Published:Updated:

`புதிய உணவுகளால் நாவுக்கு சுவை; பாரம்பர்ய உணவுகளால் உடலுக்கு வலு!' - அமைச்சர் மனோ தங்கராஜ்

அமைச்சர் மனோ தங்கராஜ்

``ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் `வாணியனுக்கு கொடுக்காதவன் வைத்தியனுக்குக் கொடுப்பான்' என்று. அதாவது வாணிபம் செய்பவரிடம் பணம் செலவு செய்து, ஒழுங்காக உணவு வாங்கிச் சாப்பிடாமல் இருந்தால் வைத்தியருக்கு பணம் கொடுக்க வேண்டியது வரும் என்பார்கள்." - அமைச்சர் மனோ தங்கராஜ்.

`புதிய உணவுகளால் நாவுக்கு சுவை; பாரம்பர்ய உணவுகளால் உடலுக்கு வலு!' - அமைச்சர் மனோ தங்கராஜ்

``ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் `வாணியனுக்கு கொடுக்காதவன் வைத்தியனுக்குக் கொடுப்பான்' என்று. அதாவது வாணிபம் செய்பவரிடம் பணம் செலவு செய்து, ஒழுங்காக உணவு வாங்கிச் சாப்பிடாமல் இருந்தால் வைத்தியருக்கு பணம் கொடுக்க வேண்டியது வரும் என்பார்கள்." - அமைச்சர் மனோ தங்கராஜ்.

Published:Updated:
அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில், உணவுத் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்பு மிக்க உணவு வகைகள் சமைத்து கண்காட்சி நடத்தப்பட்டது.

தொடக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பேசுகையில், ``குமரி மாவட்டத்தின் சிறப்புமிக்க உணவுகளாக நேந்திரம் சிப்ஸ் மற்றும் மட்டிப்பழத்தைச் சொல்லுவார்கள். மட்டிப்பழத்தை ஓர் அறையில் வைத்தால் வீடு முழுவதும் அதன் வாசனை வீசும். உணவில் எப்படி கலப்படம் நடக்கிறது என்பதை பற்றி இந்தக் கண்காட்சியில் தெரிந்துகொண்டேன்’’ என்றவர், ``நாகர்கோவில் மாநகரத்தில் ரோட்டோரத்தில் ஆடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்வதையும், ஹோட்டல்களின் வெளியே பரோட்டா தயாரித்து விற்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

உணவுத் திருவிழாவில் அமைச்சர் மனோதங்கராஜ்
உணவுத் திருவிழாவில் அமைச்சர் மனோதங்கராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பேசுகையில், ``அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு உள்ள உணவுகளை இனம் கண்டு, அளவாகச் சாப்பிடுங்கள். அனைவரும் சரிவிகித உணவை வீட்டில் சமைத்து உண்ண வேண்டும்" என்றார். தொடர்ந்து, உணவுத் திருவிழாவை தொடக்கி வைத்த தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோதங்கராஜ் பேசினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இன்றைய இளைய தலைமுறைக்கு ஆரோக்கியம் குறைவாக இருக்கிறது. ஒரு முதியவர் என்னிடம் சொன்னார், `இன்றைய தலைமுறைக்கு எலும்பு பலம் கிடையாது' என்று. ஏன் அப்படி சொல்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, `முன்பு ஒரு மனிதன் இறந்த பின்பு அவரை புதைத்து 50 ஆண்டுகள் ஆனாலும், அங்கு தோண்டிப் பார்த்தால் எலும்பு இருக்கும். இப்போது ஐந்து ஆண்டிலேயே எலும்பு காணாமல் போய்விடுகிறது. எலும்பு பலம் குறைந்துவிட்டது என்று கூறினார்’' என்றார் அமைச்சர் மனோதங்கராஜ்.

உணவுத் திருவிழாவை தொடங்கிவைத்து பேசிய அமைச்சர் மனோதங்கராஜ்
உணவுத் திருவிழாவை தொடங்கிவைத்து பேசிய அமைச்சர் மனோதங்கராஜ்

மேலும் அவர், ``முறையான உழைப்பு, அளவான உணவு, ஓய்வு ஆகியவை மனிதனின் ஆரோக்கியத்துக்கு அவசியம். உழைப்பு குறைந்துவிட்டது. மக்கள் அதிகம் வெளியே வராததால் சூரியனிடம் இருந்து கிடைக்கும் வைட்டமின் 'டி' அவர்களுக்குக் கிடைப்பதில்லை. 35 வயதைத் தாண்டியவர்களுக்கு சுகர் வந்துவிடுகிறது. இது ரொம்ப மோசமன நிலை. மக்கள் பாரம்பர்ய உணவு முறைக்குத் திரும்ப வேண்டும். இயற்கை விவசாயத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். தரமான, பாதுகாப்பான உணவை அளவோடு உண்ண வேண்டும்.

புதிது புதிதாக வரும் உணவுகள் நாவுக்கு சுவையாக இருக்கும். ஆனால், வாழ்க்கை கசந்துபோகும். பாரம்பர்ய உணவுகள் உண்ண கஷ்டமாக இருக்கும். ஆனால், உடல் வலுப்பெறும். இதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

உணவை ருசிக்கும் அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த்
உணவை ருசிக்கும் அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த்

முன்பு ஒருவருக்குக் கடுமையான நோய் இருந்தால் அவரிடம் அதை சொல்லாமல், அவருடன் இருப்பவர்களிடம் விஷயத்தை சொல்லி அவரை கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படி சொல்வார்கள். இப்போது தலையில் சின்ன கட்டி இருந்தாலே, சர்ஜரி செய்ய வேண்டும் என நோயாளியிடமே கூறி டாக்டர்கள் பயமுறுத்துகிறார்கள்.

எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். `வாணியனுக்கு கொடுக்காதவன் வைத்தியனுக்கு கொடுப்பான்' என்று. வாணிபம் செய்பவரிடம் பணம் செலவு செய்து ஒழுங்காக உணவு வாங்கிச் சாப்பிடாமல் இருந்தால் வைத்தியருக்கு பணம் கொடுக்க வேண்டியது வரும் என்பார்கள். வெளிநாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் நுகர்வோருக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது. நுகர்வோருக்கு விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். நம் சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும்" என்றார்.