Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

பக்கவாதம்... முக்கியமான முதல் மூன்று மணிநேரம்! பா.பிரவீன் குமார், படம். தி.ஹரிஹரன்

நலம், நலம் அறிய ஆவல்!

பக்கவாதம்... முக்கியமான முதல் மூன்று மணிநேரம்! பா.பிரவீன் குமார், படம். தி.ஹரிஹரன்

Published:Updated:

“நம்முடைய உடலின் இயக்குனர் சிகரம் மூளை. நாம் மூச்சுவிடுவது, நம் இதயம் துடிப்பது எல்லாம் மூளையின் கட்டுப்பாட்டால்தான் நடக்கின்றன. மூளையின் எடை 1.5 கிலோதான். ஆனால் உடலின் ஒட்டுமொத்த ரத்தப் பயன்பாட்டில் 20 சதவிகிதத்தை மூளை பயன்படுத்துகிறது. மூளைக்குப் போதுமான அளவு ரத்தம் செல்லாதபோதும், மூளையில் உள்ள தொடர்புகளில் பாதிப்பு ஏற்படும்போதும் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன.

தாயின் கருவில் இருக்கும்போது தோல் செல்கள் போலவே மூளை செல்களும் உற்பத்தியாகின்றன. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு, கர்ப்பிணிகள் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகள் மற்றும் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார்  மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் கே.ஸ்ரீதர்.

மூளையில் ஏற்படும் பிரச்னைகள் பற்றி டாக்டர் கூறுகையில், “மூளையில் நியூரான்கள் மூலம் தொடர்புகள் நடக்கின்றன. மின் ஒயரைச் சுற்றி  பிளாஸ்டிக் காப்பு  இருப்பதுபோல மூளை நரம்புகளைச் சுற்றி கொழுப்புகள் பாதுகாப்பாக உள்ளன. இந்தக் கொழுப்பின் அளவு குறைந்து இரண்டு நரம்புகள் நேரடித் தொடர்பு கொள்ளும்போது, ஒயரில் ஸ்பார்க் ஏற்படுவதுபோல பிரச்னை ஏற்படுகிறது. இதை காக்காவலிப்பு அல்லது ஃபிட்ஸ் என்கிறோம். பெரும் பாலும் மருந்து மாத்திரைகள் மூலமே வலிப்பைக் கட்டுப்படுத்தி விடலாம். ஒரு சிலருக்கு அறுவைசிகிச்சை  தேவைப்படலாம்.

நலம், நலம் அறிய ஆவல்!

தலைக் காயங்கள் பற்றி பேசுகையில், “இன்றைக்கு உலக அளவில் தலையில் காயம் ஏற்பட்டு, அதனால் உயிரிழப்பு ஏற்படுவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில்தான் அதிக அளவில் தலைக்காயங்கள் ஏற்படுகின்றன. மூளை, மென்மையான உறுப்பு. அதே நேரத்தில் மிகவும் முக்கியமான உறுப்பு. ஒரு பாத்திரத்தில் வெண்ணையைப்போட்டு குலுக்கினால் என்ன ஆகுமோ, அதுபோலதான் விபத்தில் மூளை பாதிக்கப்படுகிறது. அதைப் பாதுகாக்கத்தான் கடினமான மண்டை ஓடு உள்ளது” என்கிறார் டாக்டர்.

மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும்போது, ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் பக்கவாதம் வந்தால், அதை ஒன்றும் செய்ய முடியாது. அப்படியே கை கால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று பாதிப்பு ஏற்பட்ட 3-4 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டுவந்தால், அவருக்கு பிரத்யேக ஊசி மருந்தைச் செலுத்துவதன் மூலம் பக்கவாதப் பாதிப்பில் இருந்து முற்றிலுமாகக் காப்பாற்ற முடியும்.

இதற்கு ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருக்க வேண்டியது ஃபாஸ்ட் (FAST) என்பதைதான். இதில் எஃப் முகத்தையும், ஏ கையையும், எஸ் பேச்சையும் குறிக்கும். டி என்பது நேரத்தைக் குறிக்கிறது. அதாவது முகம், கை, பேச்சு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று அல்லது மூன்றிலும் பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும்” என்கிறார் டாக்டர் கே.ஸ்ரீதர்.

அன்பு வாசகர்களே, டிசம்பர் 16 முதல் 31-ம் தேதி வரை தினமும் 044 - 66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால்,  நினைவாற்றல் குறைவு, தலைவலி, வலிப்பு நோய், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு மூளை, நரம்பியல் தொடர்பான பிரச்னைகள், சந்தேகங்கள்,  அதற்கான தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார்  மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் கே.ஸ்ரீதர்

நலம், நலம் அறிய ஆவல்!

  மூளையின் செயல்பாடுகள் என்ன?

நலம், நலம் அறிய ஆவல்!

  மூளையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

நலம், நலம் அறிய ஆவல்!

  வலிப்பு நோய்க்கு தீர்வு உள்ளதா?

நலம், நலம் அறிய ஆவல்!

  பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது?

நலம், நலம் அறிய ஆவல்!

  பக்கவாதம் வந்தவர்கள் செய்ய வேண்டியது என்ன?

நலம், நலம் அறிய ஆவல்!

  தலைக்காயங்களைத் தவிர்க்க வழிகள் என்ன?

நலம், நலம் அறிய ஆவல்!

  ஞாபகமறதி ஏன் ஏற்படுகிறது?

நலம், நலம் அறிய ஆவல்!

  டிமென்ஷியாவும் சாதாரண ஞாபக மறதியும் ஒன்றா?

நலம், நலம் அறிய ஆவல்!

  தலைவலிக்கான காரணங்கள் என்ன?

நலம், நலம் அறிய ஆவல்!

  ஒற்றைத் தலைவலியை தவிர்க்க முடியுமா?

நலம், நலம் அறிய ஆவல்!

  மூளையில் அறுவைசிகிச்சை செய்வது சரியா?