Published:Updated:

கிச்சன் கிளாஸிக்ஸ்: சத்துமாவு... கெத்துமாவு!

சத்துமாவு
பிரீமியம் ஸ்டோரி
சத்துமாவு

சாருலதா ராஜகோபால்

கிச்சன் கிளாஸிக்ஸ்: சத்துமாவு... கெத்துமாவு!

சாருலதா ராஜகோபால்

Published:Updated:
சத்துமாவு
பிரீமியம் ஸ்டோரி
சத்துமாவு

மீபத்தில் நமக்குத் தொலைபேசிய வாசகி ஒருவர், ‘‘டாக்டரிடம் சென்றிருந்தபோது... ஹெல்த் டிரிங்க்ஸ், ஓட்ஸ், விலை உயர்ந்த நட்ஸ் என்று என்னவெல்லாமோ குழந்தைகள் உட்பட தங்கள் குடும்பத்தில் அனைவரும் எடுத்துக்கொள்வதாக ஒரு பேஷன்ட் கூறினார். சுவாரஸ்யமின்றி தலையாட்டிக் கொண்டிருந்தார் டாக்டர். அவர் வெளியே சென்றதும், வரிசையில் இருந்த அடுத்த பேஷன்ட், ‘சத்துமாவுக் கஞ்சிதான் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறேன் டாக்டர். வேறெதுவும் ஸ்பெஷலா தர்றதில்ல...’ என்று கொஞ்சம் தயங்கியபடி சொல்ல, டாக்டர் முகத்திலோ அவ்வளவு பிரகாசம்!

கிச்சன் கிளாஸிக்ஸ்
கிச்சன் கிளாஸிக்ஸ்

‘சூப்பர்! தானியங்களைச் சேர்த்துச் செய்ற சத்துமாவை மிஞ்சிய ஆரோக்கிய உணவு எதுவும் இல்ல!’ என்று அவர் பாராட்ட, அந்த அம்மாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம்! அடுத்தடுத்து வரிசையில் காத்திருந்த அம்மாக்கள் அனைவரும் அதைக் குறித்துக்கொண்டோம்!’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 சாருலதா ராஜகோபால்
சாருலதா ராஜகோபால்

சரி, சத்துமிக்க அந்த சத்துமாவைத் தயாரிப்பது எப்படி... அதை வைத்து என்னென்ன உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம்... இதோ, சென்னை வாசகி சாருலதா ராஜகோபால் தரும் ரெசிப்பிகள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சத்துமாவு

அரைக்கத் தேவையானவை:

 • கோதுமை - கால் கிலோ

 • ராகி - கால் கிலோ

 • பொட்டுக்கடலை - கால் கிலோ

 • பயத்தம்பருப்பு - 100 கிராம்

 • சோளம் - 100 கிராம்

 • கம்பு - 100 கிராம்

 • தினை - 100 கிராம்

 • பார்லி - 100 கிராம்

 • ஜவ்வரிசி - 100 கிராம்

செய்முறை:

இவை அனைத்தையும் நன்கு காயவைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். இதைத் தவிர, 200 கிராம் பாதாம் மற்றும் 100 கிராம் முந்திரியை சேர்த்துப் பொடி செய்து தனியாக வைக்கவும். இந்த மாவுகளைப் பயன்படுத்தி உணவுகளைச் சமைத்து சாப்பிடலாம். இனி, இந்த சத்துமாவை வைத்து செய்யக்கூடிய உணவு வகைகளைப் பார்ப்போம்.

