Published:Updated:

பானி பூரி தண்ணீரில் காலரா கிருமி; நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்குத் தடை!

காலரா |பானி பூரி

காலராவை உண்டாக்கும் பாக்டீரியா பானி பூரி விற்கும் தண்ணீரில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேபாளத்தில் காலராவினால் மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பானி பூரி தண்ணீரில் காலரா கிருமி; நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்குத் தடை!

காலராவை உண்டாக்கும் பாக்டீரியா பானி பூரி விற்கும் தண்ணீரில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேபாளத்தில் காலராவினால் மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Published:Updated:
காலரா |பானி பூரி

மக்கள் விரும்பிச் சாப்பிடும் தெருக்கடை உணவுகளில் பானி பூரி முக்கியமானது. வெளியே செல்லும் மக்கள், பானி பூரி கடையைக் கண்டால், பெரும்பாலும் சாப்பிடாமல் வருவதில்லை. விலையும் சுவையும் ஒருசேர ஈர்ப்பதால் மக்களின் விருப்பமான தெருக்கடை உணவுகளில் பானி பூரிக்கு தனி இடமுண்டு.

பானி பூரி
பானி பூரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

காலராவை உண்டாக்கும் பாக்டீரியா கிருமிகள், பானிபூரியுடன் விற்கப்படும் தண்ணீரில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்கே பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நேபாளத்தில் காலராவினால் மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 5 பேர் காத்மாண்டு நகரைச் சேர்ந்தவர்கள். சந்திரகிரியில் ஒருவருக்கும், புதனில்கந்தாவில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பி உள்ளனர் என நேபாளத்தின் சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காலரா
காலரா

கோடைக்காலம் மற்றும் மழைக்காலத்தின் போது நீரினால் பரவக்கூடிய நோய்கள் மனிதர்களை பாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். எனவே மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். காலரா பாதிப்பின் அறிகுறிகள் தோன்றும் பட்சத்தில் தாமதிக்காமல், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சையைப் பெறும்படியும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.