Published:Updated:

அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்!

கண்
பிரீமியம் ஸ்டோரி
கண்

அந்த வகையில் கண்களின் ஆரோக்கியத்துக்கான ரெசிப்பிகளைச் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்!

அந்த வகையில் கண்களின் ஆரோக்கியத்துக்கான ரெசிப்பிகளைச் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

Published:Updated:
கண்
பிரீமியம் ஸ்டோரி
கண்
ப்போதெல்லாம் அனைவருக்கும் ஸ்ட்ரெஸ் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஓய்வின்றி தொடர்ந்து மொபைல் போன்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

இவற்றால் கண்களில் கருவளையம் ஏற்படுகிறது. ஓய்வின்மையும், தூக்கம் போதாமையும் கண்களை வெகுவாகப் பாதிக்கின்றன. எட்டு மணிநேரத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். தினசரி உடற்பயிற்சி கட்டாயம். வெளியில் செல்லும்போது கண்களைப் பாதுகாத்துக்கொள்ள கண்ணாடி அணிந்துகொள்ளுதல் நல்லது. கண்களைப் பாதுகாப்பதற்கான டயட்டை எடுத்துக்கொள்வது அவசியம்.

அழகுக்கலை நிபுணர் வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பச்சைக் காய்கறிகள், பருப்புகள், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் நிறைந்த பழ வகைகள், மீன்கள், மீன் எண்ணெய், வெண்ணெய் ஆகியவை கண்களுக்கு மிகவும் நல்லது. பீட்டா கரோட்டின் உள்ள கேரட், கேன்டலூப், ஆப்ரிகாட் ஆகியவற்றில் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. சர்க்கரைக்கு மாற்று தேன்; உடலுக்கு நல்லது. கொழுப்பு குறைந்த பால், யோகர்ட் எல்லாமே ஆரோக்கியம் தரக்கூடியது. அந்த வகையில் கண்களின் ஆரோக்கியத்துக்கான ரெசிப்பிகளைச் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

க்ரீம் ஆஃப் வெஜிடபிள் சூப்

தேவையானவை:

 • கேரட் - 100 கிராம்

 • காலிஃப்ளவர் - 100 கிராம்

 • பீன்ஸ் - 100 கிராம்

 • பச்சைப்பட்டாணி - 100 கிராம்

 • சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்

 • பால் - இரண்டரை கப்

 • வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • கறுப்பு மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

 • தண்ணீர் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

க்ரீம் ஆஃப் வெஜிடபிள் சூப்
க்ரீம் ஆஃப் வெஜிடபிள் சூப்

பீன்ஸையும் கேரட்டையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். காலிஃப்ளவரைச் சிறிய பூக்களாக நறுக்கியெடுத்துக்கொள்ளவும். ஃபிரெஷ்ஷான பச்சைப்பட்டாணிகளை எடுத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நறுக்கியெடுத்துக்கொள்ளவும். வாணலியில் வெண்ணெய்விட்டு சூடாக்கி, உருகியதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, அது பொன்னிறமாகும்வரை வதக்கவும். எல்லா காய்கறிகளையும் போட்டு முக்கால் பதத்துக்கு வேகவிட வேண்டும். சோள மாவைத் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக்கிக்கொள்ளவும். காய்கறிகள் வெந்ததும் சோள பேஸ்ட்டைக் காய்கறிகளோடு கலந்துகொள்ளலாம். பிறகு, அதில் கொஞ்சம் கொஞ்சமாய் பாலைச் சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் கிளறிவிட்டு அடுப்பை `சிம்’மில் வைக்கவும். கொஞ்சம் கெட்டியாகும் வரை `சிம்’மில் வைத்திருக்கவும். ரொம்பவும் கெட்டியாகிவிட்டால் அரை கப் பால் சேர்க்கலாம். இதை சூடாகப் பரிமாற வேண்டும். இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்கள் கண்களுக்கு நன்மை செய்வன.

காலிஃப்ளவரில் ஒமேகா 3 கொழுப்புச் சத்தும் வைட்டமின் கே சத்தும் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பெற உதவும்.

வெள்ளரி புதினா கூல் சூப்

தேவையானவை:

 • பெரிய வெள்ளரி - ஒன்று

 • பூண்டு - 2 பல்

 • புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு

 • தயிர் அல்லது யோகர்ட் - ஒரு கப்

 • தண்ணீர் - கால் கப்

 • எலுமிச்சைப்பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்)

 • பச்சை மிளகாய் - பாதியளவு

 • இஞ்சி - சிறிதளவு

 • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வெள்ளரியின் மேல் தோலைச் சீவி, சிறிதாக நறுக்கி பூண்டு, புதினா, தயிர், பச்சை மிளகாய், இஞ்சி, தண்ணீர் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து அதில் உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். ஃபிரிட்ஜில் வைத்து, சாப்பிடும்போது எடுத்து ஒரு கிண்ணத்திலிட்டு மேலே புதினாவை வைத்து ஓரத்தில் எலுமிச்சைத்துண்டை வைக்கலாம்.