அல்வா
அல்வா

அல்வா

தேவையானவை:

 • சத்துமாவு, சோளமாவு - தலா ஒரு கப்

 • சர்க்கரை - 7 கப்

 • நெய் - 4 கப்

 • ஏலக்காய், குங்குமப்பூ கேசரி பவுடர் - சிறிதளவு

 • முந்திரி - 15

செய்முறை:

சர்க்கரையைத் தண்ணீர்விட்டு பாகு காய்ச்சவும். ஒரு கம்பி பதம் வரும்போது சத்துமாவு, சோளமாவு இரண்டையும் தண்ணீரில் பால் போல் கரைத்துக்கொண்டு, சர்க்கரை பாகில் விட்டுக் கிளறவும். இறுகி வரும்போது நெய்விட்டுக் கிளறி பொடித்த ஏலக்காய், குங்குமப்பூ, கேசரி பவுடர் சேர்க்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து இதனுடன் சேர்த்து, நெய் தடவிய தட்டில் பரப்பினால் சத்தான அல்வா ரெடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சப்பாத்தி

தேவையானவை:

 • சத்துமாவு - 3 டேபிள்ஸ்பூன்

 • சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 • ஆய்ந்து நறுக்கிய வெந்தயக்கீரை அல்லது பசலைக்கீரை அல்லது புதினா - 2 கைப்பிடி அளவு

சப்பாத்தி
சப்பாத்தி

செய்முறை:

இவை எல்லாவற்றையும் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து, சிறிது எண்ணெய் தடவி உருட்டிக்கொண்டு, கைகளால் வட்டமாக தட்டி, தோசைக்கல்லில் சுட்டு எடுக்க, மென்மையான சத்துமாவு சப்பாத்தி ரெடி.

கஞ்சி

தேவையானவை:

 • சத்துமாவு - 2 டேபிள்ஸ்பூன்

 • பாதாம் - முந்திரி பொடி - 2 டீஸ்பூன்

கஞ்சி
கஞ்சி

செய்முறை:

சத்துமாவுடன் பாதாம், முந்திரி பொடி கலந்து, தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக்கொண்டு, அடுப்பில் வைத்து, மாவு வேகும்வரை கொதிக்க விடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை, சிறிது ஏலக்காய்த்தூள் மற்றும் தேவையான அளவு பால் விட்டு சாப்பிடலாம் அல்லது தாளித்த கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, மோரில் கலந்தும் சாப்பிடலாம்.

வெல்ல உருண்டை

தேவையானவை:

 • சத்துமாவு - 2 டேபிள்ஸ்பூன்

 • பாதாம் - முந்திரி பொடி - ஒரு டீஸ்பூன்

 • வெல்லம் - 200 கிராம்

 • காய்ந்த திராட்சை - 2 டீஸ்பூன்

 • பொடியாக நறுக்கிய பேரீச்சை - 2 டீஸ்பூன்

 • ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

 • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • தேங்காய் (துருவியது) - அரை மூடி

வெல்ல உருண்டை
வெல்ல உருண்டை

செய்முறை:

வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டி, லேசாக இறுகும்வரை அடுப்பில் வைக்கவும். மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் அதில் சேர்த்து, நன்கு கிளறவும். இறுகி எல்லாம் சேர்ந்தாற்போல் வரும்போது, கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

தோசை

தேவையானவை:

 • சத்துமாவு - 3 டேபிள்ஸ்பூன்

 • அரிசிமாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

 • பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு, சீரகம் - சிறிதளவு

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தோசை
தோசை

செய்முறை:

சத்துமாவு, அரிசிமாவு இரண்டையும் எடுத்து தண்ணீர் ஊற்றி தோசைமாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் எண்ணெயில் தாளித்த கடுகு, சீரகம் இவற்றை மாவில் கலக்கவும். தேவையெனில் பெருங்காயப் பொடி அல்லது நறுக்கிய வெங்காயம், பூண்டை அவரவர் விருப்பப்படி கலக்கலாம். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, இந்த மாவை விட்டு தோசை வார்க்க... சுவையான சத்துமாவு தோசை ரெடி. நிறமாக இருக்க வேண்டும் என நினைத்தால், அரை டேபிள்ஸ்பூன் கடலை மாவும் சேர்த்துக் கரைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism