Published:Updated:

எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, வினிகர் போதும்... பைபாஸ் சர்ஜரி தேவையில்லை..! வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மையா? வதந்தியா? #Alert

எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, வினிகர் போதும்... பைபாஸ் சர்ஜரி தேவையில்லை..! வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மையா? வதந்தியா? #Alert

எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, வினிகர் போதும்... பைபாஸ் சர்ஜரி தேவையில்லை..! வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மையா? வதந்தியா? #Alert

எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, வினிகர் போதும்... பைபாஸ் சர்ஜரி தேவையில்லை..! வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மையா? வதந்தியா? #Alert

எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, வினிகர் போதும்... பைபாஸ் சர்ஜரி தேவையில்லை..! வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மையா? வதந்தியா? #Alert

Published:Updated:
எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, வினிகர் போதும்... பைபாஸ் சர்ஜரி தேவையில்லை..! வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மையா? வதந்தியா? #Alert

"நண்பர்களே கவனியுங்கள்...!

இது உண்மைச் சம்பவம்...

உங்கள் ரத்தக் குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்!"

என்ற அழைப்போடு கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப்பில் சுற்றி வருகிறது இந்தச் செய்தி. 

"தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில், அந்த நோயாளி ஆயுர்வேத மருத்துவர் ஒருவரைச்  சந்தித்தார். ஆஞ்சியோ சோதனையில், இதய ரத்தக் குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டு விட்டதாகவும் தெரிவித்தார். ஆனால்,  'பைபாஸ் அறுவை சிகிச்சை தேவையில்லை' என்றும், ஒரு மாதத்துக்கு கீழேகண்ட பானத்தை அருந்தும்படியும் அந்த ஆயுர்வேத டாக்டர் நோயாளியிடம் தெரிவித்தார். 

ஆனாலும் நோயாளிக்கு நம்பிக்கை வரவில்லை.  ஆயுர்வேத மருத்துவர் சொன்னவாறு, அந்த மருந்தை சாப்பிட்டுக்கொண்டே , மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில், பைபாஸ் அறுவை  சிகிச்சைக்கு ரூ.2,25,000 கட்டிவிட்டார். ஆபரேஷனுக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆபரேஷனுக்கு முதல் நாள், நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் வியந்து போனார்,. அந்த நோயாளியின் இதய ரத்தக்குழாய் அடைப்பு முற்றிலும் நீங்கியிருந்தது.  

இதய ரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்துக்கு உரிய மூலப்பொருள்கள்.

1 கப் எலுமிச்சைச் சாறு

1 கப் இஞ்சிச் சாறு

1 கப் பூண்டு சாறு

1 கப் ஆப்பிள் சீடர் வினிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாகக் கலக்குங்கள். லேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். முக்கால் பாகமாகக் குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்பூன் பானத்தை அருந்துங்கள்.  நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்"

- வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட  சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது இந்தச் செய்தி. இந்த மருந்தை எப்படிச் செய்வது என்று செயல்முறை விளக்கமும் கொடுத்திருக்கிறார்கள். இந்த மருந்தைச் சாப்பிடுவதால் ரத்தக் குழாய் அடைப்புக்காக செய்யப்படும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள். 

இதய ரத்தக்குழாய் அடைப்பு என்பது மிகவும் விபரீதமான நோய். பெரும்பாலான மருத்துவர்கள், பைபாஸ் அறுவை சிகிச்சையையே இதற்குத் தீர்வாக பரிந்துரைக்கிறார்கள். ஆனால், சர்வசாதாரணமாக நாம் பயன்படுத்தும் சில பொருள்கள் மூலமாகவே இதய ரத்தக்குழாய் அடைப்பை நீக்க முடியும் என்று பரவும் இந்த செய்தி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

"உணவே மருந்து, மருந்தே உணவு" என்னும் உன்னத வாழ்வியலைப் பின்பற்றித்தான், நம் முன்னோர்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்தார்கள். இன்றைய வாழ்க்கை முறை, பணிச்சூழல், உணவுப்பழக்கம் போன்றவை முற்றிலும் மாறிவிட்டன. விளைவு, முன்பெல்லாம் வயதானவர்களையே அதிகமாக காவு வாங்கிய இதய நோய்கள் இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலி கேட்கின்றன. இன்றைக்கு நவீன மருத்துவத்தின் உதவியுடன் பல்வேறு முன்னேற்றங்களை எட்டிய நமக்கு இன்னமும் சவாலாக இருக்கக்கூடியவை இதய நோய்கள்.  ஏகப்பட்ட செலவு, தொடர் சிகிச்சை, காலம் முழுவதும் மாத்திரை மருந்துகள் என வாழ்க்கையையே முடக்கிப்போடும் இதய ரத்தக்குழாய் அடைப்பை இந்த எளிய மருந்து மூலம் குணப்படுத்திவிட முடியும் என்ற செய்தி ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது. பலரும் அந்த மருந்தை பரிட்சித்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

உண்மையில் இப்படியொரு மருத்துவம் ஆயுர்வேதத்தில் இருக்கிறதா? ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறதா? இந்த மருந்து இதய அடைப்பு நோயைக் குணப்படுத்துமா? 

ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம்.   

"இந்த  தகவல் இரண்டு மூன்று மாதங்களாகவே பரவியதுதான். இப்போது, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. அந்த மருந்தின் மூலப்பொருள்களாக சொல்லப்பட்டுள்ள எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய நான்கு பொருள்களும் சிறந்த மருத்துவக் குணம் கொண்ட உணவுப் பொருள்கள்தாம். இந்த பொருள்கள் அனைத்துக்குமே ரத்தக் குழாய்களை சுத்தப்படுத்தும் பண்பு

இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதேநேரத்தில், இப்படி ஒரு மருந்துக் கலவை பற்றி ஆயுர்வேத புத்தகங்களில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை.  ஆனால், நவீன மருத்துவம் இல்லாத காலத்திலும் நம் முன்னோர்கள் உணவின் மூலமாகவே நோய்களிலிருந்து தங்களைக் காத்துக்கொண்டனர்.  அப்படி, நம் முன்னோரின் அனுபவ ஆராய்ச்சிகளில் உணர்ந்த விஷயங்களை அடுத்தடுத்த தலைமுறைகளும் வாய்மொழியாக கொண்டு சேர்த்துள்ளனர். அப்படி  கிடைக்கப்பெற்ற வாய்வழி மருத்துவத் தகவல்களே சுமார் 60-க்கும் மேற்பட்ட நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.     

ஸ்கேன் போன்ற நவீன தொழில்நுட்பம் இல்லாத பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இதயத்தின் அமைப்பு பற்றியும் அதில் ஏற்படக்கூடிய நோய்கள், அதற்கான அறிகுறிகள், நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.  'மலராத தாமரையின் தலைகீழான உருவம் போன்றது இதயம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு இதயம் அவனுடைய உள்ளங்கை அளவுதான் இருக்கும் என்றும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும், உடலில் உணவுக்குழாய் முதல் மலக்குழாய் வரை எண்ணற்ற குழாய்கள் உள்ளன. இதில் முக்கியமானது 13 குழாய்கள். இதில் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்க்கு 'ரஸவஷா ஸ்ரோதஸ்' என்று பெயர்.  இந்த ரத்தக் குழாய்கள் சீராக இல்லை என்றால் கட்டி, குழாய் அடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளால் தொந்தரவு ஏற்படலாம் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல், இப்போது நாம் 'மாரடைப்பு' என்று சொல்லக்கூடிய நோயை 'ஹீருத் சூலம்' என்கிறது ஆயுர்வேதம். அதாவது, 'ஹீருத்' என்றால் `இதயம்' என்றும், 'சூலம்' என்றால் `வலி' என்றும் பொருள்.  மூச்சிரைப்பு (மூச்சுத்திணறல்), இதய பாரம் (இதயத்தில் கடுமையான வலி), மூர்ச்சையடைவது (மயக்கம்) போன்ற  மாரடைப்புக்கான அத்தனை அறிகுறிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மருந்து எப்படி வேலை செய்கிறது?

உணவே மருந்தாக இருப்பது  மிகவும்  நல்லது. எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர்  ஆகிய நான்குமே உணவுப்பொருள்கள்தான். மேலும் இவை எப்படி வேலை செய்யும் என்று அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். புளிப்புச் சுவை இதய ஆரோக்கியத்துக்கு நல்லது; எலுமிச்சை,  ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவை அதிக புளிப்புச் சுவை உடைய உணவுகள். இவற்றில் உள்ள சத்துகள் ரத்தக் குழாய்களைச் சீராக இயங்க வைக்கும்.  'புளிப்புக்காடி' என்னும் வினிகர்  எளிதாக உட்கிரகிக்கக்கூடியது. கட்டியை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு. ரத்தக்குழாயில் படிந்திருக்கும் கொழுப்பை இது கரைத்து விடும். 

இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை காரச் சுவை கொண்டவை. பூண்டுச் சாற்றுக்கு ஆயுர்வேதத்தில் `கடுரசம்' என்று பெயர். பூண்டு கொழுப்பைக் குறைக்கும் என்பது பலரும் அறிந்ததுதான். அதேபோல, ரத்தக் குழாயில் படியக்கூடிய கொழுப்பையும் கரைக்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைதலைத் தடுக்கும் பண்பும் இதற்கு உண்டு  என்கிறது ஆயுர்வேதம், இதற்கு "சோனித சங்க பின்னதி " என்று பெயர். அதேபோல, இஞ்சி கல்லீரல் செயல்பாட்டுக்கும், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் பெரிதும் துணை புரிகிறது. இஞ்சிக்கும் ரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பைக் குறைக்கும் தன்மை உள்ளது.

இந்த மருந்துக் கலவையை எடுத்துக்கொண்டால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள், கழிவுகள் நீங்குவதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

உடல் எடை குறைக்க, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, ரத்தக் கொழுப்பைக் குறைக்க என பலவழிகளில் உடல் ஆரோக்கியத்துக்கும்  இந்த மருந்து உதவும்.  இந்த மூலப்பொருள்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே கூட பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுத்துவிடமுடியும். மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகளுக்கு காரணமான உடல் பருமன் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். 

இந்த மருந்துக் கலவை பற்றி,  ஆயுர்வேத மருத்துவத்தின் பழைய நூல்களில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இதுகுறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், எத்தனை இடத்தில் அடைப்பு உள்ளது, எந்தளவுக்கு பிரச்னை உள்ளது மற்றும் பாதிப்புத் தன்மையைப் பொறுத்து ஆயுர்வேத மருத்துவர்கள் இதை பரிந்துரைப்பார்கள்  அதேபோல, ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்கள், ஆரம்ப நிலையில் உள்ள இதய நோயாளிகள், ஆங்கில மருந்துகள் எடுத்துக்கொள்பவர்களும் இதை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்" என்றார்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் `ஆயுர்வேதம்' என்ற பெயரில் இதுபோன்ற  மருத்துவக் குறிப்புகள் ஏராளமாக வெளியாகின்றன. அவற்றையெல்லாம் கண்களை மூடிக்கொண்டு அப்படியே நம்பிவிடக்கூடாது. குறிப்பாக, நோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், இதுபோன்ற தகவல்களை மட்டும் நம்பி மருத்துவரிடம் தக்க சிகிச்சை பெறாமல் இருந்துவிடக் கூடாது. எந்த மருத்துவ முறையாக இருந்தாலும், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு மருந்துகளை உட்கொள்வதே நல்லது.