Published:Updated:

என்னோட ரெவ்யூ ருசிக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தரணும் - `ஃபுட் ரெவ்யூவர்' கிருத்திகா

கிருத்திகா
பிரீமியம் ஸ்டோரி
கிருத்திகா

சின்ன வயசுல இருந்தே நான் Foodie தான் - கிருத்திகா

என்னோட ரெவ்யூ ருசிக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தரணும் - `ஃபுட் ரெவ்யூவர்' கிருத்திகா

சின்ன வயசுல இருந்தே நான் Foodie தான் - கிருத்திகா

Published:Updated:
கிருத்திகா
பிரீமியம் ஸ்டோரி
கிருத்திகா

‘இதெல்லாம் பொண்ணுங்களுக்கு சரிப்பட்டு வராது’ என்ற ஸ்டீரியோ டைப்பிங்கை ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் உடைத்துக் காட்டி யிருக்கின்றனர். ஆண்கள் மட்டுமே முகம் காட்டும் ஏரியாவில், ‘நாங்களும் கெத்துதான்’ என்று களமிறங்கியவர் கிருத்திகா. ‘டேஸ்ட் வித் கிருத்திகா’ என்ற பெயரில் யூடியூப், ஃபேஸ்புக் சேனல்களில் ஃபுட் ரெவ்யூ செய்து வருகிறார். கேமராவில் முகம் காட்டி தமிழில் ஃபுட் ரெவ்யூ செய்யும் பெண்களில் முன்னோடி யாக இருப்பவர்.

“சின்ன வயசுல இருந்தே நான் Foodie தான். என் பாட்டி நல்லா சமைப்பாங்க. மட்டன் கொத்துக்கறி, கோலா உருண்டைன்னு விதவித மான உணவை அவங்கதான் எனக்கு அறிமுகம் செஞ்சு வெச்சாங்க.

யார் வீட்டுக்குப் போனாலும் மத்தவங்க எல்லாரும் என்ன வெச்சாலும் சாப்பிட்ருவாங்க. ஆனா, நான் உருளைக்கிழங்கு இப்படித்தான் வறுக்கணும், இந்தச் சாப்பாட்டுக்கு இந்த சைடிஷ்தான் வேணும்னு காம்பினேஷன்ல சாப்பிடுவேன்” - இன்ட்ரோ கொடுத்தவர் சென்னை தரமணியிலுள்ள எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரியில் எடிட்டிங் கற்றிருக் கிறார். 12 ஆண்டுகள் மீடியாவில் வேலை பார்த்துவிட்டு, இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

என்னோட ரெவ்யூ ருசிக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தரணும் -
`ஃபுட் ரெவ்யூவர்' கிருத்திகா

“கேமரா, எடிட்டிங், டைரக்‌ஷன் எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணுவேன் கிறதால என் நண்பர்கள்தாம் சேனல் ஆரம்பிக்க ஐடியா குடுத்தாங்க. நான் எப்பவும் சமையல் வீடியோதான் பார்ப்பேன். முதல்ல ‘டேஸ்டி’ன்னு ஒரு சமையல் சேனல்தான் ஆரம்பிச்சேன். முகம் காட்டாம எனக்குத் தெரிஞ்ச சமையல் வீடியோவை அப்லோட் பண்ணுவேன். ஆனா, பெருசா வியூஸும் போகல. சப்ஸ்கிரைபர்ஸும் இல்ல. ஆபீஸ் வேலை, குழந்தை, குடும்பம்னு பிரஷர் அதிகமாகவே, ஆறு மாசம் எந்த வீடியோவும் போடல.

ஒருமுறை வில்லிபுத்தூர் பால்கோவா செய்ற இடத் துல இருந்து ஒரு வீடியோ போட்டிருந்தேன். அதுல முகம் காட்டி, பேசியிருப்பேன். அப்போதான் என் ஃபிரெண்ட் ஒருத்தங்க, ரெவ்யூ பண்றதுதான் இப்போ டிரெண்டு. இது மாதிரி வீடியோ பண்ணுங்கன்னு சொன்னாங்க. அதுவரைக்கும் நான் ஃபுட் ரெவ்யூ வீடியோக்களைப் பார்த்ததுகூட இல்ல” என்பவர் இதையே கரியராக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

என்னோட ரெவ்யூ ருசிக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தரணும் -
`ஃபுட் ரெவ்யூவர்' கிருத்திகா

“என் ஆறு வயசு குழந்தையை அம்மாதான் பார்த்துக்கிறாங்க. அதனாலதான் எந்தக் கவலையும் இல்லாம என்னால பயணிக்க முடியுது. அப்பா, தங்கை, பிரதர்-இன்-லா மூணு பேரும்தான் எனக்கான விமர்சகர்கள். வீட்டுக் காரர்தான் ஆல் இன் ஆல்” என்கிறார் கண்கள் விரிய.

“சென்னை புளியந்தோப்புல உள்ள ஒரு பிரியாணி கடைல நான் பண்ணின முதல் ரெவ்யூ வீடியோ வுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. இதையே தொடரலாம்னு நம்பிக் கையும் கொடுத்துச்சு” என்பவர் சென்னை, புதுச்சேரி, மதுரை எனப் பல இடங்களுக்கும் பைக்கிலும் புல்லட்டிலும் சென்று அங்குள்ள உணவகங்களை ரெவ்யூ செய்கிறார். காதல் கணவர் அருண் பொன்ராஜ் உள்ளிட்ட நால்வர் டீம் இவருடன் பயணிக்கிறது.

“என்னுடைய வீடியோவை முதல் முறை பாக்குறவங்களுக்கு நான் ஓவர் ஆக்டிங் பண்றது மாதிரி தோணும். ஆனா, என் குடும்பம், நண்பர்கள் யாருக்கும் அது வித்தியாசமா தெரியல. ‘சாப்பாட்டைப் பார்த் தாலே நீ அப்படித்தானே பேசுவ’ன்னு கலாய்ப்பாங்க” என்பவர் உணவை வீணாக்கக் கூடாது என்பதைக் கொள்கையாகவே கடைப் பிடிக்கிறார்.

“பெண்கள் என்ன வீடியோ போட்டாலும் ஆபாசமா கமென்ட் போடுறதுக்குன்னு ஒரு கூட்டம் இருக்குது. ‘பொண்ணுங்கிறவ வீட்ல உக்கார்ந்து வீட்டுக்காரருக்கு சமைச்சுப் போடணும். இப்படித் தெருத் தெருவா போய் சாப்பிடுற வங்க நல்ல பொண்ணு கிடை யாது’ன்னு ஒரு பெண்ணே கமென்ட் போட்டிருந்தாங்க.

அவங்க வீட்ல உள்ளவங்க ஐ.டி வேலைக்கு எப்படிப் போறாங்களோ அதே மாதிரிதான் இந்த வேலை எனக்கு” கெத்து காட்டுபவர் ஃபுட் ரெவ்யூவுக்குப் பின்னால் இருக்கும் உடல் உபாதைகள் பற்றிப் பேசுகிறார்.

என்னோட ரெவ்யூ ருசிக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தரணும் -
`ஃபுட் ரெவ்யூவர்' கிருத்திகா

“தொடர்ந்து ஷூட் இருந்தா வயிறெல்லாம் எரிய ஆரம்பிச்சிடும். அல்சர் பிரச்னையும் இருக்கு. அந்த மாதிரி நேரத்துல அம்மாதான் ஆரோக்கியமான மூலிகை உணவு களைக் கொடுப்பாங்க. உடற் பயிற்சிகளையும் மிஸ் பண்ண மாட்டேன்.

ஓர் உணவகத்துல சாப்பிட்டு அடுத்த நாள் வயித்துக்கு ஒப்புக் கலைன்னா அந்த வீடியோவைப் போட மாட்டேன். கடைக்காரங் களுக்கும் கால் பண்ணி, சொல்லிடு வேன். என்னோட ரெவ்யூ ருசிக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தரணும்ல” என்பவருக்கு ஃபுட் ரெவ்யூவராக மிகப் பிடித்த உணவுகள் பிரியாணியும் மீன் குழம்புமாம்.

நீ கலக்கு சித்தப்பு!