தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஆப்பிள்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை... பாக்கெட் ஃபிரெண்ட்லி ஆரோக்கிய உணவுகள்!

ஆரோக்கிய உணவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கிய உணவுகள்!

“ஆரோக்கிய உணவு என்பது பிஸ்தா, பாதாம் என விலை உயர்ந்த உணவுகளைச் சாப்பிடுவது அல்ல”

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் கற்றுக்கொடுக்க கோவிட்-19 என்றொரு பெருந்தொற்று வர வேண்டியிருந்தது. ‘ஹெல்தி ஃபுட்ஸ்’ என்று கூகுளிடம் கேட்டால் வெளி நாட்டுக் காய்கறிகளையும் பழங்களையும் கண்ணைக்கவரும் படங்களுடன் பட்டிய லிடும். அதைப் பார்த்துவிட்டு, ஊர் பெயர் தெரியாத ஏதேதோ உணவுகளை வாங்கிக் குவித்து, பர்ஸை காலியாக்குகிறோம். உண்மை யில் குறைவான செலவிலேயே ஆரோக்கிய மான உணவுகளை நம்மால் எடுத்துக்கொள்ள முடியும்.

எஸ்.சந்திரகலா ராஜ்குமார்
எஸ்.சந்திரகலா ராஜ்குமார்

“ஆரோக்கிய உணவு என்பது பிஸ்தா, பாதாம் என விலை உயர்ந்த உணவுகளைச் சாப்பிடுவது அல்ல” என்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் எஸ்.சந்திரகலா ராஜ்குமார். மேலும், ஆரோக்கிய உணவுகளைத் தேர்வு செய்வது எப்படி என்பதை விளக்குகிறார் அவர்.

தாய்ப்பால்

குழந்தையைப் பிறந்ததிலிருந்தே ஆரோக்கிய உணவுகளுக்குப் பழக்க வேண்டும். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால்தான் ஆரோக்கிய மான உணவு. அதைவிடுத்து புட்டிப்பால், விலையுயர்ந்த டின் உணவுகளை வாங்கிக் கொடுப்பது ஆரோக்கியத்தைத் தராது.

பருவகால காய்கறிகள், பழங்கள்

நம்மூரில் விளையும் காய்கறிகள், பழங் களிலேயே நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, அந்தந்த சீசனில் விளையும் காய்கறிகள், பழங்களைத் தேர்வு செய்து சாப்பிடுவது நல்லது.

ஆப்பிள்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை... நம் வீட்டுக் கொல்லையில் காய்த்துக் குலுங்கும் கொய்யா, பப்பாளிப் பழங்களைச் சாப்பிடலாம். விலை அதிக மான விதையில்லா திராட்சைக்கு பதில் உள்ளூரில் விளையும் பன்னீர் திராட்சைக்கு மாறலாம். எல்லாப் பருவங் களிலும் குறைவான விலையில் கிடைக்கும் சத்தான வாழைப்பழத்தை மறந்துவிட வேண்டாம்.

ஆப்பிள்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை... பாக்கெட் ஃபிரெண்ட்லி ஆரோக்கிய உணவுகள்!

உரித்ததை வாங்காதீர்கள்!

பூண்டு, வெங்காயம், மாதுளம்பழம், அன்னாசிப்பழம், பப்பாளி உள்ளிட்டவற்றைத் தோலுரித்து, வெட்டி பிளாஸ்டிக் கவரால் மூடி விற்பனை செய்கிறார்கள். காய்கறிகள், பழங்களை வெட்டியதும் பயன்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் காற்றுக்கு வெளிப்பட்டு, ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து அவை சத்துகளை இழக்கும். கடைகளில் மூன்று எலுமிச்சைப்பழங்கள் 10 ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு கட்டு புதினா 5 ரூபாய்க்குக் கிடைக்கும். அவற்றை வாங்கி சுத்தமான முறையில் வீட்டில் அனைவரும் ஜூஸ் போட்டுக் குடிக்கலாம். அதை விடுத்து, கடைகளில் ‘லைம் மின்ட் கூலர்’ என்ற ஸ்டைலான பெயரில் விற்கப்படுவதை ஆன்லைனில் ஆர்டர் செய்து குடித்தால் சேவை வரியுடன் சேர்த்து 100 ரூபாயை எட்டும் செலவு.

தேவைக்கு வாங்குங்கள்!

ஆன்லைனில் ஆஃபர் போய்க்கொண்டிருக் கிறது என்று கிலோ கணக்கில் காய்கறிகள், பழங்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஒற்றைக் குடும்பங்கள் அதிகரித்துவிட்ட நிலையில், ஒருநாளைக்கு ஓர் ஆப்பிளைச் சாப்பிட்டு காலி செய்வதே சிரமம். அப்படியிருக்க ஒரு கூடை ஆப்பிள் எதற்கு? ஆஃபர் என்ற பெயரில் நம் பர்ஸுக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்வதுதான் மிஞ்சும்.

இதற்குப் பதில் ஒரு வாரத்துக்கு, ஒரு குடும்பத்துக்கு என்ன தேவை என சிந்தித்து மூன்று ஆப்பிள், ஒரு பப்பாளி, இரண்டு மாதுளை என்று கணக்கிட்டு வாங்கினால் பணத்தையும் மிச்சப்படுத்தலாம், உணவுப் பொருள்களும் வீணாகாமல் இருக்கும். குளி ரூட்டப்பட்ட பெரிய கடைகளில் பளபளப்பாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருள் களுக்கான விலையும் அதிகமாகத்தான் இருக்கும். அவற்றுக்கு பதில் பழம், காய்கறிகளை சிறு வியாபாரிகளிடம் வாங்குவது பணத்தை மிச்சப்படுத்தும்.

பழைமைக்குத் திரும்புங்கள்!

அதிக விலை கொடுத்து வீட்டில் கேக், பிஸ்கட், இனிப்புகள், நொறுக்குத்தீனிகள் வாங்கி வைப்பதைவிட கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்ற விலை குறைந்த, சத்துகள் நிறைந்த நம் பாரம்பர்ய தின்பண்டங்களை வாங்கி வைக்கலாம். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கடைகளில் விற்கப்படும் ஊட்டச்சத்து பவுடர்களுக்கு பதில் சத்துமாவுக் கஞ்சி, கேழ்வரகு, கம்பு கூழ் உணவுகளுக்கு மாறலாம்.

ஆரோக்கியமான ‘பட்ஜெட்’ உணவுகள்

ஆப்பிள்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை... பாக்கெட் ஃபிரெண்ட்லி ஆரோக்கிய உணவுகள்!