்!

வெண்பொங்கல்
வெண்பொங்கல்

வெண்பொங்கல் சாப்பிட்டதும் தூக்க உணர்வு வருவது ஏன்... உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விரிவான விளக்கமளிக்கிறார், ஊட்டச்சத்து ஆலோசகர் ராஜேஸ்வரி.

தாய்மார்கள், சில வகுப்பாசிரியர்கள், இளையராஜா... இவர்களுக்கு அடுத்தபடியாக நம்மைத் தாலாட்டுவது, வெண்பொங்கல்தான். ஈஸ்ட்மென் கலர், டால்பி, 3டி, 7டி என அதிரடியாய் மாறிவருகிற 75 ஆண்டுக்காலத் தமிழ்சினிமா வரலாற்றில், ஷூட்டிங் ஸ்பாட் பிரேக் ஃபாஸ்ட் மட்டும் இன்னமும் அதே வெண்பொங்கல். தைப்பொங்கல் கொண்டாட்டம் கூட ஒவ்வொரு காலத்திலும் ட்ரெண்டுக்கு ஏற்றாற்போல் மாறுகிறது. ஆனால், எல்லாக் காலத்திலும் நின்று நிலைத்துக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது, வெண்பொங்கல் சாம்ராஜ்ஜியம்!

Vikatan
வெண்பொங்கல்
வெண்பொங்கல்
காரணம், வெண்பொங்கல் என்ற உணவில் இல்லை. அதில் சேர்க்கப்படுகிற பொருள்களில்தான் பிரச்னை.
ராஜேஸ்வரி, ஊட்டச்சத்து ஆலோசகர்

சரி, விஷயத்துக்கு வருவோம். வெண்பொங்கல் சாப்பிட்டதும் தூக்க உணர்வு வருவது ஏன்... காலையில் ஹெவியாய் வெண்பொங்கல்.. சரியா... என்பதெல்லாம் நம்மிடம் உள்ள கேள்விகள். "உண்மையில் வெண்பொங்கலையோ அதைச் சாப்பிட்டவரையோ குற்றம் சொல்லக்கூடாது. ஏனென்றால், காரணம் வெண்பொங்கல் என்ற உணவில் இல்லை. அதில் சேர்க்கப்படுகிற பொருள்களில்தான் பிரச்னை..." என்று, இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் ராஜேஸ்வரி.

"இதை, அடிப்படையிலிருந்து பேசுவோம். எப்போதும், சாப்பிட வேண்டுமே என்பதற்காகச் சாப்பிடக் கூடாது. உணவு உட்கொள்வதில் தெளிவு இருக்க வேண்டும். நம் வயது என்ன, என்ன வேலை செய்யப்போகிறோம், எந்த வேளையில் என்ன உணவு எடுத்துக்கொள்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். அதைச் சரியாகச் செய்தால்தான் நமது பணியும், நமது உடலின் பணியும் சரியாக நடக்கும்.

மூளையில் ஏற்படுகிற இந்த அயர்ச்சிதான் நம்மை தூக்கத்துக்கு இட்டுச் செல்வது.
ராஜேஸ்வரி, ஊட்டச்சத்து ஆலோசகர்
வெண்பொங்கல்
வெண்பொங்கல்
வாக்கிங்... பழச்சாறு... கல் உப்பு! - ‘நானோலைஃப்’ அபயகுமார்

மூளைக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய அளவைத் தாண்டி கொஞ்சம் கூடுதலாக ஆக்சிஜன் தேவைப்படும். அந்தச் சமயங்களில் அதிகப்படியான காற்றை உள்ளிழுத்துக் கொள்வதற்கான இயற்கை ஏற்பாடுதான் கொட்டாவி. கொட்டாவி என்பது தூக்கத்துக்கான அறிகுறியல்ல, அயர்ச்சிக்கான அறிகுறி. மூளையில் ஏற்படுகிற இந்த அயர்ச்சிதான் நம்மை தூக்கத்துக்கு இட்டுச் செல்வது.

வெண்பொங்கலில் சேர்க்கப்படுகிற பருப்பு, மிளகு எல்லாமே ஆரோக்கியமானவைதான். ஆனால், அதிகம் நெய்யும் வனஸ்பதியும் சேர்க்கப்படுவதில்தான் சிக்கலே. கொழுப்பு நிறைந்த இந்த நெய்யையும் வனஸ்பதியையும் சேர்த்துப் பொங்கல் சாப்பிடுகிறோம். இவை செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. செரிமானத்துக்கு ஆக்சிஜன் தேவை. இதனால், மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்சிஜன் கூடுதலாய் இரைப்பையில் சேர்கிறது. மூளைக்கான ஆக்சிஜன் குறையும்போது, ஏற்கெனவே சொன்ன அந்தக் கொட்டாவியும், அதன் தொடர்ச்சியாக தூக்கக் கலக்கமும் ஏற்படும்.

காலை மெனுவில் வெண்பொங்கல் தவிர்க்க வேண்டும். எடுத்துக்கொள்கிற உணவுக்கேற்ப உடல் உழைப்பு அவசியம்.
ராஜேஸ்வரி, ஊட்டச்சத்து ஆலோசகர்
ஊட்டச்சத்து ஆலோசகர் ராஜேஸ்வரி
ஊட்டச்சத்து ஆலோசகர் ராஜேஸ்வரி

வெண்பொங்கல் சாப்பிட்டால் தூக்கக் கலக்கம் வருவது ஒருபுறம் என்றால், அதிகக் கொழுப்பை காலையில் முதல் உணவாகச் சாப்பிடுவது உடலை பாதிக்கும். இரவு முழுவதும் தூங்கியதில் உடல் சோர்வு நீங்கியிருக்கும். கொழுப்பு உணவைச் சாப்பிடுவதால் மீண்டும் சோர்வு, அயர்ச்சி வரும். எனவே, காலை மெனுவில் வெண்பொங்கல் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் அவற்றை மதிய நேரத்தில் உட்கொள்ளலாம். அதேபோல எடுத்துக்கொள்கிற உணவுக்கேற்ப உடல் உழைப்பும் அவசியம்.

குழந்தைகளுக்கு முதல்முறையாக ஓர் உணவை ஊட்டுவதற்கு மதிய வேளைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
ராஜேஸ்வரி, ஊட்டச்சத்து ஆலோசகர்

இரவிலும் கட்டாயமாக அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இட்லி, இடியாப்பம் போன்று ஆவியில் வேகவைத்த உணவுகள் எளிதில் செரிமானமாகும். இவற்றை காலை மற்றும் இரவுகளில் எடுத்துக் கொள்ளலாம். காலையில் ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகள் மிகவும் சிறந்தவை. நார்ச்சத்து கொண்ட கீரை, காய்கறிகள் ஆகியவற்றை மதிய வேளைகளில் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வெண்பொங்கல்
வெண்பொங்கல்
ஹெல்த் இஸ் வெல்த்: ‘‘ஆட்டுக்கறி, முட்டைக்கு நோ... மீனுக்கு யெஸ்!’’

இந்த உணவுமுறை எல்லா வயதினருக்கும் பொருந்தும். ஆனாலும் குழந்தைகளுக்கு முதல்முறையாக ஓர் உணவை ஊட்டுவதற்கு மதிய வேளைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் செரிமானக் கோளாறுகளால் குழந்தை அவஸ்தைப்படுவதைத் தவிர்க்க முடியும். காலையில் எழுந்ததும் பற்கள் துலக்குவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் நன்றாக நீர் அருந்த வேண்டும்; வெந்நீராக அருந்துதல் நலம். இதனால், வயிறு சுத்தமாவதோடு அன்றைய உணவுகளை வாங்கிக் கொள்வதற்கும் வயிறு தயாராகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு