என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

குளிருக்கு இதமாகவும் மருந்தாகவும்... மூலிகை சூப்கள்!

இஞ்சி - புதினா சூப்
பிரீமியம் ஸ்டோரி
News
இஞ்சி - புதினா சூப்

இத்தகைய நேரத்தில் தொண்டைக்கு இதமும், உடலுக்கு ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய இந்த மூலிகை சூப்களை செய்து பருகலாம் வாருங்கள்

குளிர்ச்சியும், ஈரப்பதமான சூழலும் கொண்டது குளிர்காலம். ஈரப்பதமான காற்றை மனம் உற்சாகமாக வரவேற்றாலும் கூடவே அழையா விருந்தாளியாக காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக கைகோத்துக்கொண்டு வந்து நம்மை பாடாய்ப்படுத்தும். ``இத்தகைய நேரத்தில் தொண்டைக்கு இதமும், உடலுக்கு ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய இந்த மூலிகை சூப்களை செய்து பருகலாம் வாருங்கள்'' என்கிறார் சு.பொன்மணி ஸ்ரீராமன்

 சு.பொன்மணி ஸ்ரீராமன்
சு.பொன்மணி ஸ்ரீராமன்

துளசி சூப்

தேவையானவை:

துளசி இலைகள் - ஒரு கைப்பிடி

நறுக்கிய கேரட், பீன்ஸ்,

பச்சைப் பட்டாணி - ஒரு கப்

இஞ்சி, பூண்டு (இடித்தது) - சிறிதளவு

மிளகு, சீரகம் (பொடித்தது) - சிறிதளவு

மல்லித்தழை - சிறிதளவு

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, துளசி இலைகள், இடித்த இஞ்சி, பூண்டு, உப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் சிறிது சுண்டியதும் இறக்கவும். பின் சற்று அதை மசித்து வடிகட்டி, பொடித்த சீரகம், மிளகு சேர்த்துப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி சூடாகப் பருகவும்..

குளிருக்கு இதமாகவும் மருந்தாகவும்... 
மூலிகை சூப்கள்!

முடக்கத்தான் கீரை சூப்

தேவையானவை:

முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி

சின்ன வெங்காயம் - 5

பூண்டு - 4 பல்

மிளகு, சீரகம் (பொடித்தது) - சிறிதளவு

மல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை: முடக்கத்தான் கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி, ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பூண்டைத் தட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முடக்கத்தான் கீரை, சின்ன வெங்காயம், தட்டிய பூண்டு, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் இறக்கி, வடிகட்டி, அதில் பொடித்த மிளகு, சீரகத்தைச் சேர்க்கவும். மல்லித்தழை தூவி சூடாகப் பருகவும்.

குளிருக்கு இதமாகவும் மருந்தாகவும்... 
மூலிகை சூப்கள்!

தூதுவளை சூப்

தேவையானவை:

தூதுவளை இலைகள் - ஒரு கைப்பிடி

பெரிய வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

பூண்டு - நான்கு பற்கள்

மிளகுத்தூள் - சிறிதளவு

சீரகத்தூள் - சிறிதளவு

மல்லித்தழை - சிறிதளவு

சோள மாவு அல்லது

அரைத்த ஓட்ஸ் - சிறிதளவு

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: தூதுவளை இலைகளில் உள்ள கொக்கி போன்ற முட்களை நீக்கிவிட்டு, தண்ணீரில் நன்கு அலசி பொடியாக நறுக்கவும். பெரிய வெங்காயம், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். பூண்டைத் தட்டிக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரில் நறுக்கிய தூதுவளை இலைகள், வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றோடு தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும். தண்ணீர் சற்று சுண்டியதும் சோள மாவு அல்லது அரைத்த ஓட்ஸ் சிறிது கலந்து சிறு தீயில் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். அதை வடிகட்டி மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து மல்லித்தழை தூவி சூடாகப் பருகவும்.

குளிருக்கு இதமாகவும் மருந்தாகவும்... 
மூலிகை சூப்கள்!

இஞ்சி - புதினா சூப்

தேவையானவை:

புதினா - ஒரு கைப்பிடி

கேரட், பீன்ஸ்,

பீட்ரூட், பச்சை பட்டாணி,

காலிஃப்ளவர் - ஒரு கப்

பெரிய வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

இஞ்சி - ஒரு துண்டு

வெண்ணெய் - சிறிதளவு

மிளகுத்தூள் - சிறிதளவு

அரைத்த ஓட்ஸ் அல்லது

சோள மாவு - சிறிதளவு

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

குளிருக்கு இதமாகவும் மருந்தாகவும்... 
மூலிகை சூப்கள்!

செய்முறை: பெரிய வெங்காயம், தக்காளி, புதினா மற்றும் காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். இஞ்சியைத் தட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்விட்டு உருக்கி, ஒன்றன் பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, புதினா, காய்கறிகள், தட்டிய இஞ்சி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். தண்ணீர் சற்று சுண்டியதும் அரைத்த ஓட்ஸ் அல்லது சோள மாவைச் சிறிது சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். சற்று மசித்து வடிகட்டி, மிளகுத்தூள் தூவி சூடாகப் பருகவும்.