கரகர, மொறுமொறு கலர்ஃபுல் தோசைகளின் வெரைட்டி அணிவகுப்பு இது. கேரட், அவல், கீரை, முட்டை என உணவுப்பொருட்கள் சேர்க்கப்பட்ட, சில சத்தான தோசைகளின் பலன்களை டயட்டீஷியன் சாந்தி காவேரி சொல்ல, அவற்றைச் செய்து காட்டியிருக்கிறார் சமையல் நிபுணர் கஸ்தூரி.

பொன்னாங்கண்ணிக் கீரை தோசை

தேவையானவை: புழுங்கல் அரிசி, பச்சரிசி தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், ஆய்ந்து கழுவிப் பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக் கீரை ஒரு கப், பச்சை மிளகாய் 3, உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: அரிசி,பருப்பை ஊறவைத்து, கீரை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். இந்த மாவை மூன்று மணி நேரம் ஊறவைத்து, தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

பலன்கள்: இதில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், கண்ணுக்கு நல்லது. சருமத்தைப் பொலிவாக்கும். தலைமுடி நன்றாக வளர உதவும். பைல்ஸ் பிரச்னையைச் சரிசெய்யும்.

அவல் கேரட் தோசை

தேவையானவை: நறுக்கிய கேரட் கால் கிலோ, பச்சை மிளகாய் 2, பச்சரிசி, கெட்டி அவல் தலா அரை கப், கேரட் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், மோர், உப்பு தேவையான அளவு.

செய்முறை: அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். சுத்தம் செய்த அவலை மோரில் ஊறவைத்து, ஊறிய அரிசி, கேரட், பச்சை மிளகாய், உப்புச் சேர்த்து அரைக்கவும். லேசாகப் புளித்ததும், வெங்காயத்தைச் சேர்த்து, தோசைக் கல்லில் தோசைகளாக வார்க்கவும். துருவிய கேரட்டை மேற்புறம் தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: அவல் எளிமையான உணவு. எடை குறைக்க உதவும். கேரட் கண்களுக்கு நல்லது. சருமத்துக்கு நிறத்தைக் கூட்டும்.

தண்டுக்கீரை தோசை

தேவையானவை: பச்சரிசி 2 கப், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், கீரைத்தண்டு 2 கப், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள் சிறிதளவு, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் சிறிதளவு, எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பைத் தனித்தனியே ஊறவைத்து அரைத்து சேர்த்து, ஐந்து மணி நேரம் புளிக்கவைத்து உப்புச் சேர்த்துக் கரைக்கவும். கீரையின் தண்டை மட்டும் எடுத்துப் பொடியாக நறுக்கி, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயம், தனியாத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதில் வெந்த கீரையை சேர்த்துக் கிளறவும். தோசைக் கல்லில் மாவை ஊற்றி தோசையாக வார்த்து, நடுவில் இந்தக் கலவையை வைத்து, சுட்டெடுக்கவும்.

பலன்கள்: புரதம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. சிறுநீரகக் கோளாறு சரியாகும். ரத்த சோகை இருப்பவர்கள் உணவில் தண்டுக் கீரையை சேர்த்துக்கொள்ளலாம்.

முட்டை தோசை

தேவையானவை: தோசை மாவு 2 கப், முட்டை 2, மஞ்சள்தூள், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு தேவையான அளவு.

செய்முறை: முட்டையை உடைத்து, உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், வெங்காயம் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். தோசைக் கல்லைக் காயவைத்து, அதில் தோசை மாவை ஊற்றி, அதன் மேல் முட்டைக் கலவையை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். இதன் மேல், கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

வெங்காயம், கொத்தமல்லியை மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, தோசைமாவில் கலந்து, தோசைக் கல்லில் மாவை ஊற்றி அதன் மேல் முட்டையை ஊற்றியும் பரிமாறலாம்.

பலன்கள்: முட்டையில் உள்ள புரதச்சத்து அனைத்தும் இந்த தோசையில் கிடைத்துவிடும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும், 'கோலின்’ இதில் அதிகம் உள்ளது.

வெந்தயக்கீரை தோசை

தேவையானவை: வெந்தயக் கீரை ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் 4, பச்சரிசி ஒரு கப், உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: அரிசி, காய்ந்த மிளகாயை ஆறு மணி நேரம் நன்றாக ஊறவைத்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும். உப்புச் சேர்த்து நன்றாகக் கரைத்து, புளிக்கவிடவும். வெந்தயக்கீரையை ஆய்ந்து, கழுவி, மாவுடன் கலந்து, வெங்காயம், தக்காளி, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். தோசைக் கல்லைக் காயவைத்து, மொறுமொறுப்பாக சுட்டெடுக்கவும்.

பலன்கள்: எடையைக் குறைக்க நினைப்பவர்கள், டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் சாப்பிடலாம். உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலியைக் குறைக்கும்.