Published:Updated:

World Slow Food Day: ஃபாஸ்ட் ஃபுட் தெரியும்; அதென்ன ஸ்லோ ஃபுட்?!

Cooking
News
Cooking ( Photo by Gagan Kaur from Pexels )

துரிதமாகச் சமைத்துவிடும் உணவுகளில் (fast food) வயிற்றை மட்டும் நிரப்பிக் கொண்டு ஆரோக்கியத்தையும், பாரம்பர்ய உணவுப் பழக்கவழக்கங்களையும் மறந்துவிடுகிறோம். இதை மாற்ற உருவாக்கப்பட்டதே `ஸ்லோ ஃபுட் இயக்கம் (Slow Food Movement).'

மாற்றங்களை நோக்கிய நம் வாழ்க்கையின் ஓட்டத்தில் பல மாற்றங்களை அடைந்திருக்கிறோம். ஆனால் இந்த ஓட்டத்தில் நேரத்தை சேமிக்க, அதிகப்படியாக நாம் சுருக்கிக்கொள்ள நினைப்பது உணவுமுறைதான். துரிதமாகச் சமைத்துவிடும் உணவுகளில் (fast food) வயிற்றை மட்டும் நிரப்பிக் கொண்டு ஆரோக்கியத்தையும், பாரம்பர்ய உணவுப் பழக்கவழக்கங்களையும் மறந்துவிடுகிறோம். இதை மாற்ற உருவாக்கப்பட்டதே `ஸ்லோ ஃபுட் இயக்கம் (Slow Food Movement).' டிசம்பர் 10 உலக ஸ்லோ ஃபுட் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Food (Representational Image)
Food (Representational Image)
Photo by Lai YuChing on Unsplash

அதென்ன ஸ்லோ ஃபுட்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஸ்லோ ஃபுட் என்பது எளிமையான, ஆரோக்கியமான உள்ளூர் உணவுகள் மற்றும் பாரம்பர்ய சமையல். அதை ஊக்குவிக்கும் ஸ்லோ ஃபுட் இயக்கம், உலகளாவிய ஒரு முன்முயற்சி. இது இத்தாலியில் கார்லோ பெட்ரினி என்பவரால் தொடங்கப்பட்டது. துரித உணவுக்கு மாற்றாக, பாரம்பர்ய மற்றும் பிராந்திய சமையல்களைப் பாதுகாக்க இந்த இயக்கம் தன் செயல்பாடுகளை முன்னெடுக்கிறது. உள்ளூர் தட்பவெப்பத்துக்கு ஏற்ப வளரக்கூடிய தாவரங்கள், மற்றும் கால்நடை வளர்ப்பை இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பெரிய வணிகக் கடைகளை விடுத்து மக்கள் உள்ளூரிலுள்ள சிறு வணிகர்களிடம் நிலையான, தரமான உணவுகளைப் பெற செயல்பாடுகளைத் திட்டமிடுகிறது. மக்கள் துரித உணவுகளைச் சாப்பிடுவதை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அதற்குப் பதிலாக உள்நாட்டில் கிடைக்கும் உணவுகளைத் தயாரித்துச் சாப்பிடுவதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ள மக்களை இந்நிறுவனம் அறிவுறுத்துகிறது.

ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துவதோடு கூடவே, உணவுடன் தொடர்புடைய கலாசாரம் மற்றும் பாரம்பர்யத்தைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது ஸ்லோ ஃபுட் இயக்கம். இப்போது உலகம் முழுக்க 1,00,000 உறுப்பினர்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது; 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த இயக்கத்தின் கிளைகள் உள்ளன.

Fast Food (Representational Image)
Fast Food (Representational Image)
Photo by Jonathan Borba on Unsplash

ஸ்லோ ஃபுட் இயக்கத்தின் வரலாறு

ஸ்லோ ஃபுட் இயக்கத்தின் நிறுவனர் கார்லோ பெட்ரினி, ரோம் நாட்டில் திறக்கப்பட்ட ஒரு மெக்டொனால்டு (McDonald) உணவகத்தை, ``இந்தத் துரித உணவகம் பூர்விக உணவு மரபுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்" என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 1989-ல் ஸ்லோ ஃபுட் இயக்கத்தை பாரிஸில் தொடங்கிய அவர், பெரும்பாலும் நம்முடைய உணவு சார்ந்த கண்ணோட்டமானது எந்தளவுக்கு நம் பாரம்பர்யத்தில் இருந்து விலகி, வேரற்ற துரித உணவுக்குப் பழக்கத்தை நோக்கி நகந்துகொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். மக்களின் துரித உணவு மோகம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த இயக்கத்தின் தேவையும், செயல்பாடும் விரிவடைந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செயல்பாடுகள்

ஐரோப்பா முழுவதும் ஸ்லோ ஃபுட் இயக்கக் கிளைகள் தொடங்கப்பட்டு, ஸ்லோ ஃபுட் உணவுகள் குறித்து சர்வதேச கண்காட்சிகள் நடத்தப்பட்டன. மேலும் பல ஸ்லோ ஃபுட் நெட்வொர்க்குகள், பிரசாரங்கள், திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் தொடங்கப்பட்டன. இதேபோல அமெரிக்காவிலும் கிளைகள் தொடங்கப்பட்டு, உள்ளூர் உணவுப் பண்பாடுகளைப் பாதுகாக்கவும், உண்ணும் மகிழ்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Food (Representational Image)
Food (Representational Image)
Photo by Mario Raj on Unsplash

ஸ்லோ ஃபுட் இயக்கம் தொழிற்சாலையில் செய்யப்படும் விவசாயத்தை நிராகரிக்கிறது. இறைச்சி நுகர்வை முழுவதுமாக நிராகரிக்கவில்லை. மாறாக, மக்கள் இறைச்சி உண்பதை கட்டுப்படுத்தவும், சிறிய பண்ணைகளில் இருந்து இறைச்சியை வாங்கவும் பரிந்துரைக்கிறது.

ஸ்லோ ஃபுட் இயக்கம் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களின் (GMOs) உற்பத்தியை எதிர்க்கிறது.

ஸ்விட்ஸர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் யுனைடெட் கிங்டம் உட்பட பல பெரிய தொழில்மயமான நாடுகளில் ஸ்லோ ஃபுட் இயக்கக் கிளைகள் உள்ளன. தன்னார்வ கல்வியாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, பல்வேறு சமூகங்களில் செயல்பட்டு வருகிறது.

டஸ்கலூசாவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் ஸ்டீபன் ஷ்னைடர், சமீபத்திய ஆண்டுகளில் தோன்றிய நவீன உணவுத் துறையில் உண்டான பல நோய் வெடிப்பு மற்றும் தொழிலாளர் உரிமை குறித்தான ஊழல்கள் ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறார். இந்தப் பிரச்னைகளை ஸ்லோ ஃபுட் இயக்கம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது; தீர்வுகளை முன்வைக்கிறது. உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்குத் தனிப்பட்ட அளவில் மிகப்பெரிய அளவிலான ஆதரவைப் பெற்று தருகிறது இவ்வியக்கம்.

Slow food festival
Slow food festival

விமர்சனங்கள்

ஸ்லோ ஃபுட் இயக்கம் ஆதரிக்கப்பட வேண்டியது என்றாலும், அது பரிந்துரைக்கும் செயல்பாடுகளின் சாத்தியங்கள் விமர்சனத்துள்ளாக்கப்படுகிறது. உதாரணமாக, ஸ்லோ ஃபுட் செய்ய பெண்கள் செலவழிக்கும் நேரம் குறித்து மறுப்புக் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஸ்லோ ஃபுட் இயக்கத்தின் கோரிக்கைகளைச் சுற்றியுள்ள சில வர்க்கப் பிரச்னைகளும் விவாதத்துக்கு உரியதாக உள்ளன.

ஸ்லோ ஃபுட் வாழ்க்கை முறை

எல்லோராலும் ஸ்லோ ஃபுட் வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க முடியாது என்றாலும், பலருக்கு இது விருப்பமாக உள்ளது. ஸ்லோ ஃபுட் இயக்கத்தின் கூற்றுப்படி, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஸ்லோ ஃபுட்டின் கொள்கைகளை இணைத்துக்கொள்ளலாம். இயற்கை உணவுகளைத் தயாரிப்பது, குறைந்தபட்சம் தங்கள் சொந்த உணவின் தரத்தை உயர்த்துவது மற்றும் அவற்றின் அளவைப் பராமரிப்பது இவையே இந்த வாழ்க்கை முறையின் அடிப்படை.

லெட்ஸ் ஹேவ் ஸ்லோ ஃபுட்!