Published:Updated:

சுவையும் சத்தும்...! சுட்டீஸ்களுக்குப் பிடித்த பாஸ்தா சாலட்!

சுட்டீஸ்களுக்குப் பிடித்த சுவையும் சத்தும் கொண்ட பாஸ்தா சாலட் செய்வது எப்படி? - விளக்குகிறார் ஜானகி அஸாரியா #Food

Pasta Salad
Pasta Salad

பிள்ளைகளுக்கு பாஸ்தா பிடிக்கும்; அம்மாக்களுக்கோ பிள்ளைகளுக்குச் சத்தான காய்கறிகளும் பழங்களும்தான் கொடுக்கப் பிடிக்கும். இந்தப் பஞ்சாயத்தைத் தீர்க்க, இரண்டையும் சேர்த்து பாஸ்தா சாலட் சொல்லித்தரப் போகிறார் ஜானகி அஸாரியா.

Chef Janaki Azaria
Chef Janaki Azaria

கற்றுக்கொள்ளுங்கள்; உங்கள் வீட்டுப் பொடிசுகளின் நாக்கைச் சப்புக்கொட்ட வையுங்கள்.

Vikatan

தேவையானவை:

வேகவைத்த பாஸ்தா - ஒரு கப் ஊறவைத்து

உப்புப்போட்டு வேகவைத்த வெள்ளை நிறக் கொண்டைக்கடலை - அரை கப்

ஆவியில் வேகவைத்த பிரக்கோலி அல்லது காலிஃப்ளவர் - அரை கப்

நறுக்கிய செர்ரி தக்காளி 7 - 8 (கிடைக்கவில்லையென்றால் இறுக்கமான ஒரு தக்காளியை நறுக்கிப் பயன்படுத்தலாம்)

பெரிய துண்டுகளாக நறுக்கிய பேரிக்காய் அல்லது ஆப்பிள் - பாதி மட்டும்.

மாதுளை முத்துக்கள் - 2 டேபிள்ஸ்பூன்

பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் - பாதியளவு

பெரிய துண்டுகளாக நறுக்கிய வெள்ளரி - பாதியளவு

லெமன் ஜூஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்

ஆலிவ் ஆயில் அல்லது ரீஃபைண்ட் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்

துளசி இலை - 4 (கிடைக்கவில்லையென்றால் ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்துமல்லி பயன்படுத்தலாம்)

இத்தாலியன் ஹெர்ப் - 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

பூண்டு பவுடர் அல்லது பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

டிரெஸ்ஸிங்: ஒரு பவுலில் ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸ், மிளகுத்தூள், பூண்டு பவுடர், இத்தாலியன் ஹெர்ப், கொத்துமல்லி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்தால் பாஸ்தாவுக்கான டிரெஸ்ஸிங் ரெடி.

சாலட் அசெம்பிள்: ஒரு பெரிய பவுலில் வேக வைத்த பாஸ்தா, வெள்ளரி, வெங்காயம், தக்காளி, பிரக்கோலி, கொண்டைக்கடலை, மாதுளை முத்துக்கள், கையால் பிய்த்துப்போட்ட பேசில் இலைகள் ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, ரெடியாகவுள்ள டிரெஸ்ஸிங்கை ஊற்றி, இரண்டு கரண்டிகளால் கிளறி, ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். மறுநாள் சாப்பிட்டால் ருசி நாக்கை அசத்தும். இதைக் குழந்தைகளின் லன்ச் பாக்ஸுக்கும் கொடுத்தனுப்பலாம்.

Vikatan