Published:Updated:

2K kids: உணவுப் பழக்கம்... தவறுகளைத் தவிர்க்கலாம்!

உணவுப் பழக்கம்
பிரீமியம் ஸ்டோரி
உணவுப் பழக்கம்

காயத்ரி.வெ

2K kids: உணவுப் பழக்கம்... தவறுகளைத் தவிர்க்கலாம்!

காயத்ரி.வெ

Published:Updated:
உணவுப் பழக்கம்
பிரீமியம் ஸ்டோரி
உணவுப் பழக்கம்

‘`மாவுச்சத்து, கொழுப்பு, புரதம், உயிர்ச்சத்து, தாது போன்ற அத்தியாவசியமான சத்துகள் அடங்கிய, அவரவர் உடலுக்கு ஏற்ற, அளவோடு உண்ணும் உணவே ஆரோக்கிய உணவு. தற்போது பலரும் உணவுப் பழக்கங்களில் பல தவறுகளைச் செய்து வருகிறோம். அவற்றையெல்லாம் தவிர்ப்பது நம் ஆயுளுக்கு நாம் தரும் பரிசு’’ என்று சொல்லும் சென்னை, மாதவரம் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஹேமாவதி, இங்கு விளக்குகிறார்.

2K kids: உணவுப் பழக்கம்...  தவறுகளைத் தவிர்க்கலாம்!

காலை உணவுக்கு யெஸ்!

குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்பவர்கள்வரை பலரும் செய்யும் தவறு, காலை உணவைத் தவிர்ப்பது. காலை உணவே அந்நாள் முழுவதுக்குமான சக்தியைக் கொடுக்கும் என்பதால், சத்தான காலை உணவு அவசியம். அதற்காக நாலு இட்லி, இரண்டு வடை, ஐந்து தோசை என்று தேவையில்லை. குறைந்த அளவு, நிறைந்த சத்து என எடுத்துக்கொள்ள வேண்டும்.

2K kids: உணவுப் பழக்கம்...  தவறுகளைத் தவிர்க்கலாம்!

உணவை உண்ட பின் உறக்கம் கூடாது!

சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் அந்த உணவு சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றில் தேவையில்லாத பிரச்னைகள் உருவாக அது வழிவகுக்கும். மேலும், உண்ட உணவில் உள்ள கலோரிகள் எரிக்கப்படாமல் எடையும் அதிகரிக்கும்.

2K kids: உணவுப் பழக்கம்...  தவறுகளைத் தவிர்க்கலாம்!
subodhsathe

பொரித்த எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தினால்...

பஜ்ஜி, வடை என எண்ணெய் பலகாரங்கள் செய்ய பயன்படுத்தி மீதமான எண்ணெயை, சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது. அப்போது உருவாகும் `ஃப்ரீ ரேடிகிள்கள்' நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும், எந்த உணவையும் நீண்ட நேரம் பொரிக்கும்போது புரதங்களின் பண்பு மாறி, அந்த உணவிலிருந்து உடல் எடுத்துக்கொள்ளக்கூடிய புரதத்தின் அளவு குறையும்.

2K kids: உணவுப் பழக்கம்...  தவறுகளைத் தவிர்க்கலாம்!
fabphoto

சாப்பிட்டதும் புகைப்பது 10 மடங்கு ஆபத்து!

பொதுவாகவே சிகரெட் பிடிப்பது உடல்நலனுக்குக் கேடானது. அதிலும், ‘உணவை உண்ட உடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்குச் சமமான விளைவை ஏற்படுத்தும்’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

2K kids: உணவுப் பழக்கம்...  தவறுகளைத் தவிர்க்கலாம்!

காய்கள் மற்றும் பழங்கள்...உடனே பயன்படுத்துங்கள்!

காய்கறிகளை நறுக்கியவுடன் சமைத்துவிட வேண்டும், பழங்களை நறுக்கியவுடன் சாப்பிட்டுவிட வேண்டும். நறுக்கி பல நேரம் வைத்திருந்தால், அவற்றின் உயிர்த் தன்மை குறைந்து போகும்.

2K kids: உணவுப் பழக்கம்...  தவறுகளைத் தவிர்க்கலாம்!

சர்க்கரையின் மாயப் பெயர்கள்!

பல உணவுகளில் `ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் (High fructose corn syrup)’ எனும் ரசாயன இனிப்பு சேர்க்கப்படுகிறது. சர்க்கரை என்பதை சிரப், ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ், கேன் ஜூஸ், ஸ்வீட்னர் எனப் பல பெயர்களில் உணவுப் பொருள்களின் லேபிள்களில் குறிப்பிடுகின்றனர். இவை அனைத்துமே உடல்நலத்துக்கு எதிரானவை என்பதால், அந்த வகை உணவுப் பொருள்களைக் குறைவாகச் சாப்பிடுவது, தவிர்ப்பது நல்லது.

2K kids: உணவுப் பழக்கம்...  தவறுகளைத் தவிர்க்கலாம்!

பாக்கெட் உணவுகளின் பிரிசர்வேட்டிவ் ஆபத்துகள்!

பேக் செய்யப்பட்ட நொறுக்குத் தீனி லேபிளில் ஐந்துக்கும் மேற்பட்ட மூலப்பொருள்கள் (Ingredients) இருந்தால், அவை செயற்கை சுவையூட்டிகள், பதப்படுத்திகள் என்பதால் அதைக் கண்ணை மூடிக்கொண்டு தவிர்த்துவிடலாம்.

2K kids: உணவுப் பழக்கம்...  தவறுகளைத் தவிர்க்கலாம்!
WEKWEK

நிறமூட்டிகளுக்கு நோ...

ருசிக்காகவும் அழகுக்காகவும் அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் சேர்க்கப்படும் நிறமூட்டிகள், குழந்தைகளுக்கு அலர்ஜியில் இருந்து பெரியவர்களுக்கு சருமப் பிரச்னைகள்வரை பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

கோல்டன் டிப்!

சமையலுக்கு ஒரே எண்ணெயைப் பயன்படுத்தாமல், ஆலிவ் எண்ணெய், சோயா எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என மாற்றி மாற்றி பயன்படுத்துவது நல்லது.

15 மில்லி எண்ணெயில் 125 கலோரி ஆற்றல் கிடைக்கும். எனவே, உணவுப் பொருள்களை வதக்குவதற்குக் குறைந்த அளவே எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். பாத்திரம் சூடேறியதும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்கறிகளை லேசாக வதக்கி, குறைந்த அளவு தண்ணீரில் வேகவைத்தால் உணவின் ஆரோக்கியம் தக்கவைக்கப்படும் நேரமும் மிச்சமாகும்.