Published:Updated:

மருத்துவமனைகளில் எலி: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவமனைகளில் எலி: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
மருத்துவமனைகளில் எலி: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
மருத்துவமனைகளில் எலி: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் எலி, பூனை,  நாய்களை ஒழிக்க அரசு  எடுத்த நடவடிக்கை குறித்து 4 வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்  என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேதாஜி போக்குவரத்து தொழிற்சங்க மக்கள் தொடர்பாளர் சடையன் சென்னை உயர்  நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,"திருவல்லிக்கேணி  மருத்துவமனையில் இறந்த குழந்தையின் முகத்தில் எலி கடித்து விட்டதாக  பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

ஊழியர்களின் அலட்சியப் போக்கால் இது நடந்துள்ளது. இது போன்று  நடைபெறாமல்  தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட  வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி ஆறுமுகச்சாமி கொண்ட  அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

##~~##
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதிட்ட தலைமை  வழக்கறிஞர்  நவநீதகிருஷ்ணன்,"இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் முதலமைச்சர் தலைமையில்  அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு கூடி விவாதித்தது.இது  போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  விவாதித்தது. திருவல்லிக்கேணி மருத்துவமனைகளில் எலியை ஒழிக்க தவறிய  மருத்துவர்கள், ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்” என்றார்.
உடனே தலைமை நீதிபதி இக்பால் குறுக்கிட்டு,”அரசின் நடவடிக்கைகள் எழுத்து  வடிவில்தான் உள்ளது. செயல் பாட்டில் இல்லை” என்று கண்டித்தார்.
தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ்  வாதாடுகையில்,"மருத்துவமனைகளில் நோயாளியின் படுக்கைக்கு கீழே நாய்கள் படுத்து  இருக்கும் படங்கள் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.நோயாளியின் அறையை நாயும்  பங்கிட்டு கொண்டது போல் உள்ளது.ஐ.சி.யு.வில் நோயாளி,மருத்துவர்,நர்சுகள் தவிர  யாருக்கும் அனுமதி இல்லை.நோயாளியின் உறவினர் கூட அனுமதிக்கப்பட மாட்டார்.  எனவே ஐ.சி.யூ.வில் எலி எப்படி சென்றது என்று தெரியவில்லை” என்றார்.
இவ்வாறு அவர் கூறியதும் தலைமை நீதிபதி குறுக்கிட்டு, துளைகள் இருந்திருக்க கூடும்  என்றார்.
தொடர்ந்து வாதிட்ட ஜார்ஜ்  வில்லியம்ஸ்,"ஒரு பத்திரிகையில் தாய்-சேய் படம் போட்டு  அவர்களைச் சுற்றி எலிகள் இருப்பது போல் கார்ட்டூன் வெளியாகி உள்ளது. அரசியல்  கட்சி  தலைவர்களுக்கு கறுப்பு பூனை படை பாது காப்பு அளிப்பது போல் நோயாளிகளுக்கு  எலிகள் பாதுகாப்பு கொடுப்பது போல் உள்ளது.மருத்துவமனைகள் செல்லப் பிராணிகள்  வசிப்பிடமாக மாறி வருவதையே காட்டுகிறது” என்றார்.
இதனைத் தொடர்ந்து,மருத்துவமனைகளில்,எலி,பூனை,நாய் தொல்லையை ஒழிக்க  அரசு எடுத்த நடவடிக்கை பற்றிய விரிவான அறிக்கையை இன்னும் 4 வாரத்தில் தமிழக  அரசு தாக்கல் செய்ய  வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.