ஸ்பெஷல்
Published:Updated:

சிறுதானிய இளநீர் இட்லிகள்

இனியவன், சமையல் நிபுணர்

சிறுதானிய இளநீர் இட்லிகள்

தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப், கொள்ளு அல்லது கம்பு அல்லது கேழ்வரகு - அரை கப், உளுந்து - கால் கப், இளநீர் தேவையான அளவு, பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, ஆமணக்கு விதை - 4, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தானியங்களை ஊறவைத்து, வடித்து, ஒரு துணியில் முளை கட்டவிடவும். (கம்பு இட்லி எனில் தயிரில் ஊறவைத்து முளை கட்டினால், சுவை நன்றாக இருக்கும்) முளை கட்டிய தானியத்தை அரைத்து, பால் எடுத்துக்கொள்ளவும்.ஊறவைத்த அரிசியை அரைக்கும்போது, ஆமணக்கு விதை, உப்பு, பச்சை மிளகாய், தானியப் பால் சேர்த்து அரைக்கவும். தண்ணீருக்குப் பதிலாக, இளநீரை மட்டுமே சேர்த்து அரைக்க வேண்டும். அரிசி மற்றும் உளுந்தைத் தனித்தனியே அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்க வேண்டும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லியாக வார்க்கலாம். தொட்டுக்கொள்ள புதினா, தக்காளி சட்னி சுவையாக இருக்கும்.

சிறுதானிய இளநீர் இட்லிகள்
சிறுதானிய இளநீர் இட்லிகள்

  இதே முறையில் தானியம் மட்டும் சேர்க்காமல், தேங்காய்த் துருவல், பச்சை கொத்தமல்லி சேர்த்து, இட்லி செய்யலாம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

சிறுதானிய இளநீர் இட்லிகள்

  பாகற்காயைப் பொரியல் போல் செய்து, மாவில் கலந்து, இட்லியாக வார்க்கலாம். வித்தியாசமான சுவையில் இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

சிறுதானிய இளநீர் இட்லிகள்

  விதவிதமான வடிவங்களில் இட்லி மாவை ஊற்றி, இயற்கையான நிறமிகளைச் சேர்த்து கலர்ஃபுல் இட்லிகளைச் செய்து குழந்தைகளுக்குத் தரலாம்.

குறிப்பு: தண்ணீருக்குப் பதிலாக இளநீர் சேர்ப்பதால், உப்பின் அளவை சற்று குறைத்துக்கொள்ளலாம். ஆமணக்கில் எண்ணெய் இருப்பதால், இட்லி மாவு ஊற்றும்போது துணியில் ஒட்டாமல் வரும்.

- க.தனலட்சுமி, படங்கள்: கு.பாலசந்தர்