Published:Updated:

இளமைக்கு... அன்னாசி வாழை ஜூஸ்!

டி.கிருஷ்ணமூர்த்தி, சிஃப் டயட் கவுன்சிலர்

தேவையானவை: வாழைப்பழம் 1, அன்னாசிப்பழம்  3 துண்டுகள், ஐஸ் கட்டிகள் 3.

செய்முறை: வாழை மற்றும் அன்னாசிப் பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் அரைத்தால் ஜூஸ் ரெடி.  

இளமைக்கு... அன்னாசி வாழை ஜூஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பலன்கள்:  வைட்டமின் பி மற்றும் சி, பொட்டாஷியம், மக்னீஷியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்கள் இதில் அதிகம். கார்போஹைட்ரேட் இருப்பதால் உடனடி எனர்ஜி கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும். தினமும் இந்த ஜூஸ் குடித்து வந்தால், சருமம் இளமைப் பொலிவோடு இருக்கும்.

வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், கருவுற்ற பெண்கள், எடை குறைவாக இருப்பவர்கள், மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கல் உள்ளவர்களுக்கு ஏற்ற ஜூஸ் இது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸ் அருந்தக் கூடாது.

  பு.விவேக் ஆனந்த்

படம்: ச.ஹர்ஷினி