Published:Updated:

வயிற்றுக்குள்ளே உளவாளி!

புதுப்புது கருவிகள் அறிமுகம்

வயிற்றுக்குள்ளே உளவாளி!

புதுப்புது கருவிகள் அறிமுகம்

Published:Updated:
வயிற்றுக்குள்ளே உளவாளி!

'ஒரு சாண் வயித்துக்காகத்தான் இந்தப் பாடு!’ என்பார்கள். அதனால்தானோ என்னவோ... மனிதர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள்தான்.

வயிறு சம்பந்தமான நோய்களைக் கண்டுபிடிப்பதற்காகப் பல்வேறு பரிசோதனை முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் லேட்டஸ்ட் வரவு, எண்டோஸ்கோபி அல்ட்ராசவுண்ட். இந்த எண்டோஸ்கோபி கருவியையும், அல்ட்ராசவுண்ட் கருவியையும் பல ஆண்டுகளாகவே மருத்துவர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
பயன்படுத்தி வருகின்றனர். இப்போது, இந்த இரண்டையும் சேர்த்து, புதிய கருவி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த புதிய கருவி குறித்து மியாட் மருத்துவமனையின் குடல் மற்றும் இரைப்பை சிகிச்சைப் பேராசிரியர் டாக்டர் ஜார்ஜ் எம்.சாண்டி சொல்கிறார்..

'அல்ட்ராசவுண்ட் என்பது உடலுக்கு வெளிப்புறத்தில் இருந்து ஒலி அலையைச் செலுத்தி, அதன் எதிரொலியைக் கொண்டு உடலில் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் சோதனை முறை. இந்தக் கருவியில் உள்ள டிரான்ஸ்யூசர் என்ற பகுதியின் வழியாக ஒலி அலைகள் வயிற்றுக்குள் செலுத்தப்படுகின்றன. அந்த அலைகள் குறிப்பிட்ட உறுப்புக்குள் சென்று திரும்பும் எதிரொலியைப் படமாகப் பதிவு செய்து, அந்த உறுப்பில் எந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும். இந்த கருவியின் மூலம் இரைப்பை, கணையம், பித்தப் பாதை, பித்தப் பை, கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர்ப் பாதை போன்ற உறுப்புகளில் பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். குறிப்பாக, கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், பித்தப்பைக் கல், புற்றுநோய்க் கட்டி, சிறுநீரகக் கல் போன்ற நோய்களைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

வயிற்றுக்குள்ளே உளவாளி!

வளையும் தன்மை கொண்ட ஒரு டியூபை வாய் வழியாக செலுத்தி, உணவுக்குழாய், இரைப்பை, பெருங்குடல் ஆகிய பகுதிகளில் உள்ள பாதிப்புகளைக் கண்டறியவும் அறுவை சிகிச்சை செய்யவும் பயன்படும் கருவி, எண்டோஸ்கோபி. இந்த வளையும் தன்மையுடைய டியூப்பின் முனையில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். இதன் மூலம் எந்த உறுப்பில் பிரச்னை உள்ளது என்பதைக் கண்டறிய

வயிற்றுக்குள்ளே உளவாளி!

முடியும். இந்த கேமரா மூலம் உள் உறுப்புகளில் மேற்கொள்ளும் செயல்பாட்டை வெளியே கம்ப்யூட்டர் திரையில் பார்த்தபடி சிகிச்சை அளிக்க முடியும். உள்ளே செலுத்தப்படும் குழாயானது சுமார் 1 மீட்டர் நீளம் கொண்டது. இதன் முனையில் கேமராவும், வெளிச்சத்துக்காக பல்பும் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த கேமரா மூலம் படம்பிடிக்கப்படும் காட்சிகளைக் கொண்டு மேலே சொன்ன நோய்கள் தவிர அல்சர், குடல்புண், ரத்தக் கசிவு போன்ற பாதிப்புகள் இருக்கிறதா என்பதையும் அறிய முடியும். தேவைப்பட்டால் குழாயின் முனைப்பகுதியில் உள்ள சிறிய துளை மூலம் பயாப்சி சோதனைக்காக திசு எடுக்கலாம்.

தற்போது இந்த இரண்டையும் ஒன்றாக இணைத்து எண்டோஸ்கோபி அல்ட்ராசவுண்ட் என்ற நவீன கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக அல்ட்ரா சவுண்ட் கருவியில் உள்ள டிரான்ஸ்யூசர் பகுதியை சிறிதாக வடிவமைத்து, எண்டோஸ்கோபி கருவியில் உள்ள டியூப் முனையில் பொருத்தி உள்ளனர். இதனால், இது வரை வயிற்றின் வெளியில் இருந்து அனுப்பப்பட்டு வந்த ஒலி அலைகள், தற்போது வயிற்றுக்கு உள்ளேயே அனுப்பப்பட்டு, எதிரொலி பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் எதிரொலி, படமாக சேமிக்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய அதிக விவரங்களும், துல்லியமான படங்களும் நமக்குக் கிடைக்கின்றன.

எண்டோஸ்கோபி அல்ட்ராசவுண்ட் செய்யும்போதும் தேவைப்பட்டால் மட்டுமே நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். இந்த சோதனைக்கு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். பழைய எண்டோஸ்கோபி முறையில் வயிறு, குடல் பகுதிகளை மட்டுமே பார்வையிடலாம். ஆனால் நவீன எண்டோஸ்கோபி அல்ட்ராசவுண்ட் முறையில் கணையம், கணைய நாளம், பித்தப்பை, கல்லீரல்,  போன்ற வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் அனைத்து விதமான பாதிப்புகளையும் துல்லியமாகவும், தெளிவாகவும் கண்டறிய முடியும். மேலும், புற்றுநோய், இரைப்பை மற்றும் உணவுக் குழாயில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

இது தவிர புதிதாக கேப்ஸ்யூல் எண்டோஸ்கோபியும் வந்துள்ளது. சிறிய மாத்திரை வடிவிலான கேமராவை உணவு மண்டலத்துக்குள் அனுப்பி நோயின் பாதிப்பைக் கண்டறிய இது பயன்படுகிறது. கேப்ஸ்யூல் வடிவிலான கேமரா சுமார் 8 மணி நேரம் வரை வயிற்றில் இருந்து 50,000 படங்களை அனுப்பும் திறன் கொண்டது. வயிற்றுக்குள் அமர்ந்து கொண்டே ஓர் உளவாளி போன்று, அதன் செயல்பாடுகள் பற்றி முழுமையான தகவல்களைக் கொடுக்கிறது. இந்த நவீன கருவியின் துணைக் கொண்டு வயிற்று நோய்களுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க முடிகிறது!'' என்றார்.

அதிரடி முன்னேற்றம்தான்.

- சி.காவேரி மாணிக்கம்

படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism