Published:Updated:

பன் அல்வா, பொல்டே சைனா, குடி வறுவல் சிக்கன்; சப்புக்கொட்ட வைக்கும் சௌராஷ்டிரா உணவுத் திருவிழா!

சௌராஷ்டிரா உணவுகள்

சௌராஷ்டிரா மக்களின் உணவுப் பாரம்பர்யம் தனித்த அடையாளமுள்ளது. வெரைட்டி ரைஸ் முதல் பிரைடு ரைஸ் வரை வித்தியாசமான சுவையில் அசத்துவார்கள். அம்பட் பாத் என்ற புளிச்சோறு, புவம் என்ற இட்லி மாதிரியான உணவு என எல்லாம் அசத்தல்.

பன் அல்வா, பொல்டே சைனா, குடி வறுவல் சிக்கன்; சப்புக்கொட்ட வைக்கும் சௌராஷ்டிரா உணவுத் திருவிழா!

சௌராஷ்டிரா மக்களின் உணவுப் பாரம்பர்யம் தனித்த அடையாளமுள்ளது. வெரைட்டி ரைஸ் முதல் பிரைடு ரைஸ் வரை வித்தியாசமான சுவையில் அசத்துவார்கள். அம்பட் பாத் என்ற புளிச்சோறு, புவம் என்ற இட்லி மாதிரியான உணவு என எல்லாம் அசத்தல்.

Published:Updated:
சௌராஷ்டிரா உணவுகள்

கோயில் விழா, இலக்கிய விழா, சினிமா விழா, அரசியல் விழா என தினந்தோறும் திருவிழாக்களால் களைகட்டும் மதுரையில், ஹோட்டல்களும் உணவு படைப்பதை திருவிழாபோல கொண்டாடுகின்றனர்.

சிக்கன் வறுவல்
சிக்கன் வறுவல்

இதன் காரணமாக சுவையான உணவைத்தேடி வெளியூர் மக்கள் மதுரைக்கு சுற்றுலாவே வந்துகொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளியூர், உள்ளூர் மக்கள் என்ற பேதமில்லாமல் வெரைட்டியான உணவுகளைத் தயாரித்து வழங்குவதில் மதுரையிலுள்ள ஹோட்டல்கரர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.

மட்டன் வறுவல்
மட்டன் வறுவல்

இந்நிலையில், அனைத்து வகையான மக்களையும் ஈர்க்கும் வகையில் மதுரையில் பிரபலமான `ஹோட்டல் கோர்ட் யார்ட் இன் மேரியாட்', சௌராஷ்டிரா உணவுத் திருவிழாவை வருகின்ற 12-ம் தேதி முதல் தொடங்குகிறது.

மதுரையில் வாழுகின்ற பல்வேறு கலாசார பின்னணி கொண்ட மக்களின் பாரம்பர்ய முறையில் மிருதுவாகவும் காரசாரமாகவும் சைவ-அசைவ உணவுகள் கிடைத்து வருகின்றன.

வெரைட்டியான இட்லி
வெரைட்டியான இட்லி

அதில் சௌராஷ்டிரா மக்களின் உணவுப் பாரம்பர்யம் தனித்த அடையாளமுள்ளது. வெரைட்டி ரைஸ் முதல் பிரைடு ரைஸ் வரை வித்தியாசமான சுவையில் அசத்துவார்கள்.

வெளியில் அறியப்படாத அவர்கள் உணவு வகைகள் ஏராளம் உள்ளன. அவற்றை இந்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் சௌராஷ்டிரா உணவுத்திருவிழா நடைபெற உள்ளது.

அம்பட் பாத் - புளிச்சோறு
அம்பட் பாத் - புளிச்சோறு

அதற்கு முன்னோட்டமாக ஹோட்டல் கோர்ட் யார்ட் இன் மேரியாட்டில் முக்கியமான உணவு சிலவற்றை காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

வெங்காயம், கொத்தமல்லி அதிகம் போட்ட சுவையான வெஜ் சூப், அருமையான டேஸ்டில் அம்பட் பாத் என்ற புளிச்சோறு, புவம் என்ற இட்லி மாதிரியான உணவு என எல்லாம் அசத்தல்.

கொத்தவரை பொரியல்
கொத்தவரை பொரியல்

சேப்பங்கிழங்கு பொடிமாஸ், பன் அல்வா, முள்ளங்கி குழம்புடன், அசைவத்தில் பொல்டே சைனா என்ற பெயரில் நம்ம ஊர் மட்டன் உப்புக்கறியை வேற லெவலில் செய்திருந்தார்கள். குடி வறுவல் என்ற சிக்கன் டிஷ்... இப்படி பல சௌராஷ்டிரா டிரடிஷனல் வெரைட்டிகளை அருமையாகச் செய்திருந்தார்கள்.

உணவுத் திருவிழா நடக்கும் நாளில் இன்னும் அதிகமான டிஷ்களைத் தயாரிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த உணவுகளைத் தயாரிக்க செஃப் விஜயராகவனுக்கு சௌராஷ்டிரா உணவு ஆர்வலர் அருணா ரமேஷ் உதவி செய்கிறார்.

செப் விஜயராகவன்-அருணா ரமேஷ்
செப் விஜயராகவன்-அருணா ரமேஷ்

சௌராஷ்டிரா சிறுகுறு தொழில் சங்கத்துடன் இணைந்து கோர்ட் யார்ட் ஹோட்டல் நடத்தும் உணவுத் திருவிழாவால் வரும் நாள்களில் உணவுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்.