வெள்ளரி புதினா கூல் சூப்
வெள்ளரி புதினா கூல் சூப்

வெள்ளரி கண்களுக்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காயைச் சாப்பிடும்போதும், வெள்ளரிக்காய் துண்டுகளைக் கண்களுக்கு வெளியே வைக்கும்போதும் கண்களுக்குப் பயனளிக்கிறது. கண்களில் கருவளையம் வராமல் காக்கிறது.

ஆந்திர உணவில் பெரும்பாலும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி இடம்பெறும்

கீரை கட்லெட்

தேவையானவை:

 • உருளைக்கிழங்கு - ஒன்று (பெரியது)

 • பச்சைப் பட்டாணி - 100 கிராம்

 • கேரட் - 100 கிராம்

 • பீன்ஸ் - 100 கிராம்

 • பாலக்கீரை அல்லது ஏதாவது கீரை - ஒரு கைப்பிடியளவு

 • கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்

 • பிரெட் கிரம்ஸ் - 200 கிராம்

 • அரிசி மாவு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

 • இஞ்சி - சிறிதளவு

 • பச்சை மிளகாய் - ஒன்று

 • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 • சமையல் எண்ணெய் - 4 டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

காய்கறிகள், கீரை, பச்சைப் பட்டாணியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதில் கரம் மசாலாத்தூள் கலந்துகொள்ளவும். 50 கிராம் பிரெட் கிரம்ஸை இதில் கலக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சிறிதாக நறுக்கிச் சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் மொத்தமாகச் சேர்த்து, அதில் உப்பு போட்டு உருண்டை பிடித்து, பிறகு கட்லெட்டாகத் தட்டிக்கொள்ளவும்.

கீரை கட்லெட்
கீரை கட்லெட்

தவாவை சூடாக்கி சமையல் எண்ணெயை விட்டுக் கொள்ளவும். ஒரு கட்லெட்டுக்கு கால் டீஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டுக்கொள்ளலாம். மீதமுள்ள பிரெட் கிரம்ஸ், அரிசி மாவு பேஸ்ட் இரண்டையும் தனித்தனியாக வைத்துக்கொள்ளவும். முதலில் பேஸ்ட்டிலும் அடுத்து பிரெட் கிரம்ஸிலும் கட்லெட்டின் இரண்டு பக்கங்களையும் தோய்த்தெடுத்து பிறகு கட்லெட்டை வாணலியில் வைக்கவும். நன்கு பொன்னிறமாகச் சுட்டெடுத்துக் கொண்டபின் சூடாக அவற்றைப் பரிமாறவும்.

கண்
கண்

இதை ஒரு ஸ்டார்ட்டர் டிஷ்ஷாக எடுத்துக்கொள்ளலாம். கேரட், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கீரை ஆகியவை கண்களுக்கு நல்லது.

சமையற்கலையில் பட்டாணி ஒருவகை காயாகவே பயன்படுத்தப்பட்டாலும், தாவரவியலில் பட்டாணியை பழமாகவே கருதுகின்றனர்

ஹோல் வீட் ஃப்ளார்/ஆட்டா கோதுமைச் சப்பாத்தி

தேவையானவை:

 • கோதுமை மாவு - 2 கப்

 • சுடுநீர் - தேவையான அளவு

 • உப்பு - அரை டீஸ்பூன்

 • நெய் - ஒரு டீஸ்பூன்

ஹோல் வீட் ஃப்ளார்/ஆட்டா கோதுமைச் சப்பாத்தி
ஹோல் வீட் ஃப்ளார்/ஆட்டா கோதுமைச் சப்பாத்தி

செய்முறை:

பாத்திரத்தில் கோதுமை மாவைப்போட்டு தண்ணீர்விட்டு உப்பும் நெய்யும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து சாஃப்ட் உருண்டை செய்துகொள்ளவும். அதை 20 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும். மாவு சேர்த்து உருட்டி ரோல் செய்து நான் ஸ்டிக் தவாவில் நெய் விட்டுச் சப்பாத்தியை ஒவ்வொன்றாகப் போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிடவும். வெந்ததும் சப்பாத்திகளை மிருதுவான வெள்ளைத் துணியில் வைத்துமூடி வைத்து ஹாட் பாக்ஸில் வைத்துவிட்டால், சப்பாத்தி இறுகாமல் மிருதுவாகவே இருக்கும். உணவில் கோதுமைச் சப்பாத்தி சேர்த்துக்கொள்வது நல்லது.

சம்பா கோதுமை நீரிழிவாளர்களுக்கு சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

சீட் ஸ்நாக்ஸ்

தேவையானவை:

 • சூரியகாந்தி விதைகள் - 5 கிராம்

 • பூசணி விதைகள் - 5 கிராம்

 • ஓட்ஸ் - 5 கிராம்

 • கறுப்பு உப்பு - கால் டீஸ்பூன்

சீட் ஸ்நாக்ஸ்
சீட் ஸ்நாக்ஸ்

செய்முறை:

சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஓட்ஸ் மூன்றையும் எடுத்துக்கொண்டு வறுத்து அதில் கறுப்பு உப்பு கலந்து வைத்துக்கொள்ளலாம்.

