Published:Updated:

"நம்பிக்கையா ஒரு வார்த்தை...”

மதுரை இலவச மருத்துவ முகாமிலிருந்து..

மதுரையில் டாக்டர் விகடனும் குரு மருத்துவமனையும் இணைந்து கடந்த ஜனவரி 4ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினோம்.

"நம்பிக்கையா ஒரு வார்த்தை...”

பொது மருத்துவம், இதயம், புற்றுநோய், குழந்தையின்மை, மனநலம், சிறுநீரகம், ஈ.என்.டி, எலும்பு மூட்டு, ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை, பல் மருத்துவம் எனப் பல்வேறு துறையின் மருத்துவர்களும் மக்களின் நாடி பிடித்து, நோய்களைக் கண்டறியக் காத்திருந்தனர். காலை 9 மணிக்கே நல்ல கூட்டம். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் ரத்தத்தில் சர்க்கரை, ரத்த அழுத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. தேவைப்பட்டவர்களுக்கு இ.சி.ஜி, ஸ்கேன், டாப்ளர், ஹார்மோன், பயாப்சி உள்ளிட்டப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முகாமுக்கு வந்திருந்த மதுரை, சாந்தி நகரைச் சேர்ந்த ஜான்சி, 'பல வருஷமா நான் தொண்டை அலர்ஜியினால் ரொம்ப அவதிப்பட்டேன்.  சிகிச்சைக்காக நிறைய ஆஸ்பத்திரிகளுக்குப் போனேன். எங்குமே இது குணப்படுத்தக்கூடியதுனு சொல்லலை. டாக்டர் விகடன் புத்தகத்தைப் பார்த்துட்டு இங்கே செக்கப் பண்ண வந்தேன். ஈ.என்.டி டாக்டர் பரிசோதிச்சுட்டு, தொண்டையில் புண் இருக்கு,  இதை 80 சதவிகிதம் குணப்படுத்திடலாம்னு உறுதியா சொல்லியிருக்கார்.  

"நம்பிக்கையா ஒரு வார்த்தை...”

நம்பிக்கையான இந்த ஒரு வார்த்தையே போதும்... குணமாயிடும்னு தெம்பு வருது' என்றார். குரு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் கூறுகையில், 'முகாமுக்கு வந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு 10 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்தது. அல்சராக இருக்கும் என்று நினைச்சு மருந்துகளை எடுத்துட்டு வந்திருக்கிறார். அவரை பரிசோதித்துப் பார்த்ததில், அவருக்குப் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிந்தது. அதற்கான சிகிச்சை ஆலோசனைகளை வழங்கினோம். இதுபோல நிறையப் பேருக்கு இதயநோய், மூட்டுவலி, தைராய்டு பிரச்னை என்று கண்டறிந்தோம். இந்த இலவச மருத்துவ சேவை ஏழை, எளிய மக்களுக்குப் பேருதவியாக இருக்கிறது என்பது கண்கண்ட உண்மை' என்றார். பரிசோதனைக்கு அதிகம் செலவாகும் என்று எண்ணியே, மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கும் ஏழை மக்களுக்கு, இந்த இலவச மருத்துவ முகாம், ஒரு வரப்பிரசாதம்.

இ.அமல சாந்தி, ப.சூரிய ராஜ்,

சி.சந்திர சேகர், சே.சின்னத்துரை

படங்கள்: மீ. நிவேதன்,  நா.ராஜமுருகன்