Published:Updated:

`நோயின்றி புத்துணர்வுடன் வாழ வழிவகை'- புத்தக வடிவில் 'இன்னா நாற்பது இனியவை நாற்பது'!

விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ராம சுப்ரமணியம், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், சுகி சிவம், இசைக்கவி ரமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழா
விழா

மருத்துவர் கு.சிவராமன் எழுதி ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது 'இன்னா நாற்பது இனியவை நாற்பது'. மனித வாழ்வில் நோயின்றி புத்துணர்வுடன் வாழ வழிவகை செய்யும் விதமாக அமைந்தது அந்தத் தொடர். 40 வயது நெருங்குபவர்களின் வாழ்வியல் சார்ந்த பல விஷயங்களைத் தெளிவுப்படுத்தியது அத்தொடர்.

புத்தக வடிவில் இன்று 'இன்னா நாற்பது இனியவை நாற்பது' வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ராம சுப்ரமணியம், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், சுகி சிவம், இசைக்கவி ரமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழா
விழா

நூலை உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் வெளியிட, நீதிபதி ராம சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார். விழாவில் தனது தமிழாசிரியர் கிரஹோரியை அறிமுகப்படுத்தினார் மருத்துவர் கு.சிவராமன். "இன்று என்னுடைய பாடம் 8 ஆம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

அதற்கு காரணம் எனக்கு 8 ஆம் வகுப்பு சொல்லிக்கொடுத்த இந்த ஆசிரியர்தான் காரணம். என் தந்தை இப்போது உயிருடன் இல்லை. நான் தந்தை ஸ்தானத்தில் எனது ஆசிரியரைப் பார்க்கிறேன். எனது ஆசிரியரை என்னுடைய ஆரோக்யா குழுமத்தின் சார்பில் போற்றி வணங்குகிறேன்" என நெகிழ்ந்தார்.

நூலை வெளியிட்டு பேசிய உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் "இந்நூலை வெளியிடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு பெருமைப்படுகிறேன். ஆனந்த விகடனில் வெளிவந்தபோதே 'இன்னா நாற்பது இனியவை நாற்பது' தொடரை தொடர்ந்து வாசித்திருக்கிறேன்.

மருத்துவம் பற்றி மட்டுமில்லாமல் தமிழ் மரபிசை பற்றியும் தேவதேவன் கவிதை, சுளுந்தீ நாவல், சூழலியல் குறித்தும், திருமூலரின் திருமந்திரம் எனப் பல விஷயங்களைப் பேசியிருப்பார்" என்றார்.

மருத்துவர் கு.சிவராமன்
மருத்துவர் கு.சிவராமன்

உச்சநீதிமன்ற நீதிபதி ராம சுப்ரமணியம்,"நம்முடைய வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும் எனத் தெரிந்துகொள்ள பதினென்கீழ்கணக்கில் உள்ள ஆசாரக்கோவை படிக்க வேண்டும். அது நாம் எப்படி உணவு உண்ணவேண்டும், எப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும், எப்படி அமர்ந்து சாப்பிடக்கூடாது எனத் தொடங்கி நம் அனுதின செயல்கள் பற்றி தெளிவாக கூறியிருப்பர். நாம் வாங்கிய காரை நாம் முறையாக சர்வீஸ் செய்து பத்திரமாகப் பராமரிக்கிறோம். ஆனால் நாம் நம் உடலை அவ்வாறு பேணிப் பாதுகாப்பதில்லை" என்றார்.

"நம்ம நாட்ல ஒருத்தருக்கு நோய் வந்தா, சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் டாக்டராகி மருந்து சொல்வாங்க" மருத்துவர் கு.சிவராமனின்...

Posted by Vikatan EMagazine on Sunday, December 29, 2019

விழாவில் பேசிய சொற்பொழிவாளர் சுகி சிவம், "நோய் வந்தபிறகு தீர்ப்பவரல்ல சிறந்த மருத்துவர். நோய் வரவிடாமல் தடுப்பவரே நல்ல மருத்துவர். எளிய முறையில் மக்களுக்கு மருத்துவம் செய்யவேண்டும். அதற்கு சமூக அக்கறை தேவை. மருத்துவர் கு.சிவராமன் சமூக அக்கறைகொண்ட ஒரு மருத்துவர்." என்றார்.