ஸ்பெஷல்
Published:Updated:

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

டாக்டர்.திருநாவுக்கரசு

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

அதிக மார்க் எடுத்தும் ரொம்ப நாட்களாக ஆசைப்பட்ட 220 சி.சி பைக்கை அப்பா வாங்கித் தரவில்லையே என்ற கோபத்தில், முதல் நாள் இரவு சாப்பாட்டுத் தட்டை விட்டெறிந்தான் சுரேஷ். மறுநாள், தன் மகன் சுரேஷ் விரும்பிய பைக்கை சர்ப்ரைஸாக வீட்டுக்கு கொண்டுவந்து நிறுத்த, அன்றைய தினமே தனது நண்பர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் வைத்தான் சுரேஷ். இந்த சிறிய நிகழ்வில் இருந்து ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். அது உணவுக்கும் மனசுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதே. உடல் எடையைக் கூட்ட, குறைக்க விரும்புபவர்கள் என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் அவர்களின் இலக்கை அடையவே முடியாமல் போவதற்கும் உணவு, மனசு தான் காரணம். ''உணவைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், பலர் தங்களுக்கே தெரியாமல் சிலவகை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்'' என்கிறார் மனநல ஆலோசகர் திருநாவுக்கரசு.

'மன அமைதி கிடைப்பதற்கு மிகவும் முக்கியம் உணவு. பொதுவாக மனிதனுக்கு கோபம் ஏற்பட்டால், அந்தக் கோபத்தை தீர்த்துக் கொள்வது உணவின் மூலமாகதத்தான். பசி இருந்தும் சாப்பிடாதவர்கள், பசி இல்லாவிட்டாலும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்கள், இந்த இரண்டு வகை மனிதர்களுக்குமே ஆபத்து காத்திருக்கிறது.

உணவுக்கு அடிமையானவர்கள்:

பசிக்காமலேயே சிலர் எந்த உணவையும், எப்போது கொடுத்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு நாளைக்கு 5,000  15,000 கலோரி வரை உணவுகளை உண்ணுவார்கள். இவர்களைத்தான் உணவுக்கு அடிமையானவர்கள் (Compulsive overeating disorder) என்று அழைக்கிறோம். இவர்களுக்கு எப்போதும் வயிறுநிறைந்தே இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். 'போதும்’ என்ற மன நிறைவே வராது. இது, ஒரு வகையான உணவு போதை. மேலும், இவர்கள் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாமல், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை மட்டும் அதிகம் எடுத்துக் கொள்வார்கள்.

உணவு உண்ணுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை, உணவுப்பொருளை வேகமாக சாப்பிடுவது, தனியாக உட்கார்ந்து சாப்பிடுவது, தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம் அதிகரித்தல், திடீர் உடல் கூடுதல், உடலின் நிலைத்தன்மை குறைதல், முறையான உணவுப்பழக்கம் இன்மை இவையே உணவுக்கு அடிமையாவதற்கான அறிகுறிகள்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச்சத்து, மூச்சுத்திணறல், ஸ்ட்ரோக், கீல் வாதம், சிறுநீரகத் தொந்தரவுகள் போன்றவை வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

உளவியல் பிரச்னைகளின் காரணமாகவே இந்த நோயில் பலரும் சிக்குகின்றனர். இவர்கள் பெரும்பாலும் எந்த வேலையிலும் கவனம் செலுத்த மாட்டார்கள். அவர்களின் கவனத்தைத்  திசை திருப்பி டயட் கவுன்சலரின் அறிவுரைப்படி உணவை உண்டுவரச்செய்து, 24 மாதங்கள் வரை மனநல மருத்துவரின் கண்காணிப்பில் வைக்க வேண்டும். தினமும் தியானம், யோகா போன்ற மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

பொதுவாக, உணவு எவ்வளவு ருசியானதாக  இருந்தாலும் உடல் சக்திக்குத் தேவையான அளவு மட்டுமே உண்ணவேண்டும், உணவை அதிகமாகவோ, குறைவாகவோ சாப்பிடக் கூடாது என்ற புரிதல் இருந்தால் உணவுக்கு அடிமையாவதைத் தவிர்க்கலாம். உணவில் கவனம் வைத்தால், உளவியல், உடலியல் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்!

''உணவுக்கு அடிமையாகும் பிரச்னைக்கு முக்கியக் காரணம் ஊட்டச்சத்து உணவுகள் பற்றிய போதிய தெளிவின்மைதான்'' என்கிறார் உணவு ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி.

''என்ன சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிடவேண்டும்? இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை தெரிந்துகொண்டால் போதும், நோய்கள் வராமல் தடுக்கலாம். ஏற்கனவே நோய்க்கு ஆட்பட்டவர்களும் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க இது உதவும்.

என்ன சாப்பிடவேண்டும்?

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 காலை எழுந்தவுடன் ஒரு கப் கிரீன் டீ அல்லது நீராகாரம் குடிக்கவும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 காலை உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 இரண்டரை  மணி நேரத்துக்குப் பிறகு, சூப், இளநீர், மோர் போன்ற திரவ உணவுகளையும், பழங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 மதிய உணவில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, சரிவிகித உணவை உண்ண வேண்டும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 மாலையில் வேகவைத்த பருப்புகள், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, சிறிய துண்டு வெல்லம், பழங்கள், இஞ்சி டீ போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 இரவு உணவு எளிதில் செரிக்கக்கூடிய ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளை குறைந்த அளவு எடுத்துக்கொள்ளவேண்டும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு, 150 மி.லி பால் குடிக்க வேண்டும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 அவரவர் உடல்நலத்துக்கு ஏற்ற உணவு வகைகளை மருத்துவரைக் கலந்தாலோசித்து உண்ண வேண்டும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 கொழுப்புச் சத்துள்ள உணவுகளில் கலோரி அதிகம். இவை, வயிற்றை நிறைக்காது. உண்ட திருப்தி உணர்வையும் தராது.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட்டால், எளிதில் வயிற்றை நிறைத்துவிடும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 உங்களுக்குப் பிடித்த கொழுப்பு, சாட் உணவுகளை வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடுங்கள்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

அனோரெக்சியா நெர்வோசா:

பசி இருந்தாலும்கூட இவர்கள் சாப்பிடமாட்டார்கள். பெரும்பாலும், இளம் பெண்கள் அதிகம் பேர் தங்களது உடல் எடையைக் குறைக்கிறேன் என்கிற நினைப்பில் சாப்பிடவே மாட்டார்கள். சாப்பிடுவதைக் குறைத்து கொண்ட ஒருசில மாதங்களில் மிகவும் மெலிந்து காணப்படுவார்கள். இவர்கள் அனொரெக்சியா நெர்வோசா (anorexia nervosa) என்ற உணவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தோலில் நிறம் மாறுதல், தலைமுடி உதிர்தல், டயரியா, மலச்சிக்கல், இதய நோய் உள்ளிட்ட பல பிரச்னைகள் இவர்களுக்கு வர வாய்ப்பு உண்டு. மேலும், இவர்களுக்கு உடனடியாக மனநல ஆலோசனையும், டயட் கவுன்சலிங்கும் தேவை. மனநல சிகிச்சைக்குப் பிறகு டயட் கவுன்சலர் அறிவுரையின்படி, ஒரு நாளைய உணவுத் தேவையான 1,500 கலோரியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு நாளைக்கு 3,500 கலோரி வரை தொடர்ந்து சில நாட்களுக்கு உண்ண வேண்டும்.

எப்போது சாப்பிட வேண்டும்?

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 நம் உடலுக்கு உணவின் அளவைவிட, கலோரியின் அளவுதான் மிக முக்கியம்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 உடல் உழைப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு 2000  2500 கலோரி வரை உணவு தேவை.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 உடல் உழைப்பு குறைந்த வேலையில் இருப்பவர்களுக்கு 1500  2000 கலோரி தேவை.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 ஒருவர் தனது பி.எம்.ஐ மதிப்பைத் தெரிந்துகொண்டால்தான், அவருக்கு எவ்வளவு கலோரி தேவை என்பதை அறிய முடியும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 பொதுவாக உணவை மூன்று வேளையாகப் பிரித்துக் கொள்ளாமல், ஆறு வேளையாகப் பிரித்துக் கொண்டு உண்ணவும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 ஒவ்வொரு வேளை உணவு உண்ணும்போதும், வயிறு 60 சதவிகிதம் மட்டும் நிரம்பி இருக்குமாறு சாப்பிட வேண்டும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே இரவு உணவை முடித்துவிட வேண்டும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

எப்படி சாப்பிடவேண்டும்?

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 பழங்களை நன்றாகக் கடித்துச் சாப்பிட வேண்டும். பழச்சாறாக அருந்தக் கூடாது.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 ஒரு நாளைக்கு உணவு உட்கொள்வதற்கு, குறைந்தபட்சம் 75 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணும்போது, நன்றாக மென்று கூழ் போலாக்கி, விழுங்க வேண்டும்.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 சாப்பிடும்போது கட்டாயம் வேறு ஏதேனும் வேலைகளைச் செய்துகொண்டோ, அரட்டை அடித்துகொண்டோ  சாப்பிடுவது கூடாது.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 நண்பர்கள், குடும்பத்தினரோடு சேர்ந்துதான் சாப்பிட வேண்டும்.  எப்போதும் தனியாக சாப்பிடக் கூடாது.

உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

 உடற்பருமனாக இருப்பவர்கள் எடையைக் குறைக்க வேண்டும் என, ஒரே நாளில் உணவின் அளவை மிகவும் குறைத்துவிடக் கூடாது. உடற்பயிற்சியை மெள்ள மெள்ள அதிகரித்து, உணவின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும்.

அதிகப்படியான உணவு உட்கொள்பவர்கள்:

உடல்பருமனாக இருக்கும் சிலர், உடல் எடையைக்  குறைக்க, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில  நாட்கள் வரை கடுமையான டயட்டைக் கடைப்பிடித்து, ஒரு நாளைக்குத் தேவையான 1,500  2,000 கலோரி அளவைவிட குறைவாக உண்ணுவார்கள். ஆனால், கொஞ்ச நாட்களிலேயே,  ஏதேனும் ஒரு மனதுக்குப் பிடித்த உணவுப்பொருளின் வாசனையில் மயங்கி அடுத்த சில நாட்களுக்கு 4,000  5,000 கலோரி அளவுக்கு உணவை, வெளுத்துக்கட்டுவார்கள். இவர்களே, 'பெட்’ (Binge Eating Disorder) எனப்படும் அதிகப்படி யான உணவுகளை உட்கொள்ளும் மன நோய்க்கு உள்ளானவர்கள். இவர்களுக்கு உடல் எடையைக் குறைத்து, ஃபிட்டாக இருக்க வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால், நாளுக்கு நாள் உடல் எடை அதிகரிக்குமே தவிர, எடை குறையாது. டயட்டில் இருந்தாலும் உடல் எடை  குறையவில்லையே என்ற மனக்கவலையில் இருப்பார்கள். இவர்களால் எந்த வேலையிலும் முறையாக கவனம் செலுத்த முடியாது. மன நல ஆலோசனை மூலமே இவர்களைக் குணப்படுத்த முடியும்.

பு.விவேக் ஆனந்த்