ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆயுர்வேதம் காட்டும் வழிமுறைகள் என்னென்ன?

நம் வீட்டு அஞ்சறைப்பெட்டிகளில் தவறாமல் இடம்பெறுவது காய்ந்த மிளகாய். இது நம் தேசத்துக்கு உரிய உணவு கிடையாது. பழங்காலச் சமையல் நூல்கள் இதற்கான எந்தக் குறிப்பும் இல்லை என்பதே அதற்குச் சான்று.
ஆரோக்கியம் என்பது என்னவென்று கேட்டால், பலரும் பலவிதமான பதில்களைக் கூறுவார்கள். `உடலும் மனமும் நலமுடன் இருப்பதே ஆரோக்கியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். உண்ணும் உணவு உடல் நலனைக் காப்பதுபோல மனநலனிலும் முக்கியப் பங்காற்றுகிறது. உணவுத் தயாரிப்பில் முக்கிய இடம் பிடிப்பது காய்ந்த மிளகாய்.

குழம்பு வகைகளில், கூட்டுப்பொரியல் போன்றவற்றில் காரத்துக்காக மிளகாய் சேர்க்கிறோம். ஆனால், இந்த மிளகாய் நம்முடையது அல்ல. வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தது. அந்தக் காலத்தில் மிளகைத்தான் காரத்துக்காகப் பயன்படுத்தி வந்தார்கள்.
உண்மையில் மிளகாய் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதா என்று ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார்.
“நோயின்றி நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாகும். `நோயில்லா நிலையையே ஆரோக்கியம்' என்கிறது ஆயுர்வேதம். எது ஆரோக்கியம் என்பதற்கு அறுவை சிகிச்சையின் தந்தை எனும் அழைக்கப்படும் சுஸ்ருதர் எழுதிய ‘சுஸ்ருதசம்கிதை’ என்கிற புத்தகத்தில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே விளக்கமும் தரப்பட்டுள்ளது.

`சமதோஷம் சமதாது சமஅக்கினி சமமலக்கிரியா’ என்று முதலில் குறிப்பிடுகிறார் சுஸ்ருதர். உடலில் இருக்கும் மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் இயல்பாக இருக்கவேண்டும். இவை கூடவோ, குறையவோ கூடாது.
உடல் அமைப்புக்குக் காரணமாக இருக்கும் ரசதாது, ரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மஜ்ஜாதாது, சுக்கிலதாது உள்ளிட்ட ஏழு தாதுக்கள் இயல்பாக இருக்கவேண்டும்.

செரிமானம் அளவாக இருக்கவேண்டும். வியர்வை, சிறுநீர், மலம் ஆகிய மூன்றும் சீராகவும் இயல்பாகவும் வெளியேறுவது அவசியம் என்று வலியுறுத்துகிறார். இதற்கடுத்து ‘பிரசன்ன ஆத்ம இந்திரிய மநகர்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது மனமும் ஆத்மாவும் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்.
இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு வந்தாலும் மற்றொன்று பாதிக்கப்படும். அதாவது உடல் பாதிக்கப்பட்டால் மனம் பாதிக்கப்படும். மனம் பாதித்தால் உடல் பாதிப்படையும்.

‘போதும் என்ற மனமே பொன்செய் மருந்து’ என்பதுபோல போட்டி, பொறாமை, பேராசை, மனஉளைச்சல் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். அதுபோல, உழைப்புக்கேற்ற உணவை உட்கொண்டாலே உடல் உறுப்புகள் சீராக இயங்கும்.
மிளகைப்போன்று காரத் தன்மை இருப்பதால்தான் மிளகாய் என்று பெயர் சூட்டப்பட்டது. உணவுக்கு ருசியைத் தரும் மிளகாய், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல!ஆயுர்வேத மருத்துவர் ஆர். பாலமுருகன்
ஆரோக்கியம் தருவது மிளகாயா... மிளகா?
நம் வீட்டு அஞ்சறைப்பெட்டிகளில் தவறாமல் இடம்பெறுவது காய்ந்த மிளகாய். இது நம் தேசத்துக்கு உரிய உணவு கிடையாது. பழங்காலச் சமையல் நூல்கள் இதற்கான எந்தக் குறிப்பும் இல்லை என்பதே அதற்குச் சான்று.

இந்தியாவுக்குள் 15-ம் நூற்றாண்டில்தான் மிளகாய் வந்தது. அதற்குப் பின் எழுதப்பட்ட மருத்துவ நூல்களில் மிளகாய் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. அதற்குமுன் நம்முடைய உணவுகளில் காரத்துக்காக இடம்பெற்றிருந்தது மிளகு மட்டுமே.
மிளகைப்போன்று காரத் தன்மை இருப்பதால்தான் மிளகாய் என்று பெயர் சூட்டப்பட்டது. உணவுக்கு ருசியைத் தரும் மிளகாய், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல. ஆனால், உணவுக்கு ருசியையும் தந்து, ஆரோக்கியத்தையும் அளிக்கக்கூடியது மிளகு.
மிளகாய்க்கு விஷத்தை முறிக்கும் தன்மை இருப்பதில்லை. மிளகுக்கோ அதிகளவில் விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம்’ என்பது தமிழர் பழமொழி. உடல் உறுப்புகளிலிருக்கும் நச்சுத்தன்மையை மிளகு அகற்றிவிடும் என்பதால் மிளகை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது” என்கிறார் ஆர். பாலமுருகன்.