ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

ஹெல்த்

பிரியங்கா சோப்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியங்கா சோப்ரா

கேட்ஜெட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று, `Top 30 Health Influencers of 2019’ என்ற தலைப்பில் ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறது.

கரீனா கபூர்
கரீனா கபூர்

தாவது, இந்திய பிரபலங்களில் ஆரோக்கியம் மற்றும் மனநலன் சார்ந்த விஷயங்களில் மற்றவர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவர்களின் பட்டியல் அது. தோனி, ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், டைகர் ஷ்ராஃப், உள்ளிட்ட பலர் அதில் இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருப்பவர், பாபா ராம்தேவ். இரண்டாமிடத்தில் இருப்பவர், அக்‌ஷய்குமார். முதலிடத்தில் இருப்பவர்... பிரதமர் மோடி. யோகா வீடியோக்கள், தியானம் செய்யும் படங்கள் மற்றும் ஆரோக்கியத்துக்காக அவர் அறிவித்த முன்னெடுப்புகள் ஆகியவை மோடியை மற்றவர்களைவிட முன்னிலைக்கு வர உதவியதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 ஹெல்த்

`ஸ்மார்ட்போன்கள் வரமா சாபமா?’ என்ற பட்டிமன்றம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. ஸ்மார்ட்போன் ஆப்ஸ் மூலம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆட்களும் இருக்கிறார்கள். அதனால் ஆபத்தைச் சேர்க்கும் ஆட்களும் இருக்கிறார்கள். தினமும் 5 மணி நேரத்துக்கு மேல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் உடல் பருமன் பிரச்னைக்கும், இதயநோய்களுக்கும் ஆளாவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. 700 பெண்களும் 360 ஆண்களும் கலந்துகொண்ட இந்த ஆய்வு, கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் நடத்தப்பட்டது. `அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் நிறைய நொறுக்குத்தீனி சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். தவிர, அவர்களுக்கு நிறைய சர்க்கரை தேவைப்படுவதால் இந்தப் பிரச்னைகள் அதிகரிக்கின்றன’ என்கிறது இந்த ஆய்வு.

சில ஆராய்ச்சிகள் வருடக்கணக்காக நடத்தப்படுவதுண்டு. மனிதர்களின் நலத்துக்கும், மனிதகுல மேம்பாட்டுக்கும் இது போன்ற ஆய்வுகள் முக்கியமானவை. அப்படி ஓர் ஆய்வு ஆறு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்தப்பட்டது.

45 வயதுக்கு மேற்பட்ட 46,000 பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்தார்கள். ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் 1 கி.மீ தூரத்துக்கு எவ்வளவு பசுமைவெளி இருக்கிறது என்பதைக்கொண்டு அவர்களின் மனநலத்தை அளக்கும் ஆய்வு இது. இந்த ஆறாண்டுக்கால ஆய்வு என்ன சொல்கிறதென்றால், `புல்வெளிகள் பார்க்கப் பசுமையானவைதான். ஆனால், அவற்றைவிட மரங்களே மனிதர்களின் மனநலத்துக்கு நன்மை செய்கின்றன. புல்வெளியால் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதன் பலன்கள் வேறாக இருக்கலாம். ஆனால், மரங்களடர்ந்த பகுதியில் வாக்கிங் போவதைத்தான் மனித மனம் விரும்புகிறது. எனவே, மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும்.’

 ஹெல்த்

செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் பலரும் அவை தம் மன அழுத்தத்தைக் குறைப்பதாகச் சொல்வதுண்டு. அன்றாடம் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளிலிருந்து மனதை மாற்றி, நிம்மதியைத் தருகின்றன என்பதற்காகவே ஒன்றுக்கும் மேற்பட்ட பிராணிகளை வளர்க்கிறவர்கள் இங்கே உண்டு. `அவர்கள் சொல்வது உண்மைதான்’ என்கிறது Medical News Today நடத்திய ஓர் ஆய்வு. `செல்லப்பிராணிகளை வளர்ப்பதை ட்ரீட்மென்ட்டின் ஒரு பகுதியாகவே மாற்றலாம்’ என்று பரிந்துரையும் செய்கிறது இந்த ஆய்வு. 249 கல்லூரி மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து, பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன. அவற்றின் முடிவில்தான் செல்லப்பிராணிகள் மன அழுத்தத்தைக் குறைக்கின்றன என்பது நிரூபணமானது.