Published:Updated:

“ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆனா லைட்ஹவுஸ் மேல ஏறிடுவேன்..!” - மதன்பாப்பின் மகிழ்ச்சி ரகசியம்

“ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆனா லைட்ஹவுஸ் மேல ஏறிடுவேன்..!” - மதன்பாப்பின் மகிழ்ச்சி ரகசியம்

“ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆனா லைட்ஹவுஸ் மேல ஏறிடுவேன்..!” - மதன்பாப்பின் மகிழ்ச்சி ரகசியம்

“ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆனா லைட்ஹவுஸ் மேல ஏறிடுவேன்..!” - மதன்பாப்பின் மகிழ்ச்சி ரகசியம்

“ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆனா லைட்ஹவுஸ் மேல ஏறிடுவேன்..!” - மதன்பாப்பின் மகிழ்ச்சி ரகசியம்

Published:Updated:
“ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆனா லைட்ஹவுஸ் மேல ஏறிடுவேன்..!” - மதன்பாப்பின் மகிழ்ச்சி ரகசியம்

மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியோடு சிரிப்பதெப்படி?- விளக்குகிறார் சிரிப்பு மன்னன் நடிகர் மதன் பாப்!

இன்று பெரும்பாலான மனிதர்களை பீடித்து வதைக்கும் வாழ்க்கைமுறை நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மன அழுத்தம். வீட்டுச்சூழல், பணிச்சூழல், சமூகச்சூழல் என எல்லாச் சூழலுமே மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. 

இந்த பரபரப்பான வாழ்க்கைச்சூழலில், சிரிப்பு என்பதே பலபேரை விட்டு அகன்று விட்டது. சிரிப்பு மனதின் கண்ணாடி என்பார்கள். நன்கு சிரிக்கும் மனிதர்களை மன அழுத்தம் நெருங்கவே நெருங்காது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்மை விடுங்கள்... மிகவும் பரபரப்பான அரசியல்துறை, சினிமாத்துறைகளில் பணியாற்றுபவர்களின் நிலையை நினைத்தால் இன்னும் பரிதாபம்...  

ஒருபக்கம், மன அழுத்தத்தைப் போக்குவதாகச் சொல்லி கார்பரேட் சாமியார்கள் முளைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சிரிப்பதற்கென்றே அமைப்புகளை உருவாக்கி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் கொஞ்சம் பேர். 

 "மன அழுத்தத்தங்களைக் கடந்து, மனம் விட்டு சிரிக்க இவை தான் வழியா? நீங்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்களே... எப்படி?

அழகான, ஆழமான சிரிப்பையே தனக்கு அடையாளமாக மாற்றிக்கொண்ட நடிகர் மதன்பாப்பிடம் கேட்டோம். கேள்வியை அதே கலகல சிரிப்போடு உள்வாங்கிக்கொண்டு பேசினார் அவர். 

"வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்னு சொல்வாங்க. சிரிக்கும்போது உடம்போட எல்லா பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் போகும். உடம்பு இயல்பாவே உற்சாகமாயிடும். மனசுல எதையும் பூட்டி வெச்சுக்காம வெளிப்படையா இருந்தாலே பாதி பிரச்னை தீர்ந்திடும். 

எதையும் சுமந்துக்கிட்டு இருக்கக்கூடாது. மனசை எப்பவும் லேசா வெச்சிக்கணும். அதனாலதான் ஓஷோ சொல்வார், 'ஒருத்தர்  உங்களை ஒரு கன்னத்துல அறைஞ்சார்னா நீங்களும் திருப்பி அறைஞ்சிடுங்க'-ன்னு. அதை நீங்க பொறுத்துக்கிட்டீங்கன்னா, அந்த இடத்துல உங்களுடைய இயல்புத்தன்மைப் போய் தியாகி ஆயிடுவீங்க. தியாகியா இருக்க ஆரம்பிச்சீங்கனா, தொடர்ந்து நீங்க தியாகி வேஷம் போட வேண்டி இருக்கும். அப்புறம், அவர் எப்பவும் ரொம்ப ஈஸியா உங்களை அறைய ஆரம்பிச்சிடுவார். நீங்களும் தொடர்ந்து தியாகி வேஷம் போட்டுக்கிட்டே இருப்பீங்க. 

ஒரு கட்டத்துல இது உங்களுக்குத் தெரியாமலே உங்களை ஸ்ட்ரெஸ்ல தள்ளிடும். அப்புறம் அது திடீர்னு ஒரு நாள் வெடிச்சுக் கிளம்பும். அப்போ, அந்த நபரை உண்டு இல்லைனு பண்ணிடுவீங்க. அதோட அந்த நபர், உறவா இருந்தாலும் சரி, நட்பா இருந்தாலும் சரி, ஆபீஸ்ல கூட வேலை செய்யிறவரா  இருந்தாலும் சரி, அப்படியே நிலை குலைஞ்சு போயிடுவார். அதுக்கபுறம் அவருக்கும் உங்களுக்கும் உள்ள அன்பு, பாவனை எல்லாமே கெட்டுப்போயிடும். எதுக்கு இந்த சங்கடம்?

மனச்சோர்வு ஏற்படுறதுக்கு முக்கிய காரணமே இல்லாத ஒண்ணை இருக்குறதா கற்பனைப் பண்ணிக்கிடுறதுதான்... நம்முடைய இருப்பை (existence) மீறிய நினைப்பை வளர்த்துக்கிட்டு அதை நோக்கிப் போக முடியாம போகும்போது ஏற்படும் தவிப்பே மன அழுத்தத்துக்குக் காரணமாகுது. 

மன அழுத்தத்துடன் செய்யும் காரியம் தோல்வியில் முடியும்போது,  மனச்சோர்வு ஏற்படுது. இதனால எதிலேயும் விரக்தியும் வேதனையும் ஏற்பட்டு, எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்க்கும் மனோபாவம் வந்துடுது.  

வாழ்க்கையில 10 சதவிகிதத்தை நம்மால மாத்த முடியாது. அதை விதின்னு சொல்லலாம், எதிர்பாரத நிகழ்வுன்னும் வெச்சிக்கலாம். ஆனா, 90 சதவிகிதத்தை நம்மால மாத்த முடியும். ஒரு சம்பவத்தைச் சொல்றேன் கேளுங்க. 

ஒரு ஆபீசர், அடையாறு பார்க் ஓட்டல்ல ஒரு செமினார்ல பேசணும். ராத்திரி பூரா உட்கார்ந்து நோட்ஸெல்லாம் தயார் பண்ணி வைக்கிறார். காலையிலயே எல்லாம் எடுத்து வெச்சு அதுக்குனு வாங்கின புது கோட் எல்லாம் போட்டுக்கிட்டு டைனிங் டேபிள்ல உட்கார்ந்து சாப்பிடறார். அந்தசமயம் பார்த்து அவங்க வீட்டுக் குட்டிப்பெண்ணு சாஸ் பாட்டிலை எடுக்கிறேன்னு அவரோட சட்டை பேண்ட்லயெல்லாம் கொட்டிடுட்டா. உடனே அவர் ''சனியன் சனியன் இங்க  ஏன் வந்து தொலைச்சே''ன்னு கைய ஓங்க, குறுக்கே வந்த பொண்டாட்டி  தடுக்க, "என்னடி புள்ள வளத்து வைச்சிருக்க"ன்னு கேட்க, "உங்க புள்ளைதானே"-ன்னு  சொல்ல, பேச்சு ரசபாசமா போகுது. அவளை ஓங்கி ஒரு அறை விட்டுட்டு, வேற  டிரெஸைப் போட்டுக்கிட்டு கிளம்ப, குழந்தைக்கு ஸ்கூல் லேட்டாக, வழக்கமாக வர்ற ஆட்டோவை போகச் சொல்லியாச்சு. 

அதுக்கபுறம் அவளைக் கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு செமினாருக்கு வேகமா போனா, ஓவர் ஸ்பீடுன்னு டிராபிக் போலீஸ் மடக்கி ஃபைன் போட, அந்த அளவு  பணம் கையில இல்லாததால, இருந்த காசை லஞ்சமா கொடுத்துட்டு ஓட்டலுக்குப் போனா கிட்டத்தட்ட செமினார் ஆரம்பிக்கப்போற நிலைமை. 

அப்போதான் ஞாபகம் வந்துச்சு... எடுத்த நோட்ஸையெல்லாம் டேபிள்லயே வெச்சுட்டு வந்துட்டோம்ங்கிற ஞாபகம். அப்புறம் ஒருவழியாக ஞாபகத்துல இருந்ததைப் பேசி ஒப்பேத்தியாச்சு. வீட்டுக்கு வந்தா, வீட்டுல லைட்டுகூட போடாம பொண்ணு ஒருபக்கம் பொண்டாட்டி ஒருபக்கம்னு உக்கார்ந்து இருக்காங்க. மெள்ள பேசி சமாதானம் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆச்சு.

இந்த சம்பவத்தைப் பாருங்க... சாஸ் கொட்டின உடனே, 'என்னடா குட்டி இப்படி பண்ணிட்டே... பரவாயில்லே'னு வேற டிரெஸ்சைப் போட்டுக்கிட்டு கிளம்பி இருந்தா, பிரச்னை அங்கேயே முடிஞ்சிருக்கும். நாள் பூரா தொடர்ந்திருக்காது. அதனாலதான் சொன்னாங்க, How you make it?-ங்கிறதைவிட How you take it?-ங்கிறதுதான் முக்கியம்னு.     

முன்னெல்லாம், சில சமயத்துல எந்த வேலையும் இல்லாம இருப்பேன். சிலநேரங்கள்ல பார்த்தோம்னா, ஒரே சமயத்துல சினிமா ஷூட்டிங், ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சி அரங்கேற்றம்,  ரிகர்ஸல்னு ரொம்ப பிஸியாக இருக்கும். ஸ்பான்ஸர்ஸ்ல சில பேர் கடைசி நிமிடத்தில வெளியில் போவாங்க. சிலபேர் புதுசா உள்ள வருவாங்க. அதுக்குத் தகுந்த மாதிரி ப்ரமோ, போஸ்டர், டிக்கெட் எல்லாத்தையும் மாத்தவேண்டி வரும்.

இதுல யாராவது சொதப்பினாங்கனா மாற்று ஏற்பாடாக யாரைவெச்சிக்கிறதுனு இருக்கும். இதுக்கு நடுவுல ஏற்கெனவே நடிச்ச படத்தோட டப்பிங் இருக்கும். குறுக்கே உறவினர்களின் குடும்ப நிகழ்ச்சிகள் இருக்கும். அதையும் அட்டெண்ட் பண்ணனும்னு இப்படி ஏகப்பட்ட வேலைகள்  இருக்கும். 

இந்தமாதிரி நேரத்துல வேலைகளை லிஸ்ட் அவுட் பண்ணுவேன். அதுல முக்கியத்துவம் கொடுத்து வேலைகளை வேகமா செய்வேன். 

ரொம்ப ஸ்ட்ரெஸா இருந்ததுன்னா லைட் ஹவுஸ்லேர்ந்து நேப்பியர் பாலம் வரைக்கும் நிக்காம  வேகமா  எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வேகமா நடப்பேன். நடந்து முடிஞ்சதும் பளீச்னு ஒரு ஐடியா வரும். 

சில சமயம், லைட் ஹவுஸ் மேலே ஏறி நின்னுப் பார்ப்பேன். கீழ போற பெரிய பெரிய கிரேன் கூட சின்னதா எறும்பு மாதிரி தெரியும். அப்படியே வானத்தையும், பக்கத்துல இருக்கிற கடலையும் பார்ப்பேன். நாம நம்ம பிரச்னை எல்லாமே ஒண்ணும் இல்லனு இறங்கிடுவேன். ஆனா, இப்போ அனுபவத்துல ஒரு நிதானம் வந்துடுச்சு. நம்முடைய மனசே நமக்கு நண்பானாயிடுச்சு. அவனே நம்மகூட பேசிக்கிட்டே இருக்கிறான். அதானாலதான் இப்போ ஓரளவு ஸ்ட்ரெஸ் இல்லாம சந்தோஷமா எதையும் செய்யவும் முடியுது..."

வழக்கமான சிரிப்போடு முடிக்கிறார் மதன்பாபு. அந்த சிரிப்பில் நமக்கான வெளிச்சம் இருக்கிறது! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism