Published:Updated:

பேலியோ, கீடோ, வீகன், பேலன்ஸ்டு டயட்...எது பெஸ்ட்? 5 பளிச் கேள்வி – பதில்கள் #NationalNutritionMonth

#NationalNutritionMonth
News
#NationalNutritionMonth

புதிய புதிய உணவுமுறைகள் தோன்றி மக்களைக் குழப்பி வருகிறது. இதில், 'எது சரியானது, எது முறையானது, எல்லோருக்குமானது எது?' என ஊட்டச்சத்து நிபுணரிடம் கேட்டோம். "சந்தேகமே இல்லை, சரிவிகித உணவுதான் (Balanced Diet) அனைவருக்குமானது!" என்றார்.

ஊட்டச்சத்து குறித்த நன்மைகளையும், அதுகுறித்த விழிப்புணர்வையும் அதிகப்படுத்தும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம், தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் (National Nutrition Month) கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் அன்றாடம் போதியளவு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டுமென்ற விழிப்புணர்வை அதிகப்படுத்துவதுதான் இந்த மாதத்தின் நோக்கம். முழுமையான ஊட்டச்சத்து கிடைக்க, முறையான உணவுமுறையை (டயட்) உருவாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Dietitian Karpagam Vinoth
Dietitian Karpagam Vinoth

இன்றைய சூழலில் பேலியோ, கீடோ, வீகன், மெடிடேரியன், குளூட்டன் ஃப்ரீ, ரெயின்போ, லோ-கார்ப், லோ-ஃபேட், லோ கலோரி, ஹை கலோரி என ஆரோக்கியத்தின் அனைத்துக் கதவுகளிலும் ஒரு டயட் பின்பற்றப்படுகிறது. உணவு வகைகளின் எண்ணிக்கையைவிட, புதிய புதிய உணவுமுறைகள் தோன்றி மக்களைக் குழப்பி வருகிறது. இதில், 'எது சரியானது, எது முறையானது, எல்லோருக்குமானது எது?' என ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் விநோத்திடம் கேட்டோம். "சந்தேகமே இல்லை, சரிவிகித உணவுதான் (Balanced Diet) அனைவருக்குமானது!" என்றார். சரிவிகித உணவு தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்தார் அவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சரிவிகித உணவென்றால் என்ன?

உணவில் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், பால் சார்ந்த பொருள்கள், அசைவம், கொழுப்புச்சத்து மற்றும் எண்ணெய் வகைகள் ஆகியவை அனைத்தும் சம அளவில் இருப்பதுதான் சரிவிகித உணவு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் அளவுகோலை எப்படி நிர்ணயிப்பது?

ஒருவர் உடலின் ஆற்றலைப் பொறுத்துதான் அவருக்கான ஊட்டச்சத்து கணக்கிடப்படும். ஆற்றல் என்பது, உணவிலிருந்து கிடைக்கும் கலோரியின் அளவைக்கொண்டு கணக்கிடப்படும். அந்தவகையில், ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ஒருநாளில் 1,500 கலோரிகள் வரை எடுத்துக்கொள்வது அவசியம்.

#NationalNutritionMonth
#NationalNutritionMonth

சரிவிகித உணவிலும்கூட உணவின் அளவுகோல், நபருக்கு நபர் வேறுபடும் என்பதால், தொற்றா நோய்கள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெற்று, தங்களுக்கான பிரத்யேக உணவுமுறையை உருவாக்கிக்கொள்ளவது சிறந்தது.

சரிவிகித உணவின் நன்மைகள் என்ன?

நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடென்ட், வைட்டமின், கலோரிகள் அனைத்தும் தேவையான அளவு கிடைக்கும்.
மந்த மனநிலையில்லாமல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
உடலின் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

சரிவிகித உணவுமுறைதான் மட்டுமே சிறந்தது ஏன்?

பிற உணவுமுறைகளோடு ஒப்பிட்டால், இதன் பின்னணியைப் புரிந்துகொள்ளலாம். `பேலன்ஸ்டு டயட்' உட்பட, எந்த உணவுமுறையைப் பின்பற்றுவோருக்கும் ஏதேனுமொரு இலக்கு இருக்கும். அதாவது, உடல் எடை அதிகரிக்க வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், தசை வலிமையை அதிகரிக்க வேண்டும், தொப்பையைக் குறைக்க வேண்டும் என்பது போன்ற இலக்குகள் இருக்கும்.

#NationalNutritionMonth
#NationalNutritionMonth

சரிவிகித உணவைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கைதான் இலக்காக இருக்கும். மற்ற அனைத்து உணவுமுறைகளிலும், குறிப்பிட்ட இலக்கை அடைந்தவுடன் அதை நிறுத்த வேண்டிய சூழல் உருவாகும். ஆனால், இதில் அந்தப் பிரச்னை கிடையாது. தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பின்பற்றலாம்.

வேறு டயட்டைப் பின்பற்றுபவர்கள் சரிவிகித உணவுக்கு மாறலாமா?

நிச்சயம் மாற முடியும். பேலியோ, கீடோ போன்ற உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள், குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு அதைக் கைவிட வேண்டும். இல்லையென்றால், அடைய வேண்டிய இலக்கைத் தாண்டியும் உடல் அந்த நிலையை நீடித்துக்கொண்டே இருக்கும். உதாரணமாக, உடல் எடையைக் குறைப்பதற்கான டயட்டைப் பின்பற்றுபவர்கள், குறிப்பிட்ட எடையை அடைந்தவுடன் அந்த உணவுமுறையை நிறுத்த வேண்டும். இல்லையெனில், எடை மேலும் மேலும் குறைந்துகொண்டேயிருக்கும்.

#NationalNutritionMonth
#NationalNutritionMonth

டயட்டை முற்றிலுமாகக் கைவிடும்பட்சத்தில், 'ரிவெர்ஸ் ரியாக்‌ஷன்' நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம். அதாவது, உடல் எடை அதிகரித்து மீண்டும் பழைய நிலைக்குச் சென்றுவிடலாம். அதனால் வேறு டயட்டைப் பின்பற்றி, அந்த இலக்கை அடைத்தவர்கள், சரிவிகித உணவுக்கு மாறிவிடுவது நல்லது. அப்போதுதான் உடலை சுய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். எப்போதுமே சரிவிகித உணவுமுறைதான் அனைவருக்கும் நல்லது. ஏனெனில், மற்ற டயட்களில் நிரந்தரமான பலன்களை எதிர்பார்க்க முடியாது.