Published:Updated:

தினமும் சூப் குடிப்பவரா நீங்கள்? இதையெல்லாம் கவனிக்கத் தவறாதீங்க! #ExpertOpinion

சூப்
சூப்

தினமும் சூப் குடிக்கும் பழக்கம் சரியா?

நட்சத்திர ஹோட்டல்களில் பலமான விருந்துக்கான முன் தயாரிப்புகளில் ஒன்றாகப் பரிமாறப்பட்டவை சூப் வகைகள். இன்று தெருவோரக் கடைகளின் பிரதான உணவாக மாறியிருக்கிறது. காபி, டீயைத் தவிர்க்க நினைக்கிற பலரின் சாய்ஸும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த சூப் வகைகளே. தவிர சில நிமிடங்களில் தயாரித்து அருந்தும் வகையில் இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸ் விற்பனைக்கு வந்த பிறகு சூப் அருந்தும் கலாசாரம் இன்னும் அதிகரித்திருக்கிறது.

சூப்
சூப்

`தினமும் ஒரு முறையேனும் சூப் குடித்துவிட வேண்டும்' என்ற உணவுமுறை மாற்றத்துக்கு பெரும்பாலானோர் பழகியிருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு முன் பசியை அதிகரிக்க சூப் குடிப்பது, மாலை வேளையில் ஆரோக்கிய பானமாக சூப் அருந்துவது என இந்தப் பழக்கம் பலவிதமாகப் பின்பற்றப்படுகிறது.

தினமும் ரெடிமேட் சூப் குடிப்பது நல்லதல்ல!
சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்

பசியின்போது சாப்பாட்டுக்கு பதில் சூப் மட்டுமே குடிப்பவர்களும் இருக்கிறார்கள். தினமும் சூப் குடிப்பது சரிதானா, சூப்பில் என்னென்ன வகைகள் இருக்கின்றன, யார் எந்த சூப்பைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.

சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்
சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்
சூப்பில் மூன்று வகைகள் இருக்கின்றன.

* Appetizer Soup - இது, அடர்த்தி குறைவாக இருக்கும் சூப் வகை. பசியைத் தூண்டுவதற்கான சூப்.

* Creamy Soup - கான்ஃபிளவர், மைதா போன்றவை கொண்டு அடர்த்தியாகத் தயாரிக்கப்படும் சூப் வகை இது.

* Chowder soup - காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்தி, உணவுக்கு ஈடானளவு ஊட்டச்சத்து கொண்டு தயாரிக்கப்படும் சூப் வகை இது. இதை அருந்தினாலே பசி அடங்கிவிடும் என்பதால், உணவுக்கு மாற்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

சூப்
சூப்
காய்கறி சூப்
தயாரிக்கும்போது, அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம்.

நன்மைகள்

சூப்
சூப்

உடலுக்கு வைட்டமின்கள், தாது உப்புகள், தேவையான அளவு கலோரிகள், புரதம் போன்றவை அதிகம் கிடைக்கும். சமைத்து சாப்பிடும் காய்கறிகளைவிடவும், சற்றே கூடுதலான பலன்களை சூப் குடிப்பதன் மூலம் பெறலாம்.

உடல் நலன் சார்ந்த பிரச்னையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருப்பவர்களுக்கு, உணவை மென்று சாப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கும். அப்படியானவர்களுக்கு, சூப் எளிமையான மற்றும் சத்தான மாற்று உணவாக இருக்கும். இவர்கள், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்றி சூப் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சரியான முறையில் சூப் தயாரிக்க, சில குறிப்புகள்!

* அதிகம் கொதிக்க வைத்தால் காய்கறிகளில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படலாம் என்பதால், காய்கறி சூப்பை அதிகம் கொதிக்க வைக்கக் கூடாது.

* அசைவ சூப் தயாரிக்கும்போது, அதை அதிக நேரம் கொதிக்க வைத்தல் அவசியம். காரணம், அப்போதுதான் கறியில் இருக்கும் சத்துகள் யாவும் சூப்பில் இறங்கும். செரிமான சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

Vikatan
சூப்
சூப்

* சூப்பில் நறுமண இலைகள் சேர்க்கும்போது, அவற்றை அரைத்து உபயோகப்படுத்த வேண்டாம். அப்படியே இலைகளாக உபயோகப்படுத்தவும். முடிந்தால் அவற்றின் சாற்றை மட்டும் பயன்படுத்தவும். அரைத்துப் பயன்படுத்தும்போது, குறிப்பிட்ட அந்தப் பொருளின் மணமும் சுவையும் சூப்பில் அதிகரித்துவிடும். அது, சூப்பின் சுவையை மாற்றிவிடும்.

சமையலின்போது, மீதமாகும் கொதிக்க வைத்த காய்கறி தண்ணீரையெல்லாம் வீணாக்காமல், சூப்பில் கலந்துகொள்ளலாம்.
சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்

* காய்கறி சூப் தயாரிக்கும்போது, காய்கறி தேர்வில் கவனமாக இருக்கவும். எதிரெதிர் வண்ணங்களிலிருக்கும் காய்கறிகளை ஒரே சூப்பில் சேர்த்துவிடாதீர்கள். அது சுவை, மணம் என அனைத்தையும் கெடுத்துவிடும்!

* சூப்பைத் திடமாக்க, வொயிட் சாஸ் உபயோகிப்பதுண்டு. சிலர் வெண்ணெய் பயன்படுத்துவார்கள். அவையெல்லாம் வேண்டாமென நினைப்பவர்கள், கான்ஃப்ளார் உபயோகிக்கலாம்.

சூப்
சூப்

தினமும் ரெடிமேட் சூப், நல்லதா கெட்டதா?

நிச்சயம் நல்லதல்ல. வீட்டில் தயாரிக்கும் சூப் அளவுக்கு அவை ஆரோக்கியமானவையல்ல. ரெடிமேட் சூப் பவுடர்களில், நறுமணத்துக்காகவும் நிறத்துக்காகவும் நிறைய பொருள்களும் நிறமிகளும் சேர்க்கப்பட்டிருக்கும். கூடவே உப்புச்சத்து, கலோரி போன்றவையும் அளவுக்கு அதிகமாகவோ / மிகக்குறைவாகவோ இருக்கும்.

ஊட்டச்சத்து, நார்ச்சத்தைப் போன்றவற்றைத் தாண்டி கெட்ட கொழுப்புச்சத்துக்கான சேர்க்கைகளும் அதில் இருக்கலாம். என்றாவது ஒரு நாள், ஒரே ஒரு வேளை, குளிருக்கு இதமாக ஏதேனும் குடிக்க வேண்டும் போலுள்ளது என்பவர்கள் மட்டும், ரெடிமேட் சூப் குடிக்கலாம்.

குறிப்பு - வீதிகளில் விற்கப்படும் சூப் வகைகளுக்கும் இந்த அறிவுரைகள் யாவும் பொருந்தும்! ஸோ, கவனம் தேவை.
சூப்
சூப்
Vikatan
தினமும் சூப் குடிக்க வேண்டுமென முடித்துவெடுத்துவிட்டீர்கள் எனில், தாமதிக்காமல் தினமும் வீட்டில் தயாரித்து குடித்துப் பழகவும். அதுமட்டுமே ஆரோக்கியமானது.

தினமும் சூப் குடிப்பதால் ஏதேனும் உடல்நல பிரச்னைகள் வருமா?

எந்த வேளையில், என்ன வகை சூப்பை அருந்துகிறோம் என்ற தெளிவுடன் குடிப்பவர்களுக்கு நிச்சயம் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தத் தெளிவு இல்லாமல் க்ரீமி சூப்பை உணவுக்கு முன் அருந்துவது, சௌடர் சூப் குடித்தபின் பலமான உணவு உட்கொள்வதெல்லாம் ஆரோக்கியக் கேட்டுக்கே வழிவகுக்கும். உடல் எடை குறைக்க வேண்டியோ அல்லது வேறு ஏதேனும் உடல் நல மாற்றங்களுக்காகவோ சூப் குடிப்பவர்கள் நிபுணர் ஆலோசனையின்றி சூப் உட்கொள்ளக் கூடாது" என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு