Published:Updated:

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் அடிக்கடி வெளியேறும் சிறுநீர்... இயல்பானதா?

கர்ப்ப காலம்
News
கர்ப்ப காலம்

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் அடிக்கடி வெளியேறும் சிறுநீர்... இயல்பானதா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

கர்ப்ப காலம்
News
கர்ப்ப காலம்

என் வயது 29. இரண்டு மாத கர்ப்பிணி. கர்ப்பம் உறுதியானது முதல் எனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு இருக்கிறது. இது சாதாரணமானதுதானா அல்லது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?

மாதவி (விகடன் இணையதளத்திலிருந்து...)

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

``கர்ப்பம் உறுதியானதும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவது இயல்பானதுதான். இன்னும் சொல்லப்போனால் சில பெண்களுக்கு பீரியட்ஸ் தள்ளிப்போனதும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவதையே கர்ப்பத்தின் அறிகுறியாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.

 மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

ஒரு பெண் கர்ப்பம் தரித்ததும் அவளது உடலில் புரொஜெஸ்ட்ரான் மற்றும் பீட்டா ஹெச்.சி.ஜி (Beta-hCG) ஆகிய இரண்டு ஹார்மோன்களின் அளவும் அதிகமாக இருக்கும். அதனாலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

வழக்கமாக ஒருநாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தவர்கள், கர்ப்பம் தரித்த பிறகு ஏழெட்டு முறை போவார்கள். கர்ப்பத்தின் 12 வாரங்களில் கர்ப்பப்பையானது இடுப்பெலும்புப் பகுதியிலிருந்து சற்று பெரிதாகி, வயிற்றுக்குழிக்குள் வளர ஆரம்பிக்கும்.

கர்ப்ப காலம்
கர்ப்ப காலம்

அந்த நேரத்தில் கர்ப்பப்பையின் முன் பகுதியில் இருக்கக்கூடிய சிறுநீர்ப்பை அழுத்தப்படுவதாலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரலாம். எனவே கர்ப்பகாலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது குறித்து பயப்படத் தேவையில்லை. ஆனால் அத்துடன் எரிச்சலோ, வலியோ, காய்ச்சலோ இருந்தால் சிறுநீர்ப்பை தொற்று இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து உறுதிசெய்து கொள்ள வேண்டியது அவசியம்.