ஸ்பெஷல்
Published:Updated:

3 ஸ்டார் ரெசிப்பி

செஃப் பத்மநாபன்

3 ஸ்டார் ரெசிப்பி

சூர்யா என்ன விரும்பிச் சாப்பிடுவார்? அவரது ஃபேவரைட் டிஷ் எது?

அம்மா, மனைவி கையால் சமைத்து சாப்பிடுவதுதான் சூர்யாவுக்குப் பிடிக்கும். குடும்பத்தோடு, நண்பர்களோடு வெளியே சென்றால், சூர்யா ரசித்துச் சாப்பிடுவது கிரில்டு ஃபிஷ், சாலட்ஸ், ஜூஸ்.

சூர்யாவின் ஃபேவரைட் ரெசிப்பிகளை நமக்குச் செய்து காட்டியிருக்கிறார் எக்மோர் ரமடா ஹோட்டல் சீஃப் செஃப் பத்மநாபன்.

செர்ரி தக்காளி வித் ஆலிவ் சாலட்

தேவை: செர்ரி தக்காளி  2 கப், ஆலிவ் ஆயில்  ஒரு டேபிள்ஸ்பூன், பால்சாமிக் வினிகர்  ஒரு டீஸ்பூன்,  ஆட்டுப் பால் சீஸ் (துருவியது)  2 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள்  தேவையான அளவு, துளசி இலை  6.

3 ஸ்டார் ரெசிப்பி

செய்முறை: ஃப்ரை பான் ஒன்றை அடுப்பில் வைத்து, 180 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு சூடானதும், செர்ரி தக்காளி சேர்த்து, ஆலிவ் ஆயிலைத் தெளிக்கவும். 15 நிமிடங்களில் தக்காளி நன்றாக மிருதுவாகிவிடும். இதை ஒரு பவுலில் போட்டு, வினிகர், உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும்.  பிறகு தட்டில் கொட்டி, சீஸ் மற்றும் துளசி இலைகளால் அலங்கரித்தால், ஆலிவ் சாலட் ரெடி.  

கிரில்டு ஃபிஷ் வித் லெமன் பட்டர் சாஸ்

தேவை: வெண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் லெமன் ஜூஸ்  ஒரு டீஸ்பூன்,  மூலிகை தைம் இலை  சிறிதளவு, உப்பு, கருப்பு மிளகு  ருசிக்கேற்ப,  பசலைக்கீரை  60 கிராம், கால் கிலோ எடையுள்ள மீன்  1, வெஜிடபிள் ஆயில்  ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க: வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு, புரோகோலி, துருவிய கேரட்,  நறுக்கிய எலுமிச்சைத் துண்டு, செர்ரி தக்காளி.

3 ஸ்டார் ரெசிப்பி

செய்முறை:  ஒரு சிறிய பாத்திரத்தில் வெண்ணெய், லெமன் ஜூஸ், தைம் இலை, சிட்டிகை உப்பு, மிளகைப் போட்டு ஒரு ஸ்பூனால் நன்றாகக் கிளறவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து, அதில் பசலைக் கீரையைப் போட்டு வடிகட்டவும். க்ரில்லை நன்றாக சூடுபடுத்திக்கொள்ளவும். பிறகு, ஒரு தட்டில் மீனின் தோல் அடிப் பகுதியில் வருவது போல் வைத்து, மிளகுத்தூள் தூவி, நான்கு நிமிடங்கள் வேக வைக்கவும்.

சமைத்த பிறகு உப்பு, மிளகுத்தூளை மேலாகத் தூவவும். வெண்ணெய் மற்றும் லெமன் ஜூஸை மீன் மேல்  விடவும். கேரட், வெந்த காய்கறிகள், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து அலங்கரிக்கலாம்.

புரோகோலி வேர்க்கடலை சாலட்

தேவை: புரோகோலி பூ  1, வெள்ளை வினிகர், கனோலா ஆயில்  தலா 3 டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை பட்டர்  கால் கப், சோயா சாஸ்  ஒரு டேபிள்ஸ்பூன், செயற்கை ஸ்வீட்னர்  ஒரு டீஸ்பூன், இஞ்சித்தூள்  கால் டீஸ்பூன், நறுக்கிய உலர் செர்ரி  கால் டீஸ்பூன், உப்பு சேர்த்து வறுத்து அரைத்த வேர்க்கடலை  கால் கப்.

செய்முறை: ஒரு அகலமான பவுலில், வினிகர், ஆயில், வேர்க்கடலை பட்டர், சோயா சாஸ், செயற்கை ஸ்வீட்னர் மற்றும் இஞ்சித்தூளை சேர்க்கவும். நறுக்கிய புரோகோலியை பவுலில் போட்டு அலங்கரிக்கவும். உலர் பழங்கள் மற்றும் அரைத்த வேர்க்கடலையை மேலாகத் தூவி சாப்பிடலாம். 

3 ஸ்டார் ரெசிப்பி

செர்ரி தக்காளி வித் ஆலிவ் சாலட்:  செர்ரி தக்காளியில்  உள்ள வைட்டமின் சி, காயத்தை எளிதில் ஆற்றும்.  மற்றும் ஒமேகா 3 மூளை நன்றாகச் செயல்பட  உதவும். இதில் உள்ள கால்சியம் எலும்புத் தேய்மானத்தை தடுக்கிறது.

கிரில்டு ஃபிஷ் வித் லெமன் பட்டர் சாஸ்: கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி மற்றும் சி அதிகமாக உள்ளதால் எலும்புப் பிரச்னை, வயிற்றுப் புண், மலச்சிக்கல் பிரச்னை, கண் நோய்களைத் தடுக்கிறது.

புரோகோலி வேர்க்கடலை சாலட்: மிகவும் சத்து நிறைந்தது். புரோகோலி, சர்க்கரை நோய், கேன்சர் மற்றும் தைராய்டு பிரச்னை வராமல் தடுக்கும்.

மேங்கோ ஜூஸ் வித் யோகர்ட்: சிம்பிள் ரெசிப்பியாக இருந்தாலும், இதில் நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் கால்சியம், வைட்டமின் சி நிறையவே உள்ளன.

மாங்கோ ஜூஸ் வித் யோகர்ட்

3 ஸ்டார் ரெசிப்பி

தேவை: மாம்பழம்  1,  தயிர்  ஒரு கப், சர்க்கரை (அ) தேன்  சிறிதளவு.

செய்முறை: ஒரு மாம்பழத்தை தோல் நீக்கி நறுக்கி, அதனுடன் தயிர், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அருந்தலாம்.

ரேவதி,  படங்கள்: எம்.உசேன்

என்.பிரியங்கா, டயட்டீஷியன், சென்னை