Published:Updated:

`இனி 10 நாள்கள் தனிமைப்படுத்தினால் போதும்!' - புதிய வழிமுறைகளை வெளியிட்ட சிடிசி அமைப்பு

corona
corona

இப்போது வெளியிடப்பட்டுள்ள சிடிசியின் வழிமுறைகளின்படி, ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான பின்னர் அவருக்கு அறிகுறிகள் இல்லையெனில் மூன்று நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டால் போதும்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் மே 17 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ளது .

ஊரடங்கு
ஊரடங்கு

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்க அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பான சிடிசி ( Centre for Disease Control and Prevention - CDC) ஏற்கெனவே சில வழிமுறைகளைக் கூறியிருந்தது. கடுமையான அந்த வழிமுறைகளை சற்றே தளர்த்தி, புதிய வழிகாட்டுதல்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

`திருச்சி சந்தைக்குள் நுழைந்த கோயம்பேடு நபர்!' - கூட்ட நெரிசலால் பதறும் சமூக ஆர்வலர்கள்

இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் பின்பற்றுவதற்கான வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவில் வழிமுறைகள் தளர்த்தப்பட்டதையடுத்து இந்த அமைப்பு இந்தியாவிலும் அதற்கேற்ப வழிமுறைகளை எளிதாக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது

Testing
Testing
Pixabay

இப்போது வெளியிடப்பட்டுள்ள சிடிசியின் வழிமுறைகளின்படி, ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான பின்னர் அவருக்கு அறிகுறிகள் இல்லையெனில் மூன்று நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டால் போதும்.

அறிகுறிகள் ஏற்படாமல் நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் (Asymptomatic) குணமான பின் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டால் போதும் என்று கூறுகிறது. மேலும், இவர்கள் ஆர் - டிபிசிஆர் சோதனையை மீண்டும் செய்யத் தேவையில்லை எனவும் தெரிவிக்கிறது.

corona
corona

இதோடு நோய் பாதித்த இடங்களில் இருந்து வரும் பயணிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பில் இருந்தால் போதும் என்று புதிய வழிமுறைகள் தெரிவிக்கின்றன. ஆனால், கேரளாவின் சுகாதாரத்துறை மட்டும் தற்போது வரை நோய் பாதித்த இடங்களிலிருந்து வருபவர்களை 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டுக் கண்காணிப்பில் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு