Published:Updated:

முடிவுக்கு வருமா முடியில்லா பிரச்னை!

டாக்டர் ஜி.ஆர்.ரத்னவேல் தோல் மற்றும் அழகு சிகிச்சை நிபுணர், சென்னை.

முடிவுக்கு வருமா முடியில்லா பிரச்னை!

டாக்டர் ஜி.ஆர்.ரத்னவேல் தோல் மற்றும் அழகு சிகிச்சை நிபுணர், சென்னை.

Published:Updated:

முடி கொட்டுவதற்கு சுற்றுச்சூழல், உடல்வாகு, பரம்பரைத்தன்மை என ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. முடியைச் சரிவரப் பராமரிக்காமல் இருப்பது அதில் ஒன்று.

முடிவுக்கு வருமா முடியில்லா பிரச்னை!

தலையில் சராசரியாக ஒரு மில்லியன் முடிகள் இருக்கின்றன.  நாம் பிறக்கும்போது பூனை முடியாகவும், பின் வளர வளர கருத்த தடித்த முடிகளாகவும் மாறுகின்றன. தலைமுடிகளில் 80 சதவிகிதம் முடிகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன, 15 சதவிகிதம் முடிகள் தூங்கிக்கொண்டே இருக்கின்றன, 5  சதவீதம் முடிகள் உதிர்கின்றன.

ஒருமுடி தொடர்ந்து மூன்று வருடம் வளர்கிறது, மூன்று மாதம் தூங்குகிறது, பின்பு உதிர்கிறது. ஒரு  நாளைக்கு சராசரியாக 50 முதல் 70 முடிகள் உதிர்கின்றன. இப்படி முடி உதிர்வது இயற்கை. இந்த உதிர்ந்த முடிக்குப் பதிலாக புதிய முடிகள் வளர ஆரம்பித்துவிடுகின்றன.  உதிர்ந்த முடி திரும்ப வளர முடியாமல் போனால்தான் அதை முடி கொட்டுதல் என்கிறோம்.

பொடுகினால் வரும் முடி உதிர்தல், டைபாய்டு போன்ற காய்ச்சலுக்கு பிறகுவரும் முடி உதிர்தல் நிரந்தரமானது அல்ல. நிரந்தர முடி உதிர்தலை ஆன்ட்ரோ ஜெனிடிக் அலோபேசியா(Androgenetic Alopecia)என்கிறோம். ஆன்ட்ரஜன் என்ற ஹார்மோனின் உபபொருள்,  முடியின் வேரை அழிக்கும் தன்மைகொண்டது. இந்த உபப்பொருள் அதிகரிக்கும்போது வழுக்கை ஏற்படுகிறது. இது பரம்பரை காரணமாக ஏற்படுவது இல்லை. மாத்திரைகள் மூலம் இதனை சரிசெய்யலாம்.

ஆன்ட்ரஜன் ஹார்மோனால் பாதிக்கக்கூடிய முன் தலைமுடி, பாதிக்காத  பின்னந்தலை முடி என தலையில் இரண்டு வகை முடிகள் இருக்கின்றன. ஹார்மோன் பாதிப்பால் முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்களுக்கு முடி மாற்று அறுவைசிகிச்சையின்போது பின்னந்தலை முடியை எடுத்து நாற்று நடுவதுபோல முன்தலையில் பொருத்திவிடுவோம்.  

முடிவுக்கு வருமா முடியில்லா பிரச்னை!

பின்னந்தலையிலும் முடி இல்லை என்றால் செயற்கை முடியைப் பயன்படுத்தலாம். இது பிளாஸ்டிக் முடியாகும். முதலில் ஒன்று இரண்டை மட்டும் நட்டு ஒவ்வாமை ஏற்படுகிறதா என்று பரிசோதிக்கப்படும். பாதிப்பு ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே பிளாஸ்டிக் முடி அறுவைசிகிச்சை செய்யப்படும். இந்த  பிளாஸ்டிக் முடி மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். இதை பாதுகாக்கும் முறைகள் கடினமானது.

காய்ச்சலுக்குப் பிறகு வரும் முடி உதிர்தலுக்கு பேரீச்்சம் பழம், பருப்பு வகைகள் போன்ற புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

தலையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், ஊட்டமான உணவு முறை, கவனமான பராமரிப்பு ஆகியவை இருந்தாலே தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.              

 அ.பார்த்திபன்