Published:Updated:

தோல் நோய், சொரியாசிஸ், வாதநோய் நீக்கும் தேங்காய் எண்ணெய்! #InternationalCoconutDay

தோல் நோய், சொரியாசிஸ், வாதநோய் நீக்கும் தேங்காய் எண்ணெய்! #InternationalCoconutDay
தோல் நோய், சொரியாசிஸ், வாதநோய் நீக்கும் தேங்காய் எண்ணெய்! #InternationalCoconutDay

தோல் நோய், சொரியாசிஸ், வாதநோய் நீக்கும் தேங்காய் எண்ணெய்! #InternationalCoconutDay

‘அணில் ஏறி தென்னை அசையுமா?‘, ‘தென்னையை நட்டா இளநீரு’, ‘தென்னையை விதைச்சவன் தின்னுட்டுச் சாவான் பனையை விதைச்சவன் பாத்துட்டுச் சாவான்' என்பதுபோன்ற பழமொழிகள் தென்னையின் பெருமையை பறைசாற்றுகின்றன. சர்வதேச தேங்காய் தினமான இன்று நாமும் தென்னையில் விளையும் தேங்காயின் பெருமைகளைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

1998-ம் ஆண்டு ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்கள் மாநாடு வியட்நாமில் நடைபெற்றது. அப்போது ஆண்டுதோறும் செப்டம்பர் 2-ம் தேதி சர்வதேச தேங்காய் தினம் (International Coconut Day) கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. தென்னையின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக்கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்விதத்தில் மக்களிடையே விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

கோவில் பூஜையிலும், திருவிழாக்களிலும், ஹோமங்களிலும் தேங்காய்க்கு முக்கிய இடம் உண்டு. நம் இந்தியக் கலாசாரத்தில் தவிர்க்க முடியாத அளவுக்கு தேங்காய் திகழ்கிறது. பூலோகத்தின் கற்பக விருட்சமாகவும் விளங்குகிறது. தேங்காய் மற்றும் அதுசார்ந்த பொருட்களின் பயன்கள், மருத்துவக் குணங்கள் என்னென்ன என்று பார்ப்போமா?

இளநீர்

காலையில் கண்விழித்ததும் இளநீரை குடிச்சா, அன்றைக்கு முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். ஆனால், இளநீரை வெறும் வயிற்றில் பருகக் கூடாது. ஏனென்றால் அதில் உள்ள அமிலத்தன்மை நமது வயிற்றில் புண்ணை உருவாக்கக்கூடும். எனவே ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும். மேலும், இது ஜீரணக்கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. சிறுநீரகம் மற்றும் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். நமது உடலில் ஏற்படும் நீர் - உப்பு பற்றாக்குறையை சரி செய்கிறது.

தேங்காய்

இளநீர் முற்றினால் அதைத் தேங்காய் என்று சொல்கிறோம். நமது உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து வளர்சிதை மாற்றத்துக்கு உதவக்கூடியது. எய்ட்ஸ் நோயாளிகளின் உடலைத் தாக்கும் வைரஸ்களின் பெருக்கத்தை பெருமளவில் கட்டுப்படுத்தக்கூடியது தேங்காய்.

தேங்காய் எண்ணெய்

காயம் பட்டால் அந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவுவதால் கிருமித்தொற்றில் இருந்து விடுபடலாம். மாதம் ஒருமுறை அல்லது இருமுறை தேங்காய் எண்ணெய்க் குளியல் மேற்கொள்வதால் உடல் களைப்பிலிருந்து மீளலாம். பெண்களின் கூந்தலுக்கு மிகச்சிறந்த பொக்கிஷம் தேங்காய் எண்ணெய். நீண்டநாள் ஆகியும் ஆறாத தீக்காயப் புண்களை ஆற்றும் தன்மை படைத்தது.

செய்யக்கூடாதவை

நல்லெண்ணெயை வாயில் வைத்துக்கொண்டு 'ஆயில் புல்லிங்' செய்வதுபோல தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தக்கூடாது.

தேங்காய்ப் பால்

தேங்காய்ப் பாலில் உள்ள புரதச் சத்தானது, தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது. இது உடல் எடையைக் குறைத்து, கெட்டக் கொழுப்பை நீக்கக்கூடியது. தேங்காய்ப் பாலில் கசகசா, பால், தேன் சேர்த்து தினமும் பருகி வந்தால் 'வறட்டு இருமல்' குணமாகும். அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்களை ஆற்றுவதில் இவை முக்கியப் பங்கு வகிக்கிறது.

தைலங்கள்

தேங்காய் எண்ணெயைக் கொண்டு பல்வேறு வகையான தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன. தோல் நோய்க்கு கரப்பான் தைலமும், சொரியாசிஸ் நோய்க்கு வெப்பாலை தைலமும், வாத வலிக்கு கற்பூராதி தைலமும், பொடுகுக்கு பொடுதலை தைலமும், தீராத புண்களுக்கு மத்தன் தைலமும் பயன்படுகிறது.

நீரா பானம்

மலராத தென்னம்பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான பானமே 'நீரா பானம்' ஆகும்.இந்த பானத்தை விற்பதற்கு தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

பிற பயன்கள்

தேங்காய், தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பால், இளநீர், நீரா பானம், தைலங்கள் என்று மட்டுமல்லாமல் இன்னும் பல பொருள்களைத் தந்து உதவுகிறது. தென்னை ஓலையைக் கொண்டு கூரை வேயலாம். இளம் ஓலைகளால் திருவிழா மற்றும் திருமண விழாக்களில் தோரணம் செய்து தொங்கவிட்டு அலங்கரிக்கப்படும்.தேங்காய் நாரைக் கொண்டு கயிறு திரிக்கலாம். கொட்டாங்குச்சியைப் பயன்படுத்தி கைவினைப்பொருள்களை உருவாக்கலாம். தென்னைப் பயிர் சாகுபடி இன்றளவும் நமது கிராமங்களில் முக்கியத் தொழிலாக விளங்குகிறது.

தென்னம் பயிர், வறுமைக் குறைப்புக்கு முக்கியப் பங்காகத் திகழ்கிறது என்பதை உணர்த்தவே செப்டம்பர் 2 'சர்வதேச தேங்காய் தினமாக' கொண்டாடப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு