Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:

உண(ர்)வுத் திருவிழா!

அக்கம் பக்கம்

சர்வதேச தாவர உணர்வாளர்கள் சங்கமம் தனது 42-வது உலக இயற்கை உணவுத் திருவிழாவை, ‘புதியதோர் உலகம் சமைப்போம்’ என்ற பெயரில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் விகடன் பிரசுரத்தின் ‘உணவு யுத்தம்’ புத்தகம் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய புத்தக ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் “நான் உணவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவனோ, மருத்துவனோ இல்லை. நான் ஒரு நாடோடி. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றி கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லா வகை உணவுகளையும் ருசித்தேன். அது தந்த அனுபவமே உணவு யுத்தம் பற்றி எழுதத் தூண்டுதலாக இருந்தது. இன்று பல உணவகங்களில் நம்முடைய மண் சார்ந்த பாரம்பரிய உணவுகள் கிடைக்காது. ஆனால், வெளிநாட்டு  உணவுகள் கிடைக்கும். நம் உணவு நம் ஊரிலே இல்லை என்பது வேதனையான விஷயம். ‘உணவு’ என்பது மாபெரும் சந்தைத் திடல். சர்க்கரை, புளி என்று ஒவவோர் உணவுப் பொருளுக்குப் பின்னும் மாபெரும் அரசியல், பன்னாட்டு நிறுவனங்களின் செயல்திட்டம் இருக்கின்றன. புளிப்புரேகை, இனிப்பு ரேகை, கசப்பு ரேகை என்று பல ரேகைகள் நம் நாட்டைப் பிரித்துக்கொண்டே இருக்கின்றன’’ என்றார்.

அக்கம் பக்கம்

எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மதுரை டாக்டர்!

மதுரையைச் சேர்ந்த டாக்டர் கல்யாணி கோமதிநாயகம்,  எபோலா பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிகிச் சையளிக்க லைபீரியா  சென்று வந்திருக்கிறார். ‘‘எல்லைகளைத் தாண்டிய மருத்துவர்கள் (MSF/Doctors Without Borders) என்ற அமைப்பு நீங்கள் லைபீரியா என்ற நாட்டுக்குச் சென்று

அக்கம் பக்கம்

அங்கிருக்கும் நோயாளிகளுக்கு உதவ முடியுமா? அது பின்தங்கிய நாடு என்பதால் சில மருத்துவர்கள் வர மறுக்கிறார்கள் என்றனர். அதன் பின்னரே அந்த மக்களுக்கு உதவ முடிவு எடுத்தேன். அவர்களுக்கு சிகிச்சை அளித்ததைவிட, சாகும் தருவாயில் இருப்பவர்களிடம் இருந்து எபோலா பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதே, மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது. ஒரு நாளுக்கு 50 முறைக்கு மேல் கை கழுவுவோம், முகமூடி இல்லாமல் தூங்கக்கூட மாட்டோம். லைபீரியாவில் பணியாற்றிய பின் ஜெனீவாவிலும் 21 நாட்கள் பணியாற்றினேன். இந்த பயணங்களின்போது மனிதம் எவ்வளவு அற்புதமானது என்பதை உணர்ந்து கொண்டேன்’’ என்று நெகிழ்கிறார் இந்த சூப்பர் டாக்டர். 

பாகிஸ்தான் குழந்தைக்கு முக அறுவை்சிகிச்சை!

அக்கம் பக்கம்

பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்தர் அலி மற்றும் ரசியா தம்பதியின் குழந்தை நோமனுக்கு, கண் மற்றும் கண்ணைச் சுற்றி உள்ள எலும்புகள் சரிவர இணையாததால் முகப்பிளவு ஏற்பட்டது. நோமனின் பெற்றோர் குழந்தையை சென்னை அழைத்து வந்தனர். முகச்சீரமைப்பு நிபுணர் பாலாஜி தலைமையில், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள்,   இடது கண்ணுக்கு செயற்கைக் கண் பொருத்தியும், வலது கண் பார்வை மற்றும் கண் இமைகளை சரிசெய்தும் சிகிச்சை அளித்தனர். கண்ணுக்கும் மூக்குக்கும் இடையே சிலிக்கான் டியூப் பொருத்தி, நிற்காமல் கண்ணீர் வழிந்துகொண்டிருந்த குறைபாட்டையும் சரிசெய்துள்ளார் டாக்டர் பாலாஜி.

‘எய்ட்ஸ்’ தகவலுக்கு இலவச எண்!

உலக எய்ட்ஸ் தினமான டிசம்பர் 1 அன்று, இந்தியாவின் தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டுக் கழகம், தனியார் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து,  எய்ட்ஸ் பற்றிய தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ள உதவும் விதமாக, 1079 என்ற பிரத்யேக 24 மணி நேர தொலைபேசி எண்ணை, பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த எண்ணை அழைத்தால், எய்ட்ஸ் நோய் பற்றிய விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ளலாம். ‘‘எய்ட்ஸ் நோய் பற்றி  தெரிந்துகொள்ள மருத்துவர்களையோ நண்பர்களையோ அணுக, மக்கள் மிகவும் கூச்சப்படுகிறார்கள். இனி இந்த தொலைபேசி மூலமே எய்ட்ஸ் நோய் விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியும். இந்த சேவையை தொடங்கிய முதல் நாளே 8,000 அழைப்புகள் வந்துள்ளதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ் உட்பட 8 மொழிகளில் இந்த தொலைபேசி எண்ணைத்  தொடர்புகொண்டு தகவல் பெற முடியும்.’’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.

குழந்தைகளை கண்டிக்காதீங்க!

அக்கம் பக்கம்

குழந்தைகள் பொய் சொன்னால் கண்டிப்பவரா நீங்கள்? அப்ப இது உங்களுக்குத்தான். பொய் சொன்னதற்காக குழந்தையைக் கண்டித்தால், பயத்தில் அந்த குழந்தை இன்னும் அதிகமாகப் பொய் சொல்லவே செய்யும்  என்கிறது மெக்கிள் பல்கலைக்கழகம்    (McGill University) மேற்கொண்ட ஆராய்ச்சி. குழந்தைகள் தவறுகள் செய்வது சகஜம். நீங்கள் எல்லாத் தவறையும் கண்டிக்கத் தொடங்கினால் அவர்கள் மேலும்  தப்பு செய்வார்கள். அவர்கள் மனதில்  கண்டிப்பானவர் என்ற பிம்பமே உங்களைப் பற்றி இருக்கும். இதனால் எந்த தவறையும் உங்களிடம் பகிர மாட்டார்கள். ஆகையால், குழந்தைகள் தவறு செய்தால் அவர்களிடம் அது ஏன் தவறு, அதன் விளைவுகள் பற்றி எடுத்து கூறுங்கள். இப்படி செய்வதன் மூலமே, அவர்கள் அந்தத் தவறை மீண்டும் செய்யாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்கிறது ஆய்வு.