ஸ்நாக்ஸுக்கு எண்ணெய் அயிட்டங்கள் எடுத்துக் கொள்வது உடலுக்குக் கெடுதல். அதற்குப் பதிலாக இந்த டிஷ்ஷை எடுத்துக்கொள்ளலாம். நாளுக்கு ஒருமுறை சாப்பிடலாம். தினமும் 10 கிராம் முதல் 15 கிராம் வரை சாப்பிட்டால் போதும்.

சூரியகாந்தி விதை என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே.

கேரட் ரைஸ்

தேவையானவை:

 • பாஸ்மதி அரிசி - ஒரு கப்

 • துருவிய கேரட் - அரை கப்

 • கடுகு - அரை டீஸ்பூன்

 • பிரியாணி இலை - ஒன்று

 • பச்சை மிளகாய் - ஒன்று

 • காய்ந்த மிளகாய் - 2

 • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • கார்னிஷ் செய்ய:

 • துருவிய கேரட் - கால் கப்

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • சமையல் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • கொத்தமல்லி இலை - சிறிதளவு

கேரட் ரைஸ்
கேரட் ரைஸ்

செய்முறை:

ஒரு கப் பாஸ்மதி அரிசியுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். சாதம் உதிரி உதிரியாக இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடுசெய்துகொள்ளவும். அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் பிரியாணி இலையைச் சேர்க்கவும். பிறகு மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். அதன் மேலேயே மிளகாய்களை நறுக்கிப்போட்டுக் கிளறவும். அதோடு துருவிய கேரட் சேர்த்து மேலும் கிளறவும். ஆறிய பிறகு பாஸ்மதி அரிசி சாதத்தைப் போட்டு மெதுவாக மிக்ஸ் செய்யவும்.

கார்னிஷ்:

ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெயைச் சூடுபண்ணிக் கொண்டு, வெங்காயம், கேரட் போட்டுக் கலந்து பாசுமதி சாத்துக்கு மேலே கார்னிஷ் செய்து, கொஞ்சம் கொத்தமல்லி இலைகளை அதன்மேல் சேர்க்க வேண்டும்.

குழந்தைகளில் பலர் கேரட்டைச் சாப்பிட மாட்டேன் என்று அடம் பண்ணுவார்கள். அவர்களுக்கு கேரட் ரைஸாகத் தந்தால் நல்லது.

பெருங்காயம் அன்றைய பெர்சியாவை (இன்றைய இரான்) பிறப்பிடமாகக் கொண்டது.

டிரை ஃப்ரூட் சாலட்

தேவையானவை:

 • ஆப்ரிகாட் - 10

 • பேரீச்சை - 10

 • வால்நட் - 10

 • திராட்சை - 8

 • தேன் - 2 டீஸ்பூன்

டிரை ஃப்ரூட் சாலட்
டிரை ஃப்ரூட் சாலட்

செய்முறை:

டிரை ஃப்ரூட்ஸ் மிகவும் கடினத் தன்மையோடு இருந்தால் வெந்நீரில் தோய்த்து எடுத்துக்கொள்ளலாம். அவற்றைச் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். அதன்மீது 2 டீஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும்.

வால்நட்டில் வைட்டமின்-இ அதிகம் இருக்கிறது. பேரீச்சையில் இரும்புச்சத்து, ஒமேகா 3 இருக்கின்றன. ஆப்ரிகாட்டில் வைட்டமின்-ஏ அதிகம். கண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் இ சத்துகள் தருகிற சாலட் இது.

ஆப்ரிகாட் தமிழில் `சர்க்கரை பாதாமி’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஆரஞ்சு அண்டு மெலன் ஜூஸ்

தேவையானவை:

 • கஸ்தூரி முலாம்பழம் / கேண்டில் லூப் (சிறியது) - ஒன்று

 • ஆரஞ்சு - 2 (சாறு பிழியவும்)

ஆரஞ்சு அண்டு மெலன் ஜூஸ்
ஆரஞ்சு அண்டு மெலன் ஜூஸ்

செய்முறை:

முலாம்பழத்தை தோல் நீக்கி, சிறிது சிறிதாய் நறுக்கவும். முலாம் பழம், ஆரஞ்சு சாறு இரண்டையும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதை ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறவும்.

இதில் பீட்டா கேரோட்டின் அதிகம். கண் வறட்சி, மாலைக் கண் நோயையெல்லாம் குணமாக்கவல்லது.

முலாம் பழம் நோய்களைத் தடுக்கக்கூடியது என்பது மட்டுமல்ல... உடலுக்குப் புத்துணர்வையும் அளிக்கக்கூடியது.