Published:Updated:

மாதுளம், கறிவேப்பிலைத் துவையல், பனங்கற்கண்டு பால்... மனதை உற்சாகப்படுத்தும் உணவுகள்! #NoMoreStress

Stress

மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவும் உணவுகள் - ஓர் ஆரோக்கிய வழிகாட்டல்.

மாதுளம், கறிவேப்பிலைத் துவையல், பனங்கற்கண்டு பால்... மனதை உற்சாகப்படுத்தும் உணவுகள்! #NoMoreStress

மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவும் உணவுகள் - ஓர் ஆரோக்கிய வழிகாட்டல்.

Published:Updated:
Stress

உடல்நலத்தைவிட மனநலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி வருகிறது. பள்ளி செல்லும் குழந்தை முதல் வயதான பாட்டி, தாத்தா வரை எல்லோரிடமும் மனஅழுத்தம், மனச்சோர்வு, கோபம், உறக்கமின்மை, அதீத உணர்வு வெளிப்பாடு என மனம் சார்ந்து பல்வேறு குறிகுணங்கள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன.

Healthy foods
Healthy foods

இவை உடல்நலத்தையும் பாதிக்கின்றன. பொதுவாகவே நம்மைச் சுற்றி, நம்மைச் சார்ந்து நடக்கும் பல மகிழ்ச்சியான விஷயங்களைப் பார்க்கத் தவறுகிறோம். அதேவேளையில் ஏதோவொரு சூழலில் மனஅழுத்தம் ஏற்பட்டால், அதிலிருந்து வெளியேற வருவதற்கான முயற்சியையும் எடுப்பதில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனஅழுத்தம், மனச் சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு எளிய வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை யோசிக்காமல், முயற்சி செய்யாமல் தொடர்ந்து இறுக்கமான சூழலிலேயே பயணித்துக்கொண்டிருக்கிறோம். மனம் சார்ந்த பிரச்னைகள் இருப்பவர்கள் அதிகமாக உணவு உட்கொள்வது இயல்பு. ஆனால், அந்த உணவுகளே மனதை உற்சாகப்படுத்தும் என்கிற உண்மை நம்மில் பலருக்குத் தெரியவில்லை.

Idly
Idly

இந்த பேருண்மையைப் புரிந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்படும் மனச் சோர்வைக் குணமாக்க, மனதை உற்சாகப்படுத்தும் உணவுகளைத் தேடத் தொடங்கியிருக்கின்றனர். இட்லி, இடியாப்பத்தில் தொடங்கி கறிவேப்பிலைத் துவையல், வெண்பூசணி அவியல் என நம் பாரம்பர்ய உணவுகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் போன்றவற்றின் உருவம் மற்றும் அவற்றின் மென்மையைப் பார்க்கும்போதே மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். இவற்றுக்கு தொடு உணவாக மணமிக்க மசாலா வகைகள், சின்ன வெங்காயம் சேர்ந்த சாம்பார் போன்றவை நாவுக்கு ருசியைத் தருவதுடன் முழு திருப்தியையும் கொடுக்கும்.

Idiyappam
Idiyappam

இவற்றைச் சாப்பிடுவதால் செரிமான பிரச்னைகள் எதுவும் ஏற்படாததால் மனதுக்கு உற்சாகம் அளிக்கும். நாம் தயாரிக்கும் உணவிலிருந்து வெளிப்படும் வாசனையே மனதுக்குப் புத்துணர்ச்சி தரும். இன்றைய சூழலில் செயற்கை, கலப்படம் இல்லாத இயற்கையான உணவுகளை உண்டாலே மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கும் அவற்றில் சேர்க்கப்படும் ஆரோக்கியமான உணவுப் பொருள்களுக்கும் நோய் நீக்கும் குணம் இருக்கும். கூடவே கடவுளின் பிரசாதம் என்கிற நம்பிக்கையே மனதை சாந்தப்படுத்திவிடும். காஞ்சிபுரம் இட்லி, பார்த்தசாரதி கோயில் அக்கார அடிசில், அழகர்கோயில் அப்பம், மார்கழி மாதத்தின் அதிகாலை நேரத்து வெண்பொங்கல் என ஆலய பிரசாதங்கள் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும் அற்புத உணவுகளாகும்.

Panchamirtham
Panchamirtham

பழனி உள்ளிட்ட கோயில்களில் கிடைக்கும் பஞ்சாமிர்தத்தில் வாழைப்பழத்தின் நலம் பயக்கும் நுண்கூறுகள் மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். நம்பிக்கைகளைத் தாண்டி உணவுப் பொருள்களில் உள்ள நுண்சத்துகள் உடலைக் காத்து, மனதுக்கும் நல்மருந்தாக அமையும்.

மாதுளம் பழச்சாறு, கறிவேப்பிலைத் துவையல், பனங்கற்கண்டு பால் போன்றவை மனதை உற்சாகப்படுத்தும் உணவுப் பொருள்களாகும். சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அமுக்கராகிழங்குக்கு மனதை சாந்தப்படுத்தும் செய்கை உண்டு. பல்வேறு மன நோய்களுக்கான மருந்துத் தயாரிப்பில் அமுக்கராகிழங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இரவு வேளையில் பாலில் அமுக்கரா சூரணத்தைக் கொதிக்க வைத்து பருகிவர மன அழுத்தம் குறைந்து நல்ல உறக்கம் உண்டாகும். பிரம்மிக் கீரையை சமைத்து நெய் விட்டு சாப்பிடுவதும் சிறந்தது.

Pomegranate
Pomegranate
Milk
Milk

கருவுற்ற பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் வழங்கப்படும் சித்த மருந்துகளான மாதுளை மணப்பாகு, கறிவேப்பிலைப் பொடி போன்றவை வாந்தி, குமட்டலைக் குறைப்பதுடன் ரத்த அணுக்களை அதிகரிக்கும். கூடவே இனம்புரியாத மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். வெண்பூசணி - தயிர் சேர்ந்த அவியல் மனதைக் குதூகலமாக்கும் உணவாகும்.

நெகிழி தட்டுகளைத் தவிர்த்து, ஆவி பறக்க வாழை இலையில் உணவருந்தவும்.

வெண்பூசணி விதைகளை உலர்த்திப் பொடித்து பாலில் கலந்து இரவில் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் பித்தம் அதிகரிப்பதால் உண்டாகும் மனம் சார்ந்த பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். பாதாம், பிஸ்தா, அக்ரோட் போன்றவை மனதை உற்சாகப்படுத்தும். நம் பகுதியில் விளையும் அனைத்துப் பழ வகைகளும் மனத்துக்கு நல்லது. நெகிழி தட்டுகளைத் தவிர்த்து, ஆவி பறக்க வாழை இலையில் உணவருந்துவதும் மன மகிழ்ச்சியை உருவாக்கும்.

சமைத்த உணவையும் தாண்டி, சமைப்பவரின் அன்பும் நேசமும் மன அழுத்தத்தைப் பாதியாகக் குறைக்கும்.
சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

இனிப்புச் சுவைமிக்க உணவுப் பொருள்கள் அனைத்துமே மன மகிழ்ச்சியை அதிகரிக்கக்கூடியவை. குறிப்பாக, நமது பாரம்பர்ய இனிப்புகள் சிறந்த எடுத்துக்காட்டுகள். இப்போதிருக்கும் செயற்கை இனிப்புகள் ஆரம்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்குவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கினாலும், சர்க்கரைநோய், உடல்பருமன் போன்ற தொற்றா நோய்களை உருவாக்கி விரைவில் மன அழுத்தத்தை உருவாக்கிவிடும்.

சுவை மொட்டுக்களின் மூலம் இனிப்புச் சுவையை நாம் உணரத் தொடங்கியதும் நமக்குள் உண்டாகும் துள்ளும் உற்சாகத்தை அனைவரும் உணர்ந்திருப்போம். இயற்கையான தேன், பழ இனிப்புகள், நாட்டுச் சர்க்கரை போன்றவை இயற்கையான இனிப்புச் சுவைக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட கலர் கலர் இனிப்பு ரகங்கள், சர்க்கரைக் கட்டி, பன்னாட்டு குளிர்பானங்கள் கொடுக்கும் சுவை செயற்கை இனிப்புக்கான எடுத்துக்காட்டுகள். எந்த வகையான இனிப்பு, நல்ல மனநிலையை உருவாக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கேட்ஜெட்டுகளைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது நிச்சயம் மன அழுத்தத்தை உருவாக்கும்.
சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
Family food
Family food

சமைத்த உணவையும் தாண்டி, சமைப்பவரின் அன்பும் நேசமும் மன அழுத்தத்தைப் பாதியாகக் குறைக்கும். முந்தைய தலைமுறையில் கூட்டாக அமர்ந்து சாப்பிட்ட உணவு முறை, மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆயுதம். இப்போதைய தலைமுறையில் தனியாக அமர்ந்து கேட்ஜெட்டுகளைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது நிச்சயம் மன அழுத்தத்தை உருவாக்கும். மாறுவோம்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism