Published:Updated:

நலம் நலம் அறிய ஆவல்

நலம் நலம் அறிய ஆவல்

'புற்றுநோய் பற்றிய தவறான புரிதலும், நிறைய பயங்களும்  மக்கள் மத்தியில் உள்ளன.  நம் உடல் செல்லில் ஏற்படக்கூடிய அபரிமிதமான வளர்ச்சியே, புற்றுநோய்.  புற்றுநோய் ஏற்படுவதற்கு உடல், சுற்றுச்சூழல், ராசாயனம், கிருமித்தொற்று என்று பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவருக்குப் புற்றுநோய் இருந்தால், அது எந்த நிலையில் உள்ளது என்று கண்டறியப்படும். புற்றுநோய் பரவிய தன்மையைப் பொருத்து, நான்கு நிலைகளாகப் பிரிக்கிறோம்.

முதல் நிலையில் ஒருவருக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அதை எளிதில் குணப்படுத்திவிடலாம். இதுவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை என்றால்கூட, ஓரளவுக்குப் போராடி, புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். ஆனால், பெரும்பாலான நோயாளிகள் முற்றிய நான்காம் நிலையில்தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால் அவர்களை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைந்துவிடுகிறது. பயத்தைத் தவிர்த்து, சரியான காலகட்டத்தில், சரியான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் புற்றுநோயை முற்றிலுமாக வெல்லலாம்' என்கிறார் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் ராஜா சுந்தரம்.

'இருமல், சளி, மலம், சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல், நீண்ட நாட்களாகக் கட்டிகள், மூன்று வாரங்களுக்கு மேல் தொடர் இருமல், திடீரென உடல் எடைக் குறைவு ஆகியவை இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சிறப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். நம் வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மூலம் பெரும்பாலான புற்றுநோய்களைத் தவிர்க்கலாம்' என்று ஆலோசனை வழங்குகிறார் டாக்டர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நலம் நலம் அறிய ஆவல்

  புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?

நலம் நலம் அறிய ஆவல்

  மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவது எப்படி?

நலம் நலம் அறிய ஆவல்

  கருப்பைவாய் புற்றுநோய்க்குத் தடுப்பூசி ஏன் அவசியம்?

நலம் நலம் அறிய ஆவல்

  உணவுக் குழாய் புற்றுநோய் அதிகரிக்கக் காரணம் என்ன?

நலம் நலம் அறிய ஆவல்

  மலக்குடல் புற்றுநோய் ஏற்பட மேற்கத்திய உணவுப் பழக்கம் காரணமா?

நலம் நலம் அறிய ஆவல்

  புற்றுநோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அன்பு வாசகர்களே, ஜனவரி 16 முதல் 23ம் தேதி வரை தினமும் 044  66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், தவிர்க்கும் வழிகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் ராஜாசுந்தரம்

நலம் நலம் அறிய ஆவல்

'பருவ வயதில் முகப்பரு வந்தால், அதை சருமப் பிரச்னையாக மட்டுமே பார்க்கின்றனரே தவிர, எதனால் வருகிறது, எப்படித் தவிர்ப்பது என்பது பற்றி பெரிய அளவில் கவலைப்படுவது இல்லை.ஹார்மோன், முகத்தில் உள்ள வியர்வை சுரப்பியில் அடைப்பு, உணவுப்பழக்கம் என முகப்பரு வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எதனால் வந்தது என்ற காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம், முகப்பருப் பிரச்னையை எளிதில் தவிர்க்கலாம். சருமத்தில் ஏற்படக்கூடிய மற்றொரு பிரச்னை சருமம் கருத்துப்போதல். சூரியக் கதிர்வீச்சு, சுற்றுச்சூழல், உணவில் உள்ள பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள், மன அழுத்தம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கின்றன.' என்கிறார் காஸ்மெடிக் சர்ஜன் மற்றும் ஏஜ் மேனேஜ்மென்ட் நிபுணர் கிருத்திகா.

நவீன சிகிச்சைகள் பற்றி கூறுகையில் 'தற்போது 'என்.ஏ.டி பிளஸ்’ என்ற நவீன சிகிச்சைமுறை வந்துள்ளது. நோபல் பரிசு வென்ற தொழில்நுட்பம் சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த சிகிச்சை, சருமத்துக்கு மட்டுமின்றி, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்திறனையும் மேம்படுத்தக்கூடியது.

செல்கள் இயங்க ஆற்றல் தேவை. இதை, நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து பெறுகிறோம்.  இதில் குறிப்பிடத்தக்கது, வைட்டமின் பி3. வயது அதிகரிப்பு, உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களால் செல்களுக்கு இது கிடைப்பது பாதிக்கிறது. வைட்டமின் பி3யை செல்கள் பெறும் வகையில் மாற்றி உடலில் செலுத்துகிறோம். இதனால் உடல் சோர்வு, வலி, தளர்வு, நினைவாற்றல் குறைபாடு எனப் பல பிரச்னைகள் மறைகின்றன' என்கிறார் டாக்டர். 

நலம் நலம் அறிய ஆவல்

  முகப்பரு ஏற்படக் காரணம் என்ன?

நலம் நலம் அறிய ஆவல்

  முகத்தில் கருமை ஏற்படுவதைத் தவிர்க்க வழி உண்டா?

நலம் நலம் அறிய ஆவல்

  உடல் எடை குறைக்க, லைப்போசக்‌ஷன் தீர்வா?

நலம் நலம் அறிய ஆவல்

  தழும்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க, என்ன செய்ய வேண்டும்?

நலம் நலம் அறிய ஆவல்

  சருமம் மற்றும் ஆன்டிஏஜிங்கில் உள்ள நவீன சிகிச்சைகள் என்ன?

அன்பு வாசகர்களே, ஜனவரி 24 முதல் 31ம் தேதி வரை தினமும் 044  66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், சருமப் பிரச்னைகள், தவிர்க்கும் வழிகள், நவீன சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் காஸ்மெடிக் சர்ஜன் மற்றும் ஏஜ் மேனேஜ்மென்ட் நிபுணர் கிருத்திகா

பா.பிரவீன் குமார்

படம். எம்.உசேன்