Published:Updated:

கடக்நாத் கருங்கோழிக்கறியில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்துள்ளதா? - மருத்துவர் விளக்கம்

கருங்கோழி
கருங்கோழி

மத்தியப்பிரதேசத்தின் மலைப்பகுதியில் உள்ள மக்கள் இந்தக் கோழியை ஆண்மை விருத்திக்கு ஏற்றது என்கிறார்கள். முற்காலத்தில் ஆண்களுக்கு இனப்பெருக்க வீரியத்தை அதிகரிக்க உதவுவதாகக் கூறி, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமலும், அதற்குச் சரியான மருந்து கண்டறிய முடியாமலும் திணறிக்கொண்டிருக்கும் நமக்கு இப்போதைக்கு மருந்தாக இருப்பது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளே. அதனால் அதிக நோய் எதிர்ப்புச்சக்தி உள்ள சத்தான உணவுகளைத் தேடித்தேடி உட்கொண்டு வருகிறோம்.

கோழிக்கறி
கோழிக்கறி

இந்நிலையில் கருங்கோழி இறைச்சிக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்தக் கோழியின் இறைச்சியை உண்டால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்று பலரும் நினைப்பதால் நாளுக்கு நாள் இந்த இறைச்சிக்கான தேவையும், விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஜனவரி மாதம் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ கருங்கோழி கறி, தற்போது 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கருங்கோழி முட்டை ஒன்று தற்போது 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சித்த மருத்துவர் விக்ரம் குமார்
சித்த மருத்துவர் விக்ரம் குமார்

மற்ற கோழிகளில் இருந்து கருங்கோழிகள் எவ்வாறு வேறுபடுகின்றன... இவற்றில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன... என்பது குறித்து சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் பேசினோம்.

கடக்நாத் கருங்கோழி:

கருங்கோழி
கருங்கோழி

மத்தியப் பிரதேசத்தின் நாட்டுக்கோழி வகையைச் சேர்ந்தவைதான் கடக்நாத் கருங்கோழிகள். இந்தக் கோழிகளின் உடலில் மெலனின் என்ற நிறமி அதிகம் உள்ளது. இதன் காரணமாக இவற்றின் இறக்கையில் தொடங்கி கறி, ரத்தம், என அனைத்துமே அடர் நிறம் கொண்டவை. யுனானி, சித்த மருத்துவம் போன்ற வைத்திய முறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பிக்கப்படுகின்றன. சங்ககால இலக்கிய பாடல்களிலும் கருங்கோழிகளின் மருத்துவ குணங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளன.

கருங்கோழியின் மருத்துவ குணங்கள்...

கருங்கோழி
கருங்கோழி

* நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கருங்கோழிக்கறி மிகவும் நல்லது. இதன் இறைச்சியில் உள்ள மெலனின் என்ற நிறமியின் காரணமாக நரம்புகள் வலுவடைந்து, விரிகின்றன.

* இதில் புரதச்சத்து மிகுந்துள்ளது. உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

* இதைச் சாப்பிடுவதால் ரத்தம் அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்களுக்கு ஏற்றது.

ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்: பயன்படுத்துவது குறித்த சந்தேகங்களும் விளக்கங்களும்!

* மத்தியப்பிரதேசத்தின் மலைப்பகுதியில் உள்ள மக்கள் இந்தக் கோழியை ஆண்மை விருத்திக்கு ஏற்றது என்கிறார்கள். முற்காலத்தில் ஆண்களுக்கு இனப்பெருக்க வீரியத்தை அதிகரிக்க உதவுவதாகக் கூறி, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

* ஆஸ்துமா மற்றும் கல்லீரல் பிரச்னை உள்ளவர்களும் தங்கள் உணவில் கருங்கோழி இறைச்சியைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

* நாட்டுக்கோழிகளின் முட்டைகளைப் போலவே இதிலும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

கருங்கோழி  முட்டை
கருங்கோழி முட்டை

* மற்ற முட்டைகளைவிடவும் இதில் அமினோ அமிலங்கள் அதிகம். பிரசவத்துக்குப் பிறகு வரும் தலைவலி, ஆஸ்துமா, சிறுநீரக வீக்கம் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாக இந்த முட்டைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

* சிரங்கு, வாதம் போன்ற நோய்கள் கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம். பெருங்காயம், மிளகு, பிரப்பங் கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பும் உண்டு.

* பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளைச் சரிசெய்யக்கூடிய சக்தியும் கருங்கோழிகறிக்கு உண்டு'' என்றார் மருத்துவர் விக்ரம்குமார்.

அடுத்த கட்டுரைக்கு