ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

பல் பிடுங்கியதும் பின்பற்ற வேண்டியவை

பல்
பிரீமியம் ஸ்டோரி
News
பல்

வாய் கொப்புளிக்கவோ, எச்சில் துப்பவோ, எச்சிலை வாயில் சேர்த்து வைக்கவோ கூடாது..!

சொத்தைப் பற்களை அகற்றுவது இப்போது குறைந்துவருகிறது. நவீன தொழில்நுட்ப உதவியுடன் பற்களைப் பாதுகாப்பதற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன. ஆனாலும் தீவிர பாதிப்புக்குள்ளான பற்களையும், வலி ஏற்படுத்தும் ஞானப்பற்களையும் அகற்ற வேண்டியது அவசியமாகிவிடுகிறது. பல் அகற்றப்பட்ட பிறகு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகளைப் பகிர்கிறார் பல் மருத்துவர் பாலாஜி ஸ்ரீகாந்த்.

பாலாஜி ஶ்ரீகாந்த் பல் மருத்துவர்
பாலாஜி ஶ்ரீகாந்த் பல் மருத்துவர்

பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்

  • பல் அகற்றப்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட பஞ்சை ஒரு மணி நேரம் கழித்து எடுத்துவிட வேண்டும்.

  • வாய் கொப்புளிக்கவோ, எச்சில் துப்பவோ, எச்சிலை வாயில் சேர்த்து வைக்கவோ கூடாது.

  • அந்த இடத்தில் சூடாக ஒத்தடம் கொடுக்கக் கூடாது; ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம்.

  • பல் எடுத்த இடத்தை நாக்கு, விரலால் வருடக்கூடாது.

  • பல் எடுத்த இடத்தில் டூத் பிரஷ்ஷைக் கொண்டு பல் துலக்கலாம்.

  • பல் எடுத்த நாளில் குளிர்ச்சியான கஞ்சி, நீராகாரம் குடிக்கவும்.

  • சோடா போன்ற குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்கவும்.

  • கொடுக்கப்பட்ட மருந்துகளை வேளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

  • பல் எடுத்த ஒரு வாரத்துக்கு புகைபிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது.

  • ரத்தக்கசிவு ஒரு நாளைக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுகவும்.