Published:Updated:

சீரகச் சம்பாவா... பாசுமதியா... பிரியாணிக்கு எது பெஸ்ட்?

பிரியாணியை முறையாக எப்படிச் சமைப்பது, ஆரோக்கியமான பிரியாணி எப்படிச் செய்வது உள்ளிட்ட பிரியாணி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் பிரபல சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சைவம், அசைவம் என எந்த வகை உணவாக இருந்தாலும், 'பிரியாணி' என்றால் கூடுதல் ஸ்பெஷல்தான். இந்தியர்களின் விருந்துகளில் நிச்சயம் தவிர்க்க முடியாத உணவாக பிரியாணி இருக்கிறது. 'ட்ரீட்' என்ற சொல், 'பிரியாணி' என்று மாறிவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களின் நாடி நரம்புகளில் பிரியாணியின் சுவை ஊறிப்போயிருக்கிறது.

Biriyani
Biriyani
Vikatan

அவற்றை முறையாக எப்படிச் சமைப்பது, ஆரோக்கியமான பிரியாணியை எப்படிச் செய்வது உள்ளிட்ட பிரியாணி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார், பிரபல சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.

எந்த சீசனில் எந்த வகை பிரியாணி சிறந்தது?

எல்லா சீசனிலும் எந்த வகை பிரியாணி வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், அதில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருள்களையும், சாப்பிடும் அளவையும் காலத்திற்கு ஏற்றபடி மாற்றி உட்கொள்வது நல்லது. சாதாரண நாள்களிலேயே அதிக காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லதல்ல.

Mallika Badrinath
Mallika Badrinath
Vikatan

அதிலும் கோடைகாலத்தில் நிச்சயம் பிரியாணி எடுத்துக்கொள்ளும் அளவையும், காரத்தின் அளவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஏற்கெனவே வியர்வை மூலமாக உடலில் இருக்கும் மினரல்ஸ் வெளியேறிவிடும். இந்நிலையில் அதிகம் காரம் சாப்பிட்டால், உடலில் அதிக எரிச்சல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. குளிர்காலங்களில் காரம், மசாலாவும் நிறைந்த பொருள்களைச் சாப்பிடலாம். அதிலும் கட்டுப்பாடு அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெவ்வேறு பிரியாணி வகைகள் பற்றி?

நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான பிரியாணிகள் இருக்கின்றன. சிலர் தக்காளி சேர்த்துச் செய்வார்கள். சிலர் தக்காளி இல்லாமல் செய்வார்கள். இடத்திற்கு இடம் அவர்கள் உபயோகிக்கும் மசாலாப் பொருள்கள், அரிசி போன்றவை மாறுபடும். செட்டிநாடு உணவு வகைகளில் சோம்பு இருக்கும்.

Biriyani
Biriyani

ஆனால், வேறு சில பிரியாணி வகைகளில் சோம்பு இருக்காது. இப்படி நிறைய மாற்றங்கள் கொண்டுவந்து, ஒரிஜினல் பிரியாணியின் சுவை என்ன என்பதே மறந்துவிட்டது. எதுவாக இருந்தாலும், நம் உடல் நலத்திற்கு எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது சிறந்தது.

ஆரோக்கியமான பிரியாணி எப்படிச் செய்வது?

எந்த வகை பிராணியாக இருந்தாலும், காரத்தைக் குறைத்து, அதில் சேர்க்கப்படும் காய்கறிகள், மாமிச அளவுகளை அதிகரித்துச் செய்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. உதாரணத்திற்கு, ஒரு கப் அரிசிக்கு இரண்டு அல்லது மூன்று கப் ஃப்ரெஷ் காய்கறிகளை சேர்த்துச் சமைக்கலாம்.

தானியங்கள்
தானியங்கள்
ஆன்லைன் ஆர்டரில் நம்பர் ஒன்..! - மவுசு குறையாத பிரியாணி

இப்படிச் செய்வதால், உடலுக்கு சரிசம அளவு சத்து சேரும். இயல்பாகவே, காய்கறிகளில் காரத்தன்மை (Alkaline) நிறைந்திருக்கும். அரிசி, பருப்பு போன்ற பொருள்களில் அமிலம் இருக்கிறது. அல்கலைன் மற்றும் அமிலத்தின் அளவு உடலுக்கு சரியாகக் கிடைக்க வேண்டுமென்றால், அமிலத்தைவிட அல்கலைனின் அளவை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

பாசுமதி அரிசி உடலுக்குத் தீங்கு விளைவிக்குமா?

ஒவ்வோர் அரிசியிலும் வெவ்வேறு நற்குணங்கள் இருக்கின்றன. பாசுமதி அரிசி வகைகளிலேயே அன்பிளீச்சுடு ஹை-ஃபைபர் (Unbleached High-Fibre) பாசுமதி அரிசி தற்போது சந்தையில் அதிகம் கிடைக்கிறது. அதிலும், பிரவுன் நிற அரிசியில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. மெதுவாக குளுகோஸின் அளவை ரத்தத்தில் உயர்த்துவதில் பச்சரிசியைவிட பாசுமதி அரிசிக்கு சக்தி உண்டு.

Basmati Rice
Basmati Rice
Vikatan

இதன் காரணமாகவே, பாசுமதி அரிசியை தினமும் சாப்பிடுபவர்களும் உண்டு. அரிசியைத் தேர்ந்தெடுக்கும்போதும் நார்ச்சத்து இருப்பதாகத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது நாம் சேர்க்கும் காய்கறிகளில் நார்ச்சத்து இருக்கும்படி பார்த்துச் சேர்க்கலாம். இப்படி சமச்சீர் செய்வதன்மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

பிரியாணியை எப்படி உட்கொள்ள வேண்டும்?

பிரியாணி என்றதும் சிலர் சிறிதும் இடைவெளியில்லாமல் அவசர அவசரமாகச் சாப்பிடுவார்கள். இன்னும் சிலரோ, மூன்று வேளையும் பிரியாணி கொடுத்தாலும் சளைக்காமல் சாப்பிடுவார்கள். ஆனால், அப்படிச் செய்வது உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். எந்த உணவையும் மெதுவாக ரசித்து உண்ண வேண்டும்.

Health
Health
Pixabay

இப்படிச் செய்வதால், குறைவான அளவு சாப்பிட்டாலே நிறைவாக இருக்கும். சிலர், காரமாக இருக்கிறது என்று சாப்பிடுவதற்கு இடையே தண்ணீர் குடிப்பார்கள். இது, ஜீரண சக்தியைக் குறைக்கும். சாப்பிட்டு முடிக்கும்வரை தண்ணீர் குடிக்கத் தேவையில்லாத அளவுக்கு பிரியாணியில் காரம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பிரியாணியோடு தயிர்ப்பச்சடி சேர்த்துச் சாப்பிடுவது நல்லதா?

Onion Raita
Onion Raita
Archanas Kitchen

மிகவும் நல்லது. ஏனென்றால், தயிரில் புரோ-பயாட்டிக் உள்ளது. இது, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். ஆனால், கடைகளில் வாங்கும் தயிரில் எந்த அளவிற்கு புரோ-பயாட்டிக் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. சுத்தமான வீட்டுத் தயிரில் பச்சடி செய்து பிரியாணியோடு சாப்பிடுவது சிறந்தது. இதில்தான் ஜீரண சக்தியை மேம்படுத்தும் நன்மை தரும் நுண்ணுயிர்கள் உள்ளன.

பிரியாணி போன்று இருக்கும் புலாவ் உடலுக்கு நல்லதா?

வளைகுடா பகுதிகளில், 'பிலாஃப்' மிகவும் பிரசித்திபெற்ற உணவு வகை. பிலாஃப் என்றால் 'லேயர்டு ரைஸ்' என்று பொருள். ஒவ்வொரு லேயராக சேர்த்துச் சமைத்து எடுப்பதுதான் பிலாஃப்.

Pulao
Pulao

இந்த வார்த்தை மருவித்தான், இந்தியாவில் 'புலாவ்' என்றானது. இந்தப் புலாவை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக சமைத்துச் சாப்பிடுகின்றனர். பிரியாணி அளவிற்கு புலாவ் காரமாக இருக்காது. எனவே, கோடைகாலங்களில் பிரியாணிக்குப் பதிலாக புலாவ் சாப்பிடலாம்.

சரியான பிரியாணி சமைப்பதற்கான டிப்ஸ்?

பாசுமதி அரிசி, சீரகச் சம்பா என எந்த அரிசியில் பிரியாணி செய்தாலும், மேலோட்டமாக மட்டுமே கழுவ வேண்டும். ஒருமுறை கழுவினால் போதுமானது. இது, வாசனையை அப்படியே தக்கவைத்துக்கொள்ள உதவும்.

அசைவ பிரியாணிக்கு 1:1.5 பங்கில் அரிசியும் தண்ணீரும் சேர்க்கலாம். சைவ பிரியாணிக்கு 1:2 பங்கு சரியாக இருக்கும்.

தண்ணீரில் அரிசி சேர்ப்பதற்குமுன், நெய்யில் அரிசியை வறுத்தெடுத்துச் சேர்த்தால், பிரியாணி உதிரியாக இருக்கும்.

Biriyani
Biriyani
Vikatan
5 பைசா, கொலை, விபத்து, மந்தி, 40 ஆயிரம் ரூபாய்... 2019-ன் டிரெண்டிங் பிரியாணி சம்பவங்கள்!

பெரிய அடுப்பில் மட்டுமே பிரியாணி செய்ய வேண்டும். முதல் கொதி வந்த பிறகுதான் அரிசியைச் சேர்க்க வேண்டும். அரிசி சேர்த்த பிறகு, நெருப்பை முழுவதுமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். விசில் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏழிலிருந்து பத்து நிமிடத்திற்கு, குறைந்த நெருப்பில் வைத்து இறக்கிவிடலாம்.

அடுப்பிலிருந்து இறக்கியபின், கடைசியில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கலந்துவிடவும். நறுமணத்திற்காக மல்லி மற்றும் புதினாத் தழைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு