அனிதா இப்ப, ப்ளஸ் டூ. இந்த வருஷம் எடுக்கும் மார்க்குதான் அவளது வாழ்க்கையைத் தீர்மானிக்கப்போவதாக அம்மாவும் அப்பாவும் டீச்சர்களும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர். அவளுக்கு இன்னொரு அச்சுறுத்தலும் இருந்தது.

அவளை சில பையன்கள் உற்று உற்றுப் பார்க்கிறார்கள். ஏக்கமாகப் பார்க்கிறார்கள்... உடலயே துளைப்பது போல சிலர் அவளைப் பார்க்கிறார்கள்.

அவள் குனிந்து தன் டிசர்ட்டைப் பார்த்தாள். அதில், 'ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி’ என்று எழுதியிருந்தது. என்ன வார்த்தை எழுதியிருக்கிறது என்பதைக்கூட கவனிக்காமல் வாங்கித்தந்த அம்மாவை நொந்துகொண்டாள். பச்சை கலர் போட்டால் களையாக இருக்கும் என்பது மட்டும்தான் அம்மாவுக்குத் தெரியும்.

வீட்டில் யாரும் இல்லை. அவள் மீண்டும் இரண்டுபுறமும் கூர்ந்து பார்த்தாள். அதன் மேல், அவளுக்கு ஒரு கவனமும் கர்வமும் கொஞ்ச நாட்களாக இருந்தது. முகத்தில் பளபளப்புகூடி, உடம்பு முழுக்கவே கோட்டிங் கொடுத்தது மாதிரி பளிச்சென ஒரு களை.

கதவைத் தாழ்போட்டுவிட்டு, கண்ணாடி முன் நின்று, மிகுந்த கவனத்துடன் டி சர்ட்டை மெள்ள மெள்ள மேல் நோக்கிச் சுருட்டினாள். கொஞ்ச நாட்களாகக் குளிக்கும்போது கவனித்திருக்கிறாள். ஒரு பக்கம் சற்றே சிறிதாக இருப்பது போல ஒரு கவலை. கண்ணாடியில் நேருக்கு நேராகப் பார்த்தபோது இது என்ன கோளாறு? இரண்டும் சமமாகி... சரியாகிவிடுமா என்ற சந்தேகம் வலுத்தது. வனிதாவுக்கு இருப்பதைவிட தனக்கு சிறிதாக இருப்பதால் ஒரு கவலையும் இருந்தது. 'என்ன அளவு இருந்தால் அது அழகானது’ என்பதிலும் அவளுக்குக் குழப்பம். 'மார்பகம் பெரிதாக வேண்டுமா’ என்ற விளம்பரம் ஒன்று பத்திரிகையில் வெளியாகி இருந்தது. பெரிதாக மாற்ற என்ன செய்ய வேண்டும். கழுத்துக்குக் கீழே கவலை திரண்டிருந்தது.

பெட்டிகோட் போட்டு அதன் மேல் சட்டையைப் போட்டுச் செல்வதுதான் அனிதாவின் வழக்கம். பிரா போட்டால் சரியாகிவிடும் என நினைத்தாள்.

கடைக்காரனிடம் காட்டி, 'இவளுக்கு பிரா ஒண்ணு கொடுப்பா’ என்று கேட்டாள் அம்மா.

பெரிய தர்ம சங்கடம். கடைக்காரன் கண்ணாலேயே எடை போட்டுவிட்டு, கப் சைஸ் தெரியுமா? என்றான். அவளுக்கு வெட்கமாகிவிட்டது. 'வாம்மா போகலாம்’ என்று அம்மாவை இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள். கல்லூரிக்குப் போன பின்பும் பெட்டி கோட் போட்டுக் கொண்டிருக்க முடியாது. என்ன 'சைஸ் பிரா’ என்று எப்படி சொல்வது?

டவுட் கார்னர்...

மார்பகங்கள் இரண்டும் ஒரே அளவாக இருக்குமா?

பொதுவாக இரண்டு மார்பகங்களும் ஒரே அளவாக இருப்பது இல்லை. சிறிய வித்தியாசம் இருக்கும். நம் உடலில், இரண்டு இரண்டாக உள்ள கைகள், கால்கள், காதுகள், கண்கள், புருவங்கள் என எதுவும் மிகத் துல்லியமாக, ஒரே அளவாக இருப்பது இல்லை. அப்படித்தான் இதுவும். இதற்காகப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பிரா சைஸை எப்படிக் கண்டுபிடிப்பது?

கடைக்காரரிடம் போய், நம்முடைய சைஸ் என்ன என்று கேட்பது தர்மசங்கடமான விஷயம். கடையில் எண்ணற்ற டிசைன்களில் அளவுகளில் பிராக்கள் கிடைக்கின்றன. புதிதாக அணியும் இளம்பெண்களுக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தும். பொதுவாக 28, 30, 32 என்ற அங்குல அளவுகளில் பிரா கிடைக்கும். அதுபோலவே ஏ,பி,சி,டி என்ற நான்கு கப் சைஸ்களில் பிரா கிடைக்கும். உதாரணத்துக்கு 34 அங்குல அளவு என்பது உடம்பின் 'பெல்ட் சைஸ்’ எனப்படும்.

பெல்ட் சைஸ்:

குழம்ப வேண்டாம். மார்பகத்தின் கீழே டேப்பினால் உடம்பின் சுற்றளவை அளக்க வேண்டும் (படம்). உங்கள் உடம்பு சுற்றளவின் அங்குல அளவு ஒற்றைப்படை எண்ணாக இருந்தால், அதனுடன் ஐந்து அங்குலத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு உடல் சுற்றளவு 29 அங்குலம் என்றால்... 29 5=34.

ஒருவேளை உங்கள் உடம்பு சுற்றளவின் அங்குலம் இரட்டைப் படையில் வந்தால், ஆறு அங்குலத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு உடல் சுற்றளவு 28 அங்குலம் என்றால்... 28 6=34.

அடுத்து கப் சைஸ்...

உங்கள் உடல் சுற்றளவை உங்கள் மார்பகத்தின் மேல் வைத்து அளக்கவும். (படம்). இந்த அளவு 30 அங்குலம் என்று கொள்வோம்.

பெல்ட் சைஸைவிட இரண்டு அங்குலம் வரை வித்தியாசம் இருந்தால் கப் சைஸ் A. 2 - 4 என்றால் கப் சைஸ் B. 5 - 6 அங்குல வித்தியாசம் என்றால் கப் சைஸ் C. 6 அங்குலத்துக்கு மேல் வித்தியாசம் என்றால் கப் சைஸ் D.

டேப்பை எடுங்கள்... பெல்ட் சைஸை பாருங்கள். கப் சைஸை கணக்கிடுங்கள். சரியான அளவுகளில் வாங்கி அணியுங்கள். கச்சிதமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பிரா அணிவது அவசியமா?

பிரா அணிவது குலுங்கல்களைக் கட்டுப்படுத்துகிறது. ஜாக்கெட், புடவை அணிபவர்களுக்குப் பெரும்பாலும் இது அவசியம் இல்லை. மற்றபடி, எடுப்பாகக் காட்டுவதற்காகவும் பெரிதாகக் காட்டுவதற்காகவும் பலர் விரும்புகிறார்கள். பெரிதாக இருக்கும் மார்பகம் கீழே சரிந்து தோற்றமளிக்கும். அதைத் தாங்கி நிறுத்தவும் பலர் பிரா அணிகிறார்கள்.

மார்பகம் என்ன அளவு இருக்க வேண்டும்?

ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பகத்தின் அளவு வேறு|படுகிறது. சிறியதாக இருக்கிறது என்பதோ, பெரியதாக இருக்கிறது என்பதோ பிரச்னையே இல்லை. அது அவரவர் உடல்வாகு பொறுத்தது.

ரகசியம் பகிர்வோம்