Published:Updated:

முடி உண்ணும் பழக்கம்: வயிற்றில் 3 கிலோ முடி... அறுவை சிகிச்சைக்குத் தள்ளப்பட்ட சிறுமி!

Hair
News
Hair ( Pixabay )

விநோத பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காகிதம், மணல், புல் போன்ற உணவல்லாத, அழுக்கானவற்றை உண்பதுண்டு. ஆனால், சிறுமி ஒருவருக்கு முடி உண்ணும் விநோத பழக்கம், அவரை அறுவைசிகிச்சை வரை கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.

Published:Updated:

முடி உண்ணும் பழக்கம்: வயிற்றில் 3 கிலோ முடி... அறுவை சிகிச்சைக்குத் தள்ளப்பட்ட சிறுமி!

விநோத பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காகிதம், மணல், புல் போன்ற உணவல்லாத, அழுக்கானவற்றை உண்பதுண்டு. ஆனால், சிறுமி ஒருவருக்கு முடி உண்ணும் விநோத பழக்கம், அவரை அறுவைசிகிச்சை வரை கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.

Hair
News
Hair ( Pixabay )

சீனாவைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, சமீபத்தில் சரியாகச் சாப்பிடவில்லை என்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், விநோதமான பழக்கத்தால் சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைத் கண்டறிந்தனர். 

child (Representational image)
child (Representational image)
Pixabay

அதாவது அந்தச் சிறுமி, `Pica' என்று அழைக்கப்படும் உண்ணுதல் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய பாதிக்கப்புள்ளவர்கள் காகிதம், மணல், புல் போன்ற உணவல்லாத, அழுக்கானவற்றை உண்பதுண்டு. இத்தகைய பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது முடியை அதிகப்படியாக உண்டிருக்கிறார். இதனால் உணவுகளை எடுத்துக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டுள்ளார். 

மருத்துவ பரிசோதனையில் இதைக் கண்டறிந்து, இரண்டு மணி நேர அறுவைசிகிச்சைக்குப் பின், சிறுமியின் வயிறு மற்றும் குடலில் இருந்த முடிகளை மருத்துவர்கள் அகற்றினர். பின் அதை அளந்து பார்த்தபோது, சுமார் மூன்று கிலோ முடியைச் சிறுமி உண்டிருப்பது தெரிய வந்தது.

சிறுமிக்கு மருத்துவம் பார்த்த ஷி ஹாய் என்ற இரைப்பை, குடல் மருத்துவர் கூறுகையில், ``சிறுமி சரியாகச் சாப்பிடுவதில்லை என மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதித்ததில், அவரது வயிற்றில் முடி நிரம்பி இருந்தது தெரிந்தது. அதனால் உணவு செல்வதற்கு வேறெந்த இடமும் இல்லை. முடி அனைத்தையும் அடைந்திருந்தது. 

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

சிறுமி தன்னுடைய தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறாள். அவர்கள் இவளின் விநோத நடத்தையைக் கவனிக்கவில்லை. பல வருடங்களாகச் சிறுமி உளவியல் பிரச்னைகளை எதிர்கொண்டு, முடியை உண்டு வருகிறாள். இவளின் பெற்றோர்கள் பணி நிமித்தமாகத் தொலைவில் வசித்து வருகின்றனர். இதுதான் பொதுவான காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களுடைய முடியை தாங்களே உண்பது Rapunzel syndrome என்று அழைக்கப்படுகிறது. 2017-ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயது மாணவி அதிகப்படியான முடியை உண்டு, வயிற்றில் தொற்று ஏற்பட்டதால் இறந்துபோனது உள்ளிட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

`பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகத் தான் உழைக்கிறீர்கள் என்றாலும், குழந்தைகளின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது' என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.