ஸ்பெஷல்
Published:Updated:

நலம் தரும் நட்ஸ்!

சோபியா டயட்டீஷியன்

நலம் தரும் நட்ஸ்!

நட்ஸ் மில்க் ஷேக்

ஒரு கைப்பிடி பாதாம், முந்திரி, அக்ரூட், வால்நட், பிஸ்தா போன்ற விருப்பமான நட்ஸ் வகைகளுடன் பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் காய்ச்சிய பாலைவிட்டு மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அடித்து எடுக்கவும். ஆப்பிள், கொய்யா, மாதுளை, திராட்சை போன்ற பழங்களைப் பொடியாக நறுக்கி அதன் மேல் நட்ஸ் மில்க்ஷேக் விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென சாப்பிடலாம்.

நலம் தரும் நட்ஸ்!

  முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் என எல்லா நட்ஸ் வகைகளையும் சேர்த்து, 30 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். வயதானவர்களுக்கு 15 கிராம் போதுமானது. நெய், பருப்பு, எண்ணெய் அதிகம் சேர்த்துக்கொள்பவர்கள், நட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நலம் தரும் நட்ஸ்!
நலம் தரும் நட்ஸ்!

  நட்ஸில் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. மேலும், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்து இருக்கின்றன.

நலம் தரும் நட்ஸ்!

  கெட்ட கொழுப்பைக் குறைக்கும். உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதிக ஆற்றலைக் கொடுக்கும். சருமத்தைப் பொலிவாக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

நலம் தரும் நட்ஸ்!

  மீனில் இருக்கும் ஒமேகா 3 அக்ரூட்டில் அதிகம். ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும். சைவம் சாப்பிடுபவர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். 

நலம் தரும் நட்ஸ்!

  நட்ஸ் வகைகளை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள், உடல் மெலிந்தவர்கள், வயதானவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். முந்திரிப் பருப்பை வயதானவர்கள், இதய நோயாளிகள் சாப்பிட வேண்டாம்.

ரேவதி