சென்னை எனக்கு எப்போதும் அந்நியம் (ஆங்கிலம் போல). அதன் பூலோகம் எனக்கு பிடிபடுவதே இல்லை. இந்த முறை மழையும் சேர்ந்து கொண்டது. அத்யாய கடமையாக 2 வேலைகள் இருந்த போதும். மார்க்கின் உதவியால் பல ஆண்டுகள் கழித்து திவான் அப்துல் காதரை சந்திக்கப் போகும் நிகழ்வு தான் என்னை கூகுள் மேப் உதவியுடன் உந்தி இழுத்து சென்றது (அந்தப் பக்கம் ஆட்டோ ரிக் ஷாவுக்கும் சைக்கிள் காரனுக்கும் சண்டையென எச்சரிக்கும் துல்லிய சாட்டிலைட் நுட்பம்). வேளச்சேரி சென்று திவான் வீட்டை அடைந்தபோது அதிர்ச்சியூட்டும் ஆச்சரியமாய் ஸ்டாலினும் இருந்தான் (திவானின் மெனக்கடல்). ஆ.மு (ஆண்ட்ராய்டுக்கு முன்) காலத்து எங்கள் எட்டாம் வகுப்பு நட்பைச் சிலாகித்தால்.... ஏன்ப்பா இப்படி ரொம்ப எக்ஸைட் ஆகிற என திவானின் மகள் கேட்டது போல் ஆ.பி (ஆண்ட்ராய்ட்டுக்கு பின்) தலைமுறையும் எள்ள கூடும் என்பதால்... மதிய உணவுக்கு செல்வோம்.
பிள்ளைகளைக் காக்க வைத்து, நாங்கள் மூவரும் சாப்பிட அமர்ந்தது 'ஏதோ போல்' இருந்த போதிலும் அசைவ உணவை சகோதரி பறிமாறியதும், ருசிப்பதற்கு முன்னே எனக்கு திவானின் அம்மா பரிமாறிய (35 வருடம் முன்) சிக்கன் குருமா சப்பாத்தி நினைவு வந்தது. சொன்னேன்... மாமியார் புகழுரை எந்த மருமகளுக்குதான் பிடிக்கும்? எனினும் நான் சொல்ல மறந்தது, மருமகளின் அந்த இறால் கிரேவி இன்னும் பல வருடங்கள் ருசி மண்டல grey matter -ல் நிற்கும்.

உணவகங்களில் அசைவம் சாப்பிட்டால் அடுத்த 12மணி நேரத்திற்கு வேறு எந்த உணவையும், வயிறு ஏற்க மறுக்கும். ஆனால் அன்று திவான் மனைவியின் பிரியாணியும், இறால் கிரேவியும் (மீன் வறுவல் வேறு.) அடுத்த 3 மணி நேரத்தில் மாயமாகி இருந்ததது. அதுதான் வீட்டுச் சமையலின் ஆச்சர்யம்.
மருத்துவன் என்று அறிமுகமாகும்போது மூன்றில் இரண்டு பேர் கேட்கும் கேள்விகளாவன...
1, டாக்டர் உடம்பு எடையை எப்படி குறைக்கிறது?....
2, சுகருக்கு வாழைப்பழம் சாப்பிடலாமா?... டாக்டர்??
3, இப்போ எல்லாம் இட்லிக்கு பதில் சப்பாத்தி தான் சாப்பிடுறன் ஆனாலும் சுகர் கொறையல?!....??
பதில்கள் இணையமெங்கும் குவிந்து கிடக்கின்றன. தெருவுக்கு இரண்டு பேர் Youtube சேனல் தொடங்கி சாப்ஸ்க்ரைப் செய்ய சொல்லி இம்சிக்கிறார்கள்...
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎனது பதில் வள்ளுவம் தான்..
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
நம் சாப்பிடும் உணவு நமது உடலுக்கு உற்றதா?? அற்றதா?? என்பதை அடுத்த வேளை பசி சொல்லி விடும்.
3 அன்னக் கரண்டி சிவப்பரிசி சோறும், விறால் மீன் குழம்பும் மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டாலும் மாலை 4 மணிக்கு வயிறு காலியாக உணரப்படுகிறது எனின் நீங்க சாப்பிட்டது உற்றது.. மாறாக பாரம்பரிய சைவ உணவகத்தில் அளவு சாப்பாடு சாப்பிட்டாலும் மாலை வயிறு மந்தமாகத்தான் இருக்கிறது. அப்படி எனின் நீங்க சாப்பிட்டது அற்றது...
அசைவம் சாப்பிட்டால், எண்ணெய் அதிகம் சேர்த்தால் கொலஸ்ட்ரால் கூடி விடும் என்ற தவறான கருத்தை எந்த மீடியாவாலும் மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியவில்லை.
நமது பாரம்பரிய உணவு முறையில்..
60% மாவுச்சத்து (கார்போஹைடிரேட்)
30% புரதம் (ப்ரோட்டின்)
10% கொழுப்பு (கொலஸ்ட்ரால்)
60:30:10 என்ற விகிதங்கள் (இருக்கின்றன) இருந்தன.
2 கப் அரிசி + 1 கப் உளுந்து = இட்லி (கூட தேங்காய் சட்னி)
கூட்டி கழித்து பாருங்க...
நவீன மருத்துவ அறிவியல் கார்போஹைட்ரெட் என்ற மாவுச் சத்தை குறைக்க/தவிர்க்க வலியுறுத்துகிறது. கீட்டோ (Keto), பேலியோ (Paleo) போன்ற உணவு முறைகள் வெறும் புரதத்தை அடிப்படையாக கொண்டவை. புரதமும் நார்ச்சத்தும் சரியான அளவில் உணவாக்கினால் நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற பல நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

புரத உணவுகளுக்கு அசைவமே சிறந்தது. தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் உள்ள புரதம் முழுமை அடையாத புரதம் (Incomplete Protien). உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் சில சைவ புரதங்களில் இல்லை. லைசின்(Lysine) இல்லாத அரிசியை சோறாக்கி, மெத்தியோனின் (methionine) இல்லாத பருப்பை சாம்பாராக்கி கலந்த தென்னிந்திய பாரம்பரிய உணவு வியப்பூட்டும் முழுமையான புரதம். (ஆனால் புரதம் வெறும் 30% மட்டுமே)
அசைவ புரதங்களில் சில சிக்கல்கள்:
> எண்ணெயில் பொறித்தால்.. அதீத சூட்டில் புரதம் திரிந்து விடும். (உடலுக்கு கேடு)
> சரியான அளவில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம்.(புரதம் மட்டும் சாப்பிடும்பட்சத்தில்)
>நார்ச்சத்து அறவே இல்லாத அசைவ உணவுகளில்... நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளையம் சேர்த்து கொள்வது நல்லது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
3 முதல் 5 வாரங்களுக்கு ஒரு உணவைத் தொடர்ந்து சாப்பிட்டால் நமது மூளை நிரந்தரமாக அந்த ருசிக்கு பழகி விடுமாம் (அதுவே பழகிடும்ய்யா!)
மற்ற பல காரணங்கள் இருந்தாலும் நமது உணவு பழக்க வழக்கங்கள் ஆரோக்கியத்தின் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. நமது தேவைக்கு அதிகமான உணவு உடலில் கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. விளைவு உடல் பருமன். நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் இந்தக் கொழுப்பு திசுக்களால் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை (Insulin Resistance).
சர்க்கரை நோயும், உடல் பருமனும் சேர்ந்து விட்டால்.. உயர் ரத்த அழுத்தமும் கொலஸ்ட்ராலும் அழையா விருந்தாளிகளாக வந்து நிரந்தரமாகத் தங்கி விடும் அபாயம் உள்ளது.அளவுக்கு அதிகமான மாவுச்சத்து உணவுகள்தாம் உடலில் ட்ரைகிளிசரைடுகளாக மாறி கணைய பாதிப்புகளை ஏற்படுத்தும், என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

எல்லாம் சரி, ருசியா சாப்பிட்டு பழகியாச்சே? வெறுமனே வேக வைத்த மீனையும் சிக்கனையும் எப்படி சாப்பிடுவது அப்படிங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. அதற்கும் ஆராய்ச்சிகள் பதில் சொல்லி விட்டன.
3 முதல் 5 வாரங்களுக்கு ஒரு உணவைத் தொடர்ந்து சாப்பிட்டால் நமது மூளை நிரந்தரமாக அந்த ருசிக்கு பழகி விடுமாம் (அதுவே பழகிடும்ய்யா!). உதாரணத்திற்கு சர்க்கரை, பால் சேர்க்காமல் தேநீர் பருகி வந்தால்.. ஆறாவது வாரம் பஸ் ஸ்டாண்ட்க்கு எதுக்க டீ சூப்பரா இருக்கும் என நண்பன் அழைத்தாலும் போகமாட்டீர்கள் (நீங்க நம்பலானாலும் அதான் நெசம்).