Published:Updated:

யாருக்குச் சொந்தம் ரசகுல்லா?... இறுதியில் வென்ற ஒடிசா!

ஜெனி ஃப்ரீடா

ரசகுல்லாவிற்கு மேற்கு வங்கமும் ஒடிசாவும் உரிமை கொண்டாடி வந்த நிலையில் அது ஒடிசா மாநிலத்துக்குச் சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசகுல்லா
ரசகுல்லா ( pixabay )

ரசகுல்லா தொடர்பாக சில ஆண்டுகளாக நிலவி வந்த குழப்பத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. வடஇந்தியாவின் முக்கிய இனிப்புப் பண்டமான ரசகுல்லா, ஒடிசா மாநிலத்துக்குச் சொந்தமானது என்று சான்றளிக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை புவிசார் குறியீட்டுக்கான பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

ரசகுல்லா
ரசகுல்லா

இதற்கான அறிவிப்பை புவிசார் குறியீட்டுக்கான பதிவாளர் வெளியிட்டுள்ளார். ரசகுல்லாவிற்கு மேற்கு வங்கமும் ஒடிசாவும் உரிமை கொண்டாடி வந்த நிலையில் அது ஒடிசா மாநிலத்துக்குச் சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரசகுல்லாவிற்கு புவிசார் குறியீடு எண் 612 வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்த ஒடிசா சிறுதொழில் கழகத்திடம் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், 'ஒடிசாவில் தயாரிக்கப்படும் ரசகுல்லாக்கள், பாலாடையில் தயாரிக்கப்பட்டு சர்க்கரைப்பாகில் சமைக்கப்படும். மிகவும் மிருதுவாக, சாறு நிறைந்த, பற்களால் கடிக்காமலேயே வாயில் வழுக்கிக்கொண்டு ஓடும் வகையில் தயாரிக்கப்படுபவை.

ஒடிசா மாநிலம்
ஒடிசா மாநிலம்
odishaassembly.nic.in

ஒடிசாவில் தயாரிக்கப்படும் ரசகுல்லாவில் எந்தவிதமான செயற்கை நிறங்களும் சேர்க்கப்படாது. அவை வெள்ளை நிறைத்தில் வட்ட வடிவத்தில் காணப்படும். மாநிலத்தில் 30 மாவட்டங்களில் இந்த இனிப்பு வகை தயாரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ஒடிசா ரசகுல்லாக்கள் பூரி ஜெகநாதர் கோயிலுடன் தொடர்புடையது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் இந்த மனுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பலராம்தாஸ் 15-ம் நூற்றாண்டில் எழுதிய ஒடிய ராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் ரசகுல்லா தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

யாருக்குச் சொந்தம் ரசகுல்லா?... இறுதியில் வென்ற ஒடிசா!
pixabay

இதுதவிர, பல்வேறு ஒடிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய படைப்புகளிலும் ரசகுல்லா தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தது தொடர்பான சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் ரசகுல்லா, ஒடிசாவின் இனிப்பு வகை என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக், 'ஒடிசாவின் ரசகுல்லாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பாலாடையில் தயார்செய்யப்படும் நாவில் நீர் ஒழுக வைக்கும் உலகப் புகழ்பெற்ற ஒடிசாவின் ரசகுல்லா பல நூற்றாண்டுகளாகவே ஜெகநாதப் பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது' என்று தெரிவித்திருந்தார்.