Published:Updated:

பிரசவத்துக்குப் பின் மாதவிடாய் நிற்பது ஆபத்தா?

பிரசவத்துக்குப் பின் மாதவிடாய் நிற்பது ஆபத்தா?

பிரசவத்துக்குப் பின் மாதவிடாய் நிற்பது ஆபத்தா?

பிரசவத்துக்குப் பின் மாதவிடாய் நிற்பது ஆபத்தா?

Published:Updated:
பிரசவத்துக்குப் பின் மாதவிடாய் நிற்பது ஆபத்தா?

சந்திரன், லால்குடி

'தொப்பை குறையவும், குறட்டை சத்தம் வராமல் இருப்பதற்கும் சித்த வைத்தியத்தில் மருந்து இருக்கிறதா?'

டாக்டர் ஆர்.எஸ்.ராமசுவாமி, தலைமை இயக்குனர், தேசிய சித்த மருத்துவ நிறுவனம்.

'அதிகப்படியான  கொழுப்பு வயிற்றுப்பகுதியில் சேருவதால் தொப்பை ஏற்படுகிறது. சித்த மருத்துவ முறையில் கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் ஜாதிக்காய் கலந்த திரிபலா சூரணத்தை 5 முதல் 10 கிராம் அளவுக்கு எடுத்து, 200 மி.லி நீருடன் சேர்த்து 75 மி.லி ஆகும் வரை நன்கு கொதிக்கவைக்கவும். இதைத் தினமும் இரண்டு வேளை பருகிவர அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்தி, தொப்பையைக் குறைக்கலாம். தவிர, கொள்ளுக் குடிநீர் மற்றும் நீர்முள்ளிக் குடிநீரை குடிப்பதன் மூலம், உடலில் உள்ள கெட்ட நீர், கொழுப்பு வெளியேறி, தொப்பை குறையும். குறட்டைக்கு முக்கியக் காரணமே மூச்சுக் குழாயில் ஏற்படக்கூடிய அடைப்புதான். இதற்கு, நேரடியாக எந்த வைத்தியமும் இல்லை. ஆனால், சுவாசம் தொடர்பான நோய்களான ஆஸ்துமா, சைனஸ், டான்சில் போன்றவற்றைக் குணப்படுத்துவதன் மூலம் குறட்டைவிடுவதைக் குறைக்கலாம். எனவே,  எதனால் குறட்டை ஏற்படுகிறது எனக் கண்டறிவது மிக முக்கியம். ஆடாதொடைக் கசாயம், நஞ்சருப்பான், தூதுவளை ஆகிய மூலிகைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலமும் குறட்டையிலிருந்து விடுபடலாம். மேலும், தூங்குவதற்கு முன்பு அடசுத்திப் பிராணயாமம், பூரணசுத்திப் பிராணயாமம்  போன்ற மூச்சுப் பயிற்சிகளை முறையாகச் செய்வதன் மூலமும் குறட்டைக்கு 'குட்பை’ சொல்லலாம்.'

அபுசலீம், வேலூர்

'எனக்கு வயது 28. நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தாலோ அல்லது நின்றாலோ கால்கள் மரத்துவிடுகின்றன. இப்படி, மரத்துப்போகிற கால்களைச் சரிப்படுத்தி எழுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது? என்ன சிகிச்சை எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்?'

டாக்டர் வெ.சந்திரமெளலீஸ்வரன், நரம்பியல் நிபுணர், சென்னை.  

பிரசவத்துக்குப் பின் மாதவிடாய் நிற்பது ஆபத்தா?

'உங்களுக்கு, கால் நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்தப் பாதிப்பு வைட்டமின்கள் பி, டி மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு காரணமாகவோ, தைராய்டு  சுரப்பில் குறைபாடு இருந்தாலோ ஏற்படலாம். தவிர, சர்க்கரை நோய் அல்லது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை (Prediabetes - IGT ) மற்றும் முடக்குவாதம் ஆகிய  நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். சில சமயங்களில், முதுகெலும்புக்குக் கீழ் பகுதியில் சவ்வு விலகுவதாலும் (Lumbar Disc Prolapse ) கால் நரம்புகள் பாதிக்கப்படலாம். உங்களுக்கு எதனால் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது, என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதன் பிறகுதான் சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். எனவே, முதலில் நரம்பியல் மருத்துவர் அல்லது உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அவர் சில பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் சிகிச்சை பெறுவது நல்லது.'

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், புதுச்சேரி

'எனக்குக் கடந்த பிப்ரவரி 2011ல் திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டே, முதல் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு எனது மனைவிக்கு மாதவிடாய் ஏற்படவில்லை. அடுத்தடுத்து ஏப்ரல் 2013, ஆகஸ்ட் 2014 எனக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், முதல் குழந்தை பிறந்ததில் இருந்து, இதுநாள் வரை மாதவிடாய் வரவே இல்லை. இதனால் என் மனைவிக்கு ஏதேனும் பிரச்னை இருக்குமா? விளக்கமாக பதில் அளியுங்கள்...'

பிரசவத்துக்குப் பின் மாதவிடாய் நிற்பது ஆபத்தா?

டாக்டர் சி.சத்தியநாராயணன், மகளிர் நல சிறப்பு மருத்துவர், புதுச்சேரி.

'குழந்தைப் பிறப்பு வரை மாதவிடாய் சுழற்சி சரியாக வந்திருக்கும்பட்சத்தில் மீண்டும் மாதவிடாய் சுழற்சி ஏற்பட, சராசரியாக 10 மாதங்கள் வரை ஆகும். உங்கள் மனைவியின் வயதும், பிரசவித்த முறையும் குறிப்பிடவில்லை. அடுத்தடுத்துப் போதிய இடைவேளை இல்லாமல் பிரசவிப்பது பெண்ணின் உயிருக்கே ஆபத்து என்று மருத்துவரீதியாக   நிரூபிக்கப்பட்டுள்ளது.   மாதவிடாய்  வராமல் இருப்பதற்கு, இந்த அடுத்தடுத்த கர்ப்பங்களினால் ஏற்பட்ட உடல் அழற்சி முக்கியக் காரணமாக இருக்கலாம். ஹீமோகுளோபின் (Haemoglobin)  பரிசோதனை, உடல் எடை மற்றும்  உயரம், இடை மற்றும் இடுப்பு சுற்றளவு, தைராய்டு, சர்க்கரை அளவு போன்ற பரிசோதனைகள் எடுக்கப்பட்டு, அதன் முடிவைக்கொண்டு, மகளிர் நலச் சிறப்பு  நிபுணர், மற்றும்  நாளமில்லா சுரப்பிகள் நிபுணரை (Endocrinologist)  ஆலோசித்துத் தகுந்த சிகிச்சை பெறலாம். மேலும், மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது உங்கள் மனைவியின் ஆரோக்கியத்துக்கு நல்லது.'