ஸ்பெஷல்
Published:Updated:

ட்ரெக்கிங் ட்ரிக்!

கண்ணன் புகழேந்தி, விளையாட்டு பொது மருத்துவர்

புது இடம், புது மனிதர்கள் என ஜிலீர் அனுபவங்கள் தந்து பரவசப்படுத்துவதில், ட்ரெக்கிங்குக்கு மிக முக்கிய இடம் உண்டு. ட்ரெக்கிங் செல்லும் முன், எந்த இடத்துக்குச் செல்லவேண்டும், பாதை என்ன, தட்பவெட்ப நிலை எப்படி, உணவு கிடைக்குமா, கொடிய விலங்குகள் இருக்குமா, பாதுகாப்பு வசதிகள், தங்குமிடம் போன்றவற்றுக்கு என்னென்ன ஏற்பாடுகள், அங்கு பிராண வாயு அழுத்தம் எவ்வளவு, சென்று வரும் காலம் எவ்வளவு என்பன போன்ற தகவல்களை தெளிவாக முதலில் தொகுத்துக்கொள்ள வேண்டும்.

ட்ரெக்கிங் ட்ரிக்!

ட்ரெக்கிங்கின்போது மேடு, பள்ளம், மழை, வெயில், காற்று, புழுதி என பல இடர்ப்பாடுகளைக் கடந்துவர வேண்டியிருக்கும். சவாலுடன் இதை எதிர்கொண்டால், இயற்கையே நம்மை வழிநடத்தும். இயற்கையை ரசிக்க, மனதை ரிலாக்ஸாக்க புத்தாண்டின் ஆரம்பத்தில் ஒரு ட்ரிப் அடியுங்கள்.

ட்ரெக்கிங் நன்மைகள்:

ட்ரெக்கிங் ட்ரிக்!

  புது இடத்தில், வெவ்வேறு காலநிலை, வெவ்வேறு சூழலில் பயணிக்க வேண்டி இருக்கும். இதனால் உடல் வலுப்படும். மனம் புத்துணர்ச்சி அடையும்.

ட்ரெக்கிங் ட்ரிக்!

  குழுவாகச் செல்லும்போது, ஒற்றுமை உணர்வும், உதவி மனப்பான்மையும் பெருகும்.

ட்ரெக்கிங் ட்ரிக்!

  உடல் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக மாறும். தசை நார்கள் வலுவாகும். எடை கட்டுக்குள் இருக்கும், இதய நோய்கள்  அண்டாது, நுரையீரல் நன்றாக செயல்படும்.

ட்ரெக்கிங் செல்வதற்கு முன்பு:

ட்ரெக்கிங் ட்ரிக்!
ட்ரெக்கிங் ட்ரிக்!

  ஒரு வழிகாட்டி மேப் எடுத்துச் செல்ல வேண்டும்.

ட்ரெக்கிங் ட்ரிக்!

  ட்ரெக்கிங் செல்ல திட்டம் வகுப்பதற்கு ஓரிரு மாதங்கள் முன்பிருந்தே, தினமும் 10 கிலோமீட்டர் நடந்து செல்லப் பழக வேண்டும். மனதளவிலும், உடலளவிலும் தயாராக வேண்டும்.

ட்ரெக்கிங் ட்ரிக்!

  கண்டிப்பாக டி.டி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தேர்ந்த முதலுதவிப் பயிற்சியாளர் ஒருவரைக் கூடவே அழைத்துச் செல்ல வேண்டும்.

ட்ரெக்கிங் ட்ரிக்!

  40 வயதைத் தாண்டியவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று செல்ல வேண்டும். இதய நோய், உடல் பருமன், சுவாசக் கோளாறு உடையவர்கள், குழந்தைகள் கண்டிப்பாக ட்ரெக்கிங் செல்லக் கூடாது.

ட்ரெக்கிங் ட்ரிக்!

  முதலுதவிப் பெட்டியில் பாம்புக்கடிக்கான மருந்தும் இருக்க வேண்டும்.

ட்ரெக்கிங் செல்பவர்கள் கவனத்துக்கு:

1. பயணிக்கும் இடத்தில் குப்பை, பிளாஸ்டிக் பொருட்களைப் போடக் கூடாது. இயற்கையான சூழலை மாசுபடுத்தவே கூடாது.

2. ட்ரெக்கிங் சென்று வந்த பின்னர், அடுத்த ஒரு வாரத்திற்கு நன்றாக ஓய்வுஎடுக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டாம். உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால், மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

3. முதல் முறை ட்ரெக்கிங் செல்பவர்கள், அனுபவம் உள்ளவர்களுடன் இணைந்து செல்வது நல்லது.  

4. ஒரு முறை ட்ரெக்கிங் செல்வதற்கும், அடுத்த முறை செல்வதற்கும் இடையில் குறைந்தது 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை இடைவெளிவிட வேண்டும்.

ட்ரெக்கிங் போகத் தேவையானவை:

ட்ரெக்கிங் ட்ரிக்!

1. ட்ரெக்கிங் செல்லும் குறிப்பிட்ட நாட்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். அந்த பொருட்களை சுமக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

2. உள்ளாடைகளை அதிகளவும் மேலாடைகளை குறைவாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். குளிர்ப்பிரதேசம் மற்றும் மலைப் பகுதிகளுக்கு செல்பவர்கள், கம்பளி உடைகளைக் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

3. எளிதில் மடக்கி விரிக்கக்கூடிய படுக்கை, தரமான கூலிங்கிளாஸ், கைக்கடிகாரம், முதலுதவி மருந்துகள், குறிப்பிட்ட நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள், தண்ணீர் பாட்டில், கைகளுக்கான கிளவுஸ், உதடு வெடிப்பைத் தடுக்கும் களிம்புகள், வெப்பம், குளிரில் பயணிக்கும்போது சருமம் பாதிக்கப்படாமல் இருக்க, தோல் மருத்துவரின் ஆலோசனையுடன் சில வகை க்ரீம்கள், காய்ச்சல் மற்றும் தலைவலி மருந்துகள், தைலம் போன்றவற்றைக் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

ட்ரெக்கிங் விதிகள்:

1. தட்டையான ஷூ,  கேன்வாஸ் ஷூ, செருப்பு போன்றவற்றை அணியக் கூடாது. வெறும் காலிலும் செல்லக் கூடாது. விலை சற்று அதிகமானாலும், ட்ரெக்கிங்  செல்வதற்கு என்றே பிரத்யேக ஷூ சந்தையில் கிடைக்கும். அதைப் பயன்படுத்துவதே சிறந்தது.

2. ட்ரெக்கிங் செல்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, ட்ரெக்கிங் ஷூவை அணிந்து சில கிலோமீட்டர் தூரம் நடந்து பழக வேண்டும்.

3. ட்ரெக்கிங் செல்லும்போது தினமும் சாக்ஸ் மாற்ற வேண்டும். மிகவும் இறுக்கமான ஷூ அணியக் கூடாது.

பு.விவேக் ஆனந்